ஜாலியா சம்பாதிக்கலாம், குறைந்த முதலீட்டில்..! எப்படின்னு தெரியுமா?

இன்றைய பொருளாதார நிலமை, வேகமாக இயங்கும் நம் உலகம் என அன்றாட வாழ்விற்காகவே இங்கே அனைவரும் ஓடிக் கொண்டு இருக்கிறோம். இன்று நாம் உழைப்பது நமக்காக மட்டுமின்றி நம்மைச் சார்ந்தவர்களுக்காகவும் உள்ளது. ஏதேனும் ஓர் காலகட்டத்தில் சிறிது ஓய்வெடுக்க நினைத்தாலும், அந்த நேரமே பெறும் பின்னடைவை நாம் சந்திக்க நேரிடும்.

ஜாலியா சம்பாதிக்கலாம், குறைந்த முதலீட்டில்..! எப்படின்னு தெரியுமா?

இப்படி, அன்றாடம் ஓடிக்கொண்டே இருக்கும் நாம் அவ்வப்போது லாபத்தையும் பார்க்க பல தொழில் நம் கைகளிலேயே உள்ளது. அதனை எவ்வாறு பயன்படுத்துவது, உங்களுக்கான பணி என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க…

சிந்தனை என்னும் முதலீடு

தொழில் தொடங்க வேண்டும் என்று நாம் நினைத்தாலும் முதலில் வரும் பிரச்சனையே மூலதனம் தான். இதற்குப் பயந்தே எந்த ஒரு காரியத்தையும் செய்யாமல் நாம் தயங்கி நின்றுகொண்டிருப்போம். மூலதனத்தின் மீது கூர்ந்த பார்வை செலுத்தினால் போதும் கண் முன்னே பல தொழில் உள்ளது. அதற்காக உங்கள் நேரத்தையும் உழைப்பையும் கொடுத்தாலே போதும்.

ஸ்மார்ட் வொர்க்

வேலைக்காரம் படத்தில் கூறுவதைப் போல கடின உழைப்பு தேவையில்லை, சