Advertisements

Daily Archives: நவம்பர் 20th, 2018

மருந்தாகும் உணவு – தூதுவளை ரசம்

ருவர் வாழும் இடத்தில் உருவாகும் மூலிகைகள்தான், அவருக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தடுப்பதற்கான அடிப்படைத் தீர்வாக இருக்கும்’ என்கிறது ஆயுர்வேதம். அந்த வகையில், நம் ஊரைப் பொறுத்தவரையில் நம்மைச் சுற்றியுள்ள கொடி வகை மூலிகையான தூதுவளை நமக்கு ஆகச்சிறந்த மருந்து. இலை வகைகளில் சளி, இருமல் போன்ற தொந்தரவுகளுக்குப் பரிந்துரைக்கப்படும் ஆயுர்வேத மருந்து, கண்டங்கத்திரி. ‘கொடிவகை கண்டங்கத்திரி’தான் தூதுவளை.

Continue reading →

Advertisements

ட்வின்ஸ் நம்பிக்கைகள்… நிஜங்கள்!

ரட்டைக் குழந்தைகள் எப்போதும் ஆச்சர்யம்தான். எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம். இருவரும் ஒரே மாதிரி உடையணிந்திருக்கிறார்களா, இருவருக்கும் ஒரே மாதிரி தோற்றம் இருக்கிறதா என்று நுணுக்கமாக அவர்களை ஆராய்ந்துகொண்டிருப்போம். ஆனால், அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்குத்தான் தெரியும், அவர்களை வளர்த்தெடுப்பது எவ்வளவு சிரமம் என்பது.

Continue reading →

32 பல்…64 பிரச்னை…

சொத்தைப்பல், பல் கூச்சம், வாய் துர்நாற்றம், உடைந்த பற்கள், பற்கறை, சீரான அமைப்பில் இல்லாமை, நீரிழிவு நோயாளிகளுக்கான பல் பிரச்னைகள், முதியவர்களுக்கான பல் பிரச்னைகள், பிறவியிலேயே பற்கோளாறுகள், விபத்தின் காரணமாக பல் பாதிப்பு என 32 பல்லில்தான் எத்தனை எத்தனை பிரச்னை. இத்தகைய ஆரோக்கிய சீர்கேடுகளிலிருந்து பற்களின் நலன் காக்கும் எளிமையான வழிகள் குறித்தும், நவீன சிகிச்சைகள் குறித்தும் பல் Continue reading →

மழைக்கால மருந்து!

3

தூதுவளை

சளி, இருமல், காய்ச்சல் முதலான மழைக்கால உடல்நலக் கோளாறுகளை சமாளிப்பதற்கான எளிய வழி வகைகளில் தூதுவளையும் ஒன்று. அதற்குண்டான வாழ்வியல் நடைமுறைகளையும் பின்பற்றுவதில் மிகவும் தேர்ந்தவர்கள் ஆவார்கள். அதில் முக்கிய பங்காற்றுவது, ‘சிங்கவல்லி’ என்ற பெயரால் அழைக்கப்படும் தூதுவளை ஆகும். இதன் சிறப்புகள் பற்றிப் பேசுகிறார் சித்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.

Continue reading →

இந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா கேஸ் ஹைட்ரேட்ஸ்?

அப்போதெல்லாம் என்ன ஆனாலும், எண்ணெய் உற்பத்திக்காக அரபு நாடுகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு. ஆனால், தற்போது இவையெல்லாம் பழங்கதைகள்.

“2030-ல் கச்சா எண்ணெய், நிலக்கரிக்கு அடுத்து மூன்றாவது மிகப்பெரிய ஆற்றல் மூலமாக இயற்கை எரிவாயுதான் இருக்கும்” என சமீபத்தில் கணித்திருக்கிறது சர்வதேச ஆற்றல் மையம் (IEA). கடந்த நூற்றாண்டின் பொருளாதார மாற்றங்களில் கச்சா எண்ணெய்தான் மையமாக விளங்கியது. தற்போது அந்த மையம் இயற்கை எரிவாயுவை நோக்கி நகர்ந்துவருகிறது. இது உலக நாடுகளுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கும் பொருந்தும். இந்தியாவின் இந்த இயற்கை எரிவாயு புரட்சியில் அதிகம் பங்களிக்கும் விஷயமாக கேஸ் ஹைட்ரேட்ஸ் இருக்கும் எனக் கணிக்கின்றனர் விஞ்ஞானிகள். அப்படியென்றால் என்ன? இதுகுறித்து தெரிந்துகொள்வதற்கு முன்பு அமெரிக்காவின் Shale Boom பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.

Continue reading →