Advertisements

Daily Archives: திசெம்பர் 5th, 2018

கவலை தீர்க்க டைரி போதும்!

வலை… எல்லோரையும் எப்போதும் ஏதாவது ஒருவிதத்தில் வாட்டிக்கொண்டேயிருக்கிறது. ஆனால், `பெரும்பாலான நேரங்களில் உங்கள் கவலை தேவையற்றது’ என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். 85 சதவிகிதக் கவலைகள் நேர்மறையான விளைவுகளைக் கொடுப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. மீதமுள்ள 15 சதவிகித கவலைகளைக் கையாண்டவர்களில் 79 சதவிகிதம் பேர், நினைத்ததைவிட அவற்றைத் திறமையாகக் கையாண்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். தினமும் உங்கள் கவலைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தை மட்டும் செலவிடுங்கள் போதும் என்கிறது ஓர் ஆய்வு.

கவலைகளைக் கையாள்வது எப்படி?

Continue reading →

Advertisements

சிரிப்பு சிகிச்சை

சிரிப்பு… நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்; நம் உடல்நலத்தையும் பாதுகாக்கும். குழந்தைகள் ஆறு வயதுவரை ஒரு நாளைக்கு 300 தடவை சிரிப்பார்கள்; 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிப்பார்கள். ஆனால், இன்றைக்கு வாய்விட்டுச் சிரிப்பதை பெரும்பாலானோர் மறந்துவிட்டார்கள். சிரிப்பு ஒரு நல்ல மருந்து. மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மாற்றத்தை ஏற்படுத்த சிரிப்பு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்; வலியைக் குறைக்கும்; தளர்ச்சியைப் போக்கும்; மனஅழுத்தத்தில் இருந்து விடுவித்து, நம்மைப் பாதுகாக்க உதவும்; மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  இன்றைய அவசர உலகில் பல்வேறு சூழல்களில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. அது வேறு பல நோய்களை உண்டாக்குகிறது. குறிப்பாக, ரத்த

Continue reading →

காப்பீட்டிலும் உடல் பருமன் சேர்ப்பு!

உடல் பருமன் அதிகம் இருந்தால், 90 சதவீதம் சர்க்கரை கோளாறு, 70 சதவீதம் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், 50 சதவீதம் மாதவிடாய் தொடர்பான நீர்க்கட்டி,
குழந்தையின்மை பிரச்னைகள் வரும். பித்தப்பை பிரச்னை, துாக்கமின்மை, குறட்டை, சுவாசப் பிரச்னைகள் என்று, பல உடல் பிரச்னைகள் வருகின்றன. இதை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.

Continue reading →

பன்றிக்காய்ச்சலா… பயம் வேண்டாம்..

பன்றிக் காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது?
இன்றைய சூழ்நிலையில் சாதாரண காய்ச்சல் இருந்தால் கூட பன்றி காய்ச்சலாக இருக்குமோ என பதட்டமும், அச்சமும் மக்களிடம் நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. பன்றி காய்ச்சல் ஏற்படுத்தும் ‘எச்1 என்1’ என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக்கூற்றை அடிப்படையாக கொண்டு மனிதர்களை தொற்றக்கூடியவை. ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் இவ்வைரஸ் கிருமியானது காற்றின் மூலம் பரவி மனிதரை தாக்கிய பின் மனிதர்களின் உடலுக்குள் மரபணு மாற்றம் பெற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

Continue reading →