Daily Archives: நவம்பர் 21st, 2018

எடப்பாடி மீது கடுப்பான அமைச்சர்கள்!

ரபரப்பாக வந்த கழுகார், “நிவாரணப் பணிகளுக்காக நிறைய வேலைகள் இருக்கு… மடமடவெனக் கேளும்…” என்றபடித் தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார். “15-ம் தேதி நள்ளிரவில் புயல். 22 மாவட்டங்களில் பாதிப்பு என்றாலும் எட்டு மாவட்டங்களில் கடும் பாதிப்பு. புயலால் மக்கள் வேதனையில் துடித்துக்கொண்டிருந்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் அரசு விழாக்களில் பிஸியாக இருந்தார். கட்சியின் முக்கிய அமைச்சர்களும் நிர்வாகிகளும் போனில் எவ்வளவோ சொல்லியும், சொந்த ஊரில் விழாக்களை முடிக்காமல் வர முடியாது என்று சொல்லிவிட்டாராம். இதனால், டெல்டா பகுதியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு முதல்வர் மீது கடும் அதிருப்தியாம். ‘இங்கே மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்… அமைச்சர்களை மக்கள் ஓட ஓடத் துரத்துகிறார்கள்…  முதலமைச்சரோ, விழாக்களில் கலந்துகொண்டு ஆளுயர மாலை அணிந்து சிரித்துக்கொண்டிருக்கிறார்’ என்று முதல்வருக்கு நெருக்கமான இரண்டு அமைச்சர்களே வருத்தத்துடன் கமென்ட் அடித்திருக்கிறார்களாம். இதைத்தான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘முதல்வருக்கு இருப்பது இதயமா? இரும்பா?’ என்று கேட்டுள்ளார்.“நியாயம்தானே?”

Continue reading →

காய்ச்சலை அலட்சியப்படுத்த வேண்டாம்!

ஆண்டுதோறும், இந்தப் பருவத்தில் தவறாமல் வருவது, டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல். வைரஸ் தொற்றினால் ஏற்படும் இந்த காய்ச்சல்களின் அறிகுறிகள் நமக்குத் தெரியும். அப்படியும், ஏன் இறப்பு எண்ணிக்கை கூடுகிறது… இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
டெங்கு

Continue reading →

ஹேர் கலர் அலர்ஜியை ஏற்படுத்துமா?

ஹேர் கலரிங் செய்வதற்கு முன் இவற்றை எல்லாம் கவனியுங்கள்…

* ஹேர் கலர் அலர்ஜி ஏற்படுத்துமா என டெஸ்ட் செய்யுங்கள்.

* ஹேர் கலரில் சிறிதளவை எடுத்து டெவலப்பருடன் சேர்த்துக் கலக்குங்கள். காது ஓரத்தில் சிறுபகுதி முடியில் மட்டும் தடவி அலசுங்கள். 48 மணி நேரத்துக்குப் பிறகு அந்த இடத்தில் எரிச்சல், தடிப்பு, அலர்ஜி எதுவும் இல்லை என்றால் உபயோகியுங்கள்.

கலரிங் செய்வதற்கு முன்பும் சுத்தம் அவசியம்

Continue reading →

தூங்கும் போது அதிக குறட்டைக்கு தீர்வு!

வாயில் அதிக வறட்சி ஏன் ஏற்படுகிறது மூன்று ஆண்டுகளாக எனக்கு எச்சில் சுரப்பதில்லை. எனக்கு 55 வயதாகிறது. இதுவும் ஒரு காரணமாக இருக்குமா
வாயில் அதிக வறட்சி தன்மை எச்சல் சுரக்கும் ‘சலைவரி கிளான்டின்’ செயலிழப்பை காட்டுகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. உதாரணமாக ‘ஆட்டோஇமியூன் டிசாடர்’ எனும் நம் உடம்பில் உள்ள அணக்கள், நம் உடம்பின் எதிர்ப்பு சக்தியை தெரிவிக்க பல வழிகளில் அதன் வெளிப்பாடுகளை கொண்டிரு்கும். அதில் ஒன்று வாயின் வறட்சி தன்மை. இதில் கண்ணின் வறட்சி தன்மையும் சேர்ந்து இருக்கலாம்.
இரண்டாவதாக சர்க்கரை நோய்க்கு ரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சில சமயங்கிளல் கல்லீரல் கணையம் சம்பந்தமான தொந்தரவுகளும் வாயில் வறட்சியை ஏற்படுத்துகின்றன.

Continue reading →

செல்போனை குழந்தைகளிடமிருந்து தள்ளி வையுங்கள்… `அப்செஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர்’ பாதிக்கலாம்!

செல்போன் இல்லாத ஒரு வாழ்க்கையை கற்பனைகூட செய்யமுடியாது. அந்தளவுக்கு அது நம் வாழ்க்கையை ஆக்கிரமித்துவிட்டது. வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் செல்போனோடுதான் இருக்கிறார்கள். குறித்த நேரத்தில் சாப்பிடுவதில்லை. உறங்குவதில்லை.பல பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.

Continue reading →