இந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்!

உங்கள் மேல் ஒருவர்

வளர்ந்துவிட்ட தொழில்நுட்பம், எந்நேரமும் உங்கள் மேல் ஒருவர் கத்தியுடன் அமர்ந்திருப்பதற்குச் சமம். உங்கள் முதலாளியினாலோ அல்லது உங்களுடைய கணினி பயன்பாட்டை கவனிப்பதற்காகவே ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டிருப்பார். பணியிட கணினியில் நீங்கள் செய்யும் எந்தவொரு தனிப்பட்ட தரவு அல்லது நடத்தையையும் சேகரிக்க முடியும். இதில் நீங்கள் செய்யும் கிளிக், தேடல், மின்னஞ்ல், சோஷியல் மீடியா, ஷாப்பிங் என ஒவ்வொன்றையும் கண்காணிக்க முடியும்.

இதுதான் தவறான செயல்

நம்மில் பெரும்பாலானோர் இணைய சேவையை பயன்படுத்திவிட்டு பின் ப்ரவுஸிங் செய்த ஹிஸ்டரியை கிளியர் செய்வதின் மூலம் அனைத்து ஆதாரத்தையும் அகற்றி விட்டதாக நினைத்துவிடுவர். இதுதான் தவறான எண்ணமும், செயலும். இவற்றைத் தனிப்பட்ட ஓர் மென்பொருள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஐடி வேலையா ?

பிற நிறுவனங்களைக் காட்டிலும் ஐடி துறைகளில் நீங்கள் என்னதான் உங்களின் ப்ரஸிஸிங் ஹிஸ்டரியை நீக்கிவிட்டாலும் உங்களுடைய கணினி பயன்பாட்டைக் கண்காணிக்க, குறிப்பாக மிகவும் கேள்விக்குரிய ஒன்றாக கருதப்படும் உங்களின் தேடல்களை கண்காணிக்கப் பல வழிமுறைகள் உங்களை அறியாமலேயே உள்ளன.

ரொம்ப தேடாதீங்க

பணியில் உள்ள நீங்கள் ஒரு விசயத்திற்காக எவ்வளவு நேரம் இணையத்தில் தேடலின் மூலம் செலவிடுகிறோம் என மனதில் கொள்ள வேண்டும். ஏதேனும், முக்கிய செய்தி அல்லது தனிப்பட்ட ஓர் விசயத்திற்காக இணையத்தில் தேடுவதை தவிர்க்க வேண்டும். அல்லது ஓரிரு நிமிடத்தில் அதனை தெரிந்துகொண்டு வெளியேறிவிட வேண்டும்.

இணையத்தில் ஊர் சுத்தாதீங்க

விடுமுறை நாட்கள், பார்ட்டிகள் அல்லது சுற்றுலாத் தலங்கள் குறித்து பெரும்பாலான நேரத்தை அலுவலக கணினியில் தேட செலவிடாதீர்கள். இதை உங்களது அருகில் இருக்கும் சக பணியாளரே ஏற்றுக் கொள்ளமாட்டார். அப்படியிருக்க உங்களுக்கு வேலை தந்த முதலாளி பார்த்தால் அவ்வளவு தான்.

டேட்டிங், உறவு தொடர்பான வலைத்தளங்கள்

ஹனிமூன் உள்ளிட்ட தனிப்பட்ட விசயங்களுக்காக எங்கே போகலாம் என்ற கூகுள் மேப்ஸ் தேடலே சிக்கல் தான். அப்படியிருக்க ஒருவேளை நீங்கள் டேட்டிங் அல்லது சாட்டிங் போன்ற பணிகளை உங்களின் ஆபிஸ் கணினியில் செய்தால் என்னவாகும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

வேலை வாய்ப்புத் தளங்கள்

தற்போது பணியாற்றும் நிறுவனத்தில் உங்களது வேலை பிடிக்கிறதோ இல்லையோ, முதலில் ஒரு புதிய வேலைக்காக உங்கள் அலுவலக கணினியை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம்.

சைட் பிஸ்னஸ்

ஒருவேளை நீங்கள் அலுவலகத்தில் பணியாற்றுவதைத் தவிர்த்து கூடுதலாக சொந்த வியாபாரத்தில் இயங்குபவராக இருந்தால், அது சார்ந்த எந்தவொரு தேடலையும் உங்களது ஆபிஸ் கணினியில் செய்ய வேண்டாம். சொந்த வியாபாரத்தை இயக்கும் போது பல ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை மறக்க வேண்டாம்.

ஆபாசமான இணையதளங்கள்

இதற்கு நீங்கள் மேதாவியாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை, ஊறுகாய் அளவு மூளை இருந்தாலே போதும். அலுவலக கணினில் ஆபாசமான வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுகிறீர்கள் என்றால் உங்களை விட முட்டாள் இங்கே யாரும் இருக்க முடியாது.

இவற்றை மனதில் வைத்து உங்களது அலுவலக கணினியை பயன்படுத்துங்கள். ஏனெனில் வளர்ந்துவிட்ட தொழில்நுட்பம் உங்களையே அழிக்கக் கூடியது. தவறாக கையாலும் போது மட்டும்.

%d bloggers like this: