Advertisements

இந்த மூன்று பொருளையும் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் உங்களை நெருங்காது…

இன்று உலக சர்க்கரை நோய் தினம். உலக அளவில் இன்று அனைவரையும் அச்சுறுத்தும் விஷயமாக இருப்பது இந்த சர்க்கரை நோய் தான். ஏனென்றால் சர்க்கரை வந்துவிட்டாலே அடுத்தடுத்து ஒவ்வொரு நோயாக மாரடைப்பு வரை கொண்டு வந்து விட்டுவிடும்.

சர்க்கரை நோயின் தலைமையிடமாகவே இந்திய மாறிவிட்டது என்று சொல்லுமளவுக்கு சர்க்கரை நோய் நம்மடைய நாட்டில் மிக வேகமாகப் பவிவிட்டது. சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றின் படி, கடந்த 20 வருடங்களில் கிட்டதட்ட 55 சதவீதம் சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில் மட்டும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

காரணம்

உலக அளவில் குறிப்பாக, இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் விகிதம் தாறுமாறாகப் பெருகியிருப்பதற்குக் காரணம் மாறிவிட்ட வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகள் தான்.

என்னதான் மாத்திரை, மருந்துகள் என தினமும் எடுத்துக் கொண்டாலும் அவை சர்க்கரையைக் கட்டுக்குள் தான் வைத்திருக்குமே ஒழிய தீர்க்காது.

உணவு முறைகள்

அதேபோல், அந்த மருந்துகள் யாவும் சர்க்கரை நோய் வந்தபின்பு செய்யும் சிகிச்சைகள். ஆனால் வருவதற்கு முன்னாலே கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால், அதற்கு உணவு முறை மூலம் தான் தீர்வு காண முடியும். சர்க்கரையை கட்டுக்குள் வைக்க நம்முடைய முன்னோர்கள் ஏராளமான உணவுமுறைகளை பின்பற்றி வந்துள்ளனர். அதில் மிக முக்கியமான ஒரு பொருள் பூண்டு. இன்று உணவில் பூண்டு இருந்தால் நாம் ஒதுக்கிவிடுகிறோம். ஆனால் பூண்டை கீழ்வருமாறு செய்து சாப்பிட்டால் சர்க்கரை இல்லாதவர்களின் பக்கம் அண்டாது. சர்க்கரை ஏற்களவே இருந்தால் கட்டுக்குள் வரும்.

பூண்டு

பூண்டு பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு உணவுப் பொருள் ஆகும். தினமும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வது பல்வேறு விதங்களில் நமக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது. இதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் பூண்டை எப்படி பயன்படுத்தினால் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதிலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பூண்டு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

பாலுடன்

பூண்டு பல் 10 தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு கப் பாலில் போட்டு பூண்டு ஓரளவு வேகும்வரை பாலைக் காய்ச்சினால் பூண்டு வெந்து பாலிலேயே கரைந்து விடும். பின் அந்த பால் வெதுவெதுப்பான பின், தினமும் தூங்கச் செல்லும்முன் குடிக்க வேண்டும்.

பூண்டின் குணம் பாலில் இறங்கியதும் பால் லேசான கசப்புத் தன்மையுடன் இருக்கும். அதுதான் உங்கள் ரத்த சர்க்கரை கட்டுக்குள் வைக்க உதவும்.

சிறுவர்களுக்கு

இந்த பூண்டு பாலை சிறுவர்களுக்குக் கொடுப்பதாக இருந்தால், கசப்பாக அவர்களால் குடிக்க முடியாது. ஆனால் சர்க்கரை சேர்க்கக் கூடாது. அதற்கு பதிலாக பனங்கற்கண்டு சிறிதளவு கலந்து கொடுக்கலாம்.

சர்க்கரைக்கு பதிலாக

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளை சர்க்கரையை கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது. அதற்கு பதிலாக பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பளை வெல்லம், பனங்கற்கண்டு ஆகியவற்றை சிறிய அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரத்த அழுத்தம்

இந்த பூண்டு வேகவைத்த பாலை தினமும் குடித்து வந்தால் சர்க்கரை நோய் மட்டுமல்லாது, மன அழுத்தம் மற்றும் உயர் ரத்த அழுத்தமும் குணமாகும்.

பூண்டு டீ

இஞ்சி டீ கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோலத் தான் பூண்டு டீயும். ஆனால் இதில் இஞ்சியும் சேர்க்க வேண்டும்.

வெந்தயப் பால்

பூண்டு பால் தயாரிப்பதைப் போலவே பூண்டுக்கு பதிலாக வெந்தயத்தை ஊறவைத்தும் சேர்த்துக் காய்ச்சி குடிக்கலாம். இந்த வெந்தயப் பால் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைக் கொடுக்கும்.

கருஞ்சீரகம்

நாட்டு மருந்து கடைகளில் கருஞ்சீரகம் கிடைக்கும். அதை கால் கிலோ அளவுக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அதில் சின்ன சின்ன கல், தூசி இருக்கும். அதனால் இதை நன்கு தண்ணீர் விட்டு, அலசிக் கொண்டு அதை வெயிலில் வைத்து காய வைத்துக் கொள்ளுங்கள். நன்கு காய்ந்ததும் மிக்சியில் போட்டு நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை காலை மற்றும் இரவு உணவுக்குப் பின் இரண்டு ஸ்பூன் அளவுக்கு எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, அதன்பின் ஒரு கிளாஸ் வெந்நீர் குடித்துவிட வேண்டும்.

இந்த பொடியை சாப்பிட்ட பின்பும், வெந்நீர் குடிப்பது மிக மிக அவசியம். இந்த முறையை தொடர ஆரம்பிக்கும் முன் ஒருமுறை உங்களுடைய ரத்த சர்கு்கரை அளவைப் பரிசோதியுங்கள். இந்த பொடியை ஒரு மாதம் சாப்பிட்ட பின், மீண்டும் சோதனை செய்யுங்கள். உங்களுடைய ரத்த சர்க்கரை அளவில் உண்டாகியிருக்கும் மாற்றத்தை நீங்களே நன்கு உணர்வீர்கள்.

இந்த உலக சர்க்கரை நோய் தினத்தில் இருந்தாவது சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வைப் பெறுங்கள். உங்களுடைய உணவு மற்றும் வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக மாற்றுங்கள்.

Advertisements

2 responses

  1. Useful information Thank you

%d bloggers like this: