Daily Archives: திசெம்பர் 8th, 2018

நோயாளிகளுக்கும் உரிமையுண்டு!

நோய்களின் பிடியிலிருந்து மீளவே மருத்துவர்களை நாடுகிறோம், மருத்துவமனை செல்கிறோம். மருத்துவரிடம் சென்று  பரிசோதித்தாலே, நமக்கு வந்த பிரச்னைகளில் பாதி சரியாகிவிட்டதாக நிம்மதியடைகிறோம். ஆனால், உண்மை நிலவரமோ அதிர்ச்சி அளிக்கிறது. உலகளவில் பத்து பேரில் ஒருவர், நோய்க்காகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தவிர, முறையான சுகாதார விதிமுறைகளை மருத்துவமனைகள் கடைப்பிடிக்காததால் ஆண்டுக்கு சுமார் 4.3 கோடி பேர் பாதிக்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது.

Continue reading →

நச்சுகளை நீக்க தண்ணீர் போதும்!

ணவு, நீரில் தொடங்கி நாம் சுவாசிக்கும் காற்றுவரை எல்லாவற்றிலும் மாசு நிறைந்திருக்கிறது. நம் உடலுக்குள் செல்லும் மாசு, கழிவுகளோடு கலந்து வெளியேறிவிடும். அவற்றில் சில கழிவுகள் மட்டும் உடலுக்குள்ளேயே தங்கி நச்சாக மாறிவிடுகின்றன. அப்படி உடலில் தங்கும் நச்சுகளை இயற்கையாக வெளியேற்றும் வழிகள்…

Continue reading →

சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங்! – அணி திரளும் அமைச்சர்கள்

ழையில் நனைந்து வந்திருந்த கழுகார், “நெல் ஜெயராமன் மறைவு, இயற்கை விவசாயத்துக்கே பேரிழப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர். கடைசி மூச்சுவரை அதற்காகவே பாடுபட்டார். அரசுத் தரப்பிலிருந்து அமைச்சர்கள் போய் மலர்வளையம் வைத்து மரியாதை செய்துள்ளனர். ஆனால், அவரது எண்ணப்படி இயற்கை விவசாயத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என்று சொன்ன கழுகார், சில நிமிடங்கள் மவுனம் காத்துவிட்டுத் தொடர்ந்தார். “சக அமைச்சர்கள் சிலரே தனக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது தெரிந்து, ஆடிப்போயிருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எப்போதும் இல்லாத அளவுக்குச் சாதிரீதியிலான உரசல்கள் அதிகரித்துவிட்டனவாம். சமீபத்தில் முக்குலத்தோர் மற்றும் வன்னியர் சமூகங்களைச் சேர்ந்த சில அமைச்சர்கள், அவர்களுக்கு நெருக்கமான பிரமுகர்கள் சிலர், சென்னையில் ஒரு பங்களாவில் சந்தித்தனர். ‘கரன்சி கொட்டும் முக்கியத் துறைகள் எல்லாம், முதல்வரின் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களிடம்தான் இருக்கின்றன. இதை இப்படியே விட்டால் நமக்கு எதிர்காலமே இருக்காது’ என்று ஆரம்பித்து, அந்தக் கூட்டத்தில் எதிர்ப்புப் புயல் கடுமையாக வீசியதாம்”

Continue reading →