பல்லெல்லாம் மாணிக்கப் பல்லாகுமா?

சொத்தைப்பல், பல் கூச்சம், வாய் துர்நாற்றம், உடைந்த பற்கள், பற்கறை, சீரான அமைப்பில் இல்லாமை, நீரிழிவு நோயாளிகளுக்கான பல் பிரச்னைகள், முதியவர்களுக்கான பல் பிரச்னைகள், பிறவியிலேயே பற்கோளாறுகள், விபத்தின் காரணமாக பல் பாதிப்பு என நமக்கு இருக்கும் முப்பத்திரண்டு பல்லில்தான் முன்னூறு பிரச்னை.

பிரசினைகளைத் தவிர்க்க சில ஸ்பெஷல் டிப்ஸ்!
*    பொதுவாகவே பல் ஆரோக்கியம் பாதித்தவர், பாதிக்காதவர் என இரு தரப்பினருமே 6 மாதத்திற்கு ஒரு முறை பற்களை சுத்தம் செய்தல், பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை மேற்கொள்ளுதல் போன்றவற்றை தொடர்ந்து மேற்கொள்ள வலியுறுத்துகிறோம். இது அவர்களின் பல் பாதிப்புக்காக மட்டுமின்றி, அதனால் ஏற்படக் கூடிய மற்ற நோய்களின் தாக்கத்தையும் தடுக்க உதவும்.

*    பல் சம்பந்தமான பிரச்னைகளுக்கு சாதாரண மருந்து மாத்திரைகளால் அளிக்கப்
படும் சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை பல்வேறு வழிகள் உள்ளது.

*    பல் சொத்தையின் காரணமாக பற்களில் துளை விழுகிறது. அதை அடைப்பதற்கு சிமென்ட், வெள்ளி, தங்கம் மற்றும் வேறு பல்  உலோகக் கலவைகளும், Composite resin என்னும் பிளாஸ்டிக் வகையைச்
சேர்ந்த பொருட்களும் வைத்து அடைக்கப்படுகின்றன.

*    பற்கள் உடைந்திருந்தால் அதன் நிறம் மாறிக் கொண்டே வரும். பற்களின் வேர்களைச் சுற்றி கிருமிகளும் பரவும். இதற்கு Root canal treatment அவசியம்.

*    பல்லில் ஏதேனும் ஒருபகுதி பாதிக்கப்பட்டிருந்தால் துல்லியமாக அதனை மட்டும் எடுத்துவிட்டு மற்ற பற்களின் நிறத்திலேயே பீங்கான் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஓர் உறை செய்து நிரந்தரமாக இருக்கும்படி பொருத்தி விடலாம்.

*    பற்களின் பெரும் பகுதி உடைந்திருந்தாலோ, பல்லை எடுக்கும் நிலை ஏற்பட்டாலோ, பல் எடுத்த இடத்திலேயே எலும்பில் ஒரு துளையிட்டு அந்த எலும்புக்குள் Titanium என்ற உலோகக் கலவையினாலான ஓர் அங்குல Sab Inner மேல் பீங்கானில் பல்லைப் போல ஓர் உறை செய்து நிரந்தரமாகப் பொருத்தி விடலாம். இதற்கு Implant Teeth என்று பெயர்.

*பற்களில் படியும் காறைகளினால் ஈறுகள் கெட்டு ரத்தம், சீழ் கசியும், வாய் துர்நாற்றம் ஏற்பட இந்த காறைகளும் ஒரு காரணம். தற்போது Ultrasonic Scaler எனப்படும் எலக்ட்ரானிக் கருவியைப் பயன்படுத்தி எனாமல் பகுதியைப் பாதிக்காமல் பற்களில் படிந்துள்ள காறை
மற்றும் கறைகளை நீக்கிவிடலாம். 

*    விபத்து காரணமாக தாடை உடைந்துவிட்டால், எலும்பின் மேல் உள்ள பற்களையும், கீழ் பற்களையும் சரியான நிலையில் வைத்து கம்பிகள் மூலம் கட்டி சரியான நிலையில் பொருத்திவிடலாம். எவர்சில்வர் தகடுகளைப் பொருத்தி நிரந்தரமாக வைத்து விடலாம். இந்த நவீன சிகிச்சை மூலம் உடனே இயல்பு நிலைக்குத் திரும்பி, எல்லோரையும் போல பேசவும் சாப்பிடவும் முடியும்.

