Daily Archives: திசெம்பர் 10th, 2018

பல்லெல்லாம் மாணிக்கப் பல்லாகுமா?

சொத்தைப்பல், பல் கூச்சம், வாய் துர்நாற்றம், உடைந்த பற்கள், பற்கறை, சீரான அமைப்பில் இல்லாமை, நீரிழிவு நோயாளிகளுக்கான பல் பிரச்னைகள், முதியவர்களுக்கான பல் பிரச்னைகள், பிறவியிலேயே பற்கோளாறுகள், விபத்தின் காரணமாக பல் பாதிப்பு என நமக்கு இருக்கும் முப்பத்திரண்டு பல்லில்தான் முன்னூறு பிரச்னை.
Continue reading →

மழைக்கால சரும பராமரிப்பு

தொடங்கிவிட்டது வடகிழக்குப் பருவமழை. தமிழகத்துக்குப் போதுமான தண்ணீரை வழங்கும் மழையாக புகழப்படும் மழை இந்த ஆண்டில் சற்று கூடுதலாகவே இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள். வரும் டிசம்பர் வரையிலும் இம்மழைக்காலம் நீடிக்கும் என்பதும் தெரிந்ததுதான். இந்த பருவகாலத்தில் மழையை கொண்டாடத் தயாராகிவிட்ட நாம் கொஞ்சம் சருமப் பராமரிப்பைப் பற்றியும் அறிந்து கொள்வோம்…

Continue reading →

பாலூட்ட நேரமில்லையா? – வேலைக்குச் செல்லும் அம்மாக்களுக்கு ஆலோசனைகள்!

த்து மாதங்கள் கருவில் சுமந்த உயிர் கைக்கு வந்த பின்னர், அம்மாவுக்கும் குழந்தைக்குமான பந்தத்தை வலுவாக்குவதிலும், குழந்தையின் ஆரோக்கியத்திலும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் இன்றியமையாதது. அரசு நிறுவனங்கள் முதல் தனியார் நிறுவனங்கள்வரை இன்று பெண் ஊழியர்களுக்கு ஆறு மாதங்கள் மகப்பேறு விடுப்பு அளிப்பது, அவர்களுக்கான மகத்தான பரிசு. அதற்குப் பின்னர் பணிக்குத் திரும்பவேண்டிய சூழலில், பல அம்மாக்களால் குழந்தைகளுக்குச் சரிவர தாய்ப்பால் ஊட்ட முடியாமல் போகிறது அல்லது தாய்ப்பால் கொடுப்பதையே நிறுத்திவிடுகிறார்கள். ஒரு வயதுவரை குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டவேண்டியது அவசியம் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. எனவே, வேலைக்குச் செல்லும் தாய்மார்களும் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலூட்ட வழிகள் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் மனுலட்சுமி. 

இணை உணவை ஆரம்பிக்க வேண்டும்!

Continue reading →

ராஜயோகம் யாருக்கெல்லாம் அமையும்- ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன?

ஜோதிட சாஸ்திரத்தில் பல வகையான யோகங்கள் கூறப்பட்டிருக் கின்றன. எந்த ஒரு யோகமும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. அதிலும் ராஜயோகம் என்பது சிலருக்கு மட்டுமே ஏற்படும்.  அரசனாக, அதிகாரியாகப் பலரையும் ஆட்சி செய்யக்கூடிய அதிகாரம், லட்சத்தில் ஒருவருக்குத்தான்

Continue reading →

குழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்!

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும். ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது? என்ன சிகிச்சை?மகப்பேறு மருத்துவரான ஜெயந்தியிடம் கேட்டோம்…
திருமணத்துக்குப் பிறகு இயல்பான தாம்பத்தியம் இருந்தும், 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தரிக்காவிட்டால், அதற்கு மலட்டுத்தன்மை (Infertility) காரணமாக இருக்கலாம். இந்த குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்… பெண்ணும் காரணமாக இருக்கலாம். சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகள் என பொது காரணிகளும் இருக்கலாம்.மன அழுத்தம் குழந்தையின்மைக்குக் காரணமாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Continue reading →