Advertisements

Daily Archives: நவம்பர் 22nd, 2018

ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கான பல் சிகிச்சை!

எனக்கு குளிரில் வெளியே சென்றால் பல் வலியும் கூச்சமும் வருகிறது. சாதாரணமாக குளிர் காலத்தில் பல வலி அதிகம் வருமா? இதனை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்?
நமது பற்களுக்கு இயற்கையாகவே தட்ப வெப்ப நிலைகளை ஏற்றுக் கொள்ளும் திறன் உள்ளது. நமது பற்கள் 70 டிகிரி செல்சியஸ் கொண்ட சூடான காபியையும், 1.5 டிகிரி செல்சியஸ் கொண்ட குளிர்ந்த நீரையும் தாங்கும் சக்தி கொண்டவை. குளிர் காற்றில் நிற்கும் பொழுதோ குளிரில் வெளியே செல்லும் பொழுதோ, இந்த தட்ப வெப்பம் மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக மாறும். அப்பொழுது பற்களின் மேல் ஒரு வித அழுத்தம் ஏற்படும். நாளடைவில் இந்த அழுத்தம் பற்களுக்குள் கண்ணுக்கு தெரியாத அளவிலான விரிசல்களை உண்டாக்கும்.

Continue reading →

Advertisements

சார்ந்திருப்பது சரியில்லையே!

பெண்களுக்கு பக்கவாதம் வருவதற்கான அபாயத்தை, பல வகைகளாகப் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. கர்ப்பக் காலத்தில் வரும் சர்க்கரை பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், உடம்பில் அதிகம் நீர் கோர்ப்பது, இவையெல்லாம் பெண்களுக்கு பக்கவாதம் வருவதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்தும். அடுத்து, ‘மெனோபாஸ்’ எனப்படும் மாதவிடாய் நிற்கும் பருவத்தில் உள்ள பெண்களுக்கும், அபாயம் அதிகமாக உள்ளது.மாதவிடாய் காலத்தில், அதிகமாக சுரக்கும், ‘ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்’ பெண்களுக்கு பாதுகாப்பு கவசமாக உள்ளது. மாதவிடாய் முடியும் பருவத்தில் அல்லது முடிந்த பின், இந்த ஹார்மோன் சுரப்பு குறைவாக இருக்கும். இதனால், ஆண்களை ஒப்பிடும் போது, பக்கவாதம் வரும் அபாயம் பெண்களுக்கு இந்த பருவத்தில் அதிகம்.

Continue reading →

உணவுக்கு முன்… உணவுக்குப் பின்…

மருந்துச்சீட்டுகளில் உணவுக்கு முன், உணவுக்குப் பின் என்று குறிப்பிடுவதைப் போல இன்றைய உணவு முறையும் மாறிவிட்டது. ஓட்டல்களில் ஆர்டர் செய்த உணவு வரும் முன்பு, Starter என்ற பெயரில் எதையேனும் கொறிக்கவோ, உறிஞ்சவோ செய்கிறார்கள். அதேபோல் வயிறு நிறைய சாப்பிட்ட பிறகும் Dessert என்ற பெயரில் பல வகைகள் காத்திருக்கின்றன. பில் செலுத்தும் காசாளரின் டேபிளில் சீரகம், சோம்பு போன்ற டப்பாக்களிலும் வேறுவிதமான டெஸர்ட்டுகளை அள்ளி சாப்பிட்டு விட்டு கிளம்புகிறோம்.

Continue reading →