*    நீரிழிவு நோயாளிகளுக்கு பல் பிடுங்கும் சூழல் வந்தால் அவர்களுடைய சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்திய பிறகுதான் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க
    வேண்டும்.

*    பற்கள் ஏற்றமும் இறக்கமுமாக இருந்தால் முகத்தின் அமைப்பு சீராக இருக்காது. இதற்கு Orthodontic appliance எனப்படும் க்ளிப் போட்டு சரி செய்யலாம்.

*80 வயதை கடந்த முதியவர்களுக்கு பல் செட் பொருத்துகிறார்கள். இதை கழற்றி, மாட்டிக் கொள்வது பலருக்கும் பிரச்னைக்குரியதாகவே இருக்கிறது. நகர்வது, உறுத்துவது, அசைவது, அவற்றுக்கடியில் உணவுத் துகள்கள் மாட்டிக் கொள்வது, திட உணவை கடிக்க முடியாமை போன்ற பிரச்னைகள் இதனால் ஏற்படுகிறது. இவர்களுக்கு செயற்கை வேர்கள் பொருத்தி, அறுவை சிகிச்சை மூலம் பற்கள் பொருத்தலாம்.

*    செயற்கை பல்லை அதன் இடத்தில் வலுவாக பொருத்துகிற Dental implants என்கிற நவீன மருத்துவம் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இந்த டெண்டல் இம்ப்ளாண்ட் மூலம் இழந்த பல்லின் இடத்தில் தாடைக்குள் நிரந்தரமாக பல்லைப் பொருத்த முடியும்.

*    பல் சிகிச்சைக்கு வழக்கமான எக்ஸ்ரே பரிசோதனை போதுமானதல்லாதபோது, Computed Tomography  பயன்படுத்தப்படும். சிறப்பு வகை எக்ஸ் ரே சிகிச்சையான இந்த CT பரிசோதனையின் மூலம் பற்களின் துல்லியமான அளவு, வேர்களின் அமைப்பு, நரம்பு பகுதி போன்றவற்றை துல்லியமாக கண்டுகொள்ள முடியும். பல் சிகிச்சை எக்ஸ்ரே முறையின் தற்போதைய லேட்டஸ்ட் Cone beam computed tomography.

*    டைட்டானியம் பல்லுக்கு வேர் மாதிரி செயல்படும். இந்த டைட்டானியம் பல் வேர் சிகிச்சையானது பற்களை இழந்தவர்களுக்கு
அளிக்கப்படுகிறது.

*    தற்போது பல் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நேர்த்தியாகவும் பாதுகாப்பாகவும் செய்து விட முடிகிறது. குறைந்த கால அளவில் மருத்துவமனையில் தங்காமல், சிகிச்சை பெற்று வீட்டுக்குத் திரும்பி விடலாம். டைட்டானியம் வேர் பொருத்திய உடனேயே அதற்கு மேல் செயற்கை பல்லையும் பொருத்தி விட முடியும்.

*    வாயை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை அடக்குதல், பாக்குகளை பயன்படுத்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

*    வாய் சுத்தமாக இல்லாவிட்டாலும், பற்கள் பழுதாகி இருந்தாலும் நமது உடலில் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு நமது உடல் ஆரோக்கியம் கெடலாம். ஆதலால், ஒருவர் தன் உடல் நலத்தைக் காக்க விரும்பினால் வாய் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளல் அவசியம்.

*    இன்றைக்கு பற்களை குறிவைத்து வண்ண வண்ண டூத் பேஸ்ட்டுகள் வருகிறது. அதில் ஜெல் இல்லாத சாதாரண பேஸ்ட்டுகளை தேர்ந்தெடுத்து, பட்டாணி அளவில் எடுத்துகொண்டு பல்துலக்கினாலே போதும்.

*    பற்கள் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலை எழுந்தவுடன் பல் துலக்குவதைப் போலவே, இரவு தூங்குவதற்கு முன்னும் பல் துலக்க வேண்டும். பல் துலக்கும்போது கடைவாய் பல்லிலிருந்து மூன்று மூன்று பற்களாக பிரித்து துலக்க வேண்டும். பற்களை மேலும் கீழுமாக துலக்குவதும் முக்கியம்.

%d bloggers like this: