இவற்றை உங்கள் காதலிக்கோ (அ) நண்பருக்கோ கொடுக்காதீர்கள்..! 

ஏன் பயன்படுத்த கூடாது..?

நாம் பயன்படுத்திய ஒரு சில பொருட்களை நமக்கு பிடித்தவரிடம் கொடுத்தால் அது பல வகையான அரிய நோய்களை நமக்கும் நம்மை சார்ந்து இருப்போருக்கும் ஏற்படுத்தும் என ஆய்வறிக்கைகள் சொல்கிறது. இவை நாம் அன்றாடம் பயன்படுத்த கூடிய பொருட்களாகவே உள்ளன என்பதே மோசமான உண்மை.

சீப்புகள்

பொதுவாகவே இந்த பழக்கம் நம் அனைவருக்கும் இருக்க கூடிய ஒன்றாகும். நமது நண்பர் சீப்பை பயன்படுத்துவதும், நம் சீப்பை நமது நண்பருக்கு கொடுப்பதும் வழக்கமான பழக்கமாகும். ஆனால், இது போன்று பயன்படுத்தினால் ஒருவர் தலையில் உள்ள கிருமிகள் வேறொருவர் தலையிலும் ஒட்டி கொள்ளும். மேலும், இதனால் முடி கொட்டுதல், பொடுகு தொல்லை, சொறி போன்ற பலவித பிரச்சினைகள் உண்டாகும்.

ரேசர்ஸ்

இந்த பழக்கம் ஹாஸ்டல் அல்லது தனியாக ரூம் எடுத்து தங்கியுள்ள நண்பர்களிடத்தில் பெரும்பாலும் இருக்க கூடும். அதாவது, தாடி அல்லது மீசையை ஷேவ் செய்வதற்காக பயன்படுத்த கூடிய இந்த ரேசர்களின் மூலம் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவலாம். எய்ட்ஸ் கொண்ட ஒருவரின் ரத்தம் இதில் ஒட்டி கொண்டு நாம் இதை மறுபடி பயன்படுத்தும் போது லேசாக நமது தோலை கிழித்தால் கூட, இந்த நோய்களுக்கு பலியாகி விடுவோம்.

ஹெட்போன்

நாம் அதிகம் அன்பு கொண்டோரிடம் நமது ஹெட்போன்களை பரிமாறி கொள்வோம். ஒரு காதில் நீங்களும், மறு காதில் அவரும் வைத்து கொள்வோர். ஆனால், நமது காதில் உள்ள அழுக்குகள் நாம் பயன்படுத்திய ஹெட்போனில் இருக்கும். அவற்றை பிறர் பயன்படுத்தினால் அவர்களுக்கும் பாக்டீரியா தொற்று பரவ கூடும்.

டேயோடரண்ட்ஸ்

நமது அக்குள்களில் பயன்படுத்த கூடிய இந்த டேயோடரண்ட்களை பிறருக்கு எப்போதும் பகிராதீர்கள். ஒருவரின் தோலில் உள்ள பாக்டீரியா மற்றும் பல நுண் கிருமிகள் மற்றவரின் தோலிலும் ஒட்டி கொள்ளும். இதனால் உங்களின் அக்குல்களில் மேலும் அதிக துர்நாற்றம் அடிக்கும்.

உள்ளாடைகள்

அவசரத்தில் கூட உங்கள் நண்பரின் உள்ளாடைகளை மாற்றி போட்டு கொள்ளாதீர்கள். இது அவருக்கும் உங்களுக்கும் அந்தரங்க பகுதியில் நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும். குறிப்பாக ஹோஸ்டேலில் தங்குபவர்கள் இது போன்று செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஜாக்கிரதையாக இருங்கள்.

சொறி சிரங்குகள்

பெண்கள் பலர் இந்த தவற்றை செய்வார்கள். தங்கள் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்ஸ் போன்ற காஸ்மெட்டிஸ்களை தனது தோழிகளுடன் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், இது சொறி, சிரங்குங்களை ஏற்படுத்த கூடிய பாக்டீரியாக்களை பிறருடன் பரவ வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.

டவல்கள்

நாம் துடைத்த அதே துண்டில் நமது நண்பரும் துடைப்பார். இந்த அன்புமிக்க பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால், இந்த பழக்கம் பல விளைவுகளை ஏற்படுத்துமாம். ஒருவரது உடலில் உள்ள கிருமிகள் மற்றவரின் உடலிலும் ஒட்டி கொள்ள தொடங்குமாம். ஆதலால், இனி இவ்வாறு செய்யாதீர்கள்.

செருப்புகளும், ஷூக்களும்

நமது நண்பரின் ஷூக்களை கடன் வாங்கி பயன்படுத்தும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். ஒருவரின் ஷூக்களை கடன் வாங்கி பயன்படுத்துவது பலவித நோய் தொற்றுக்களை நமது உடலில் பரவ செய்யும். ஒருவரின் காலில் ஏற்பட கூடிய வியர்வை மற்றோருவரின் உடலில் மாறும் போது இந்த கிருமிகள் அவரின் உடலில் பரவ தொடங்கும்.

%d bloggers like this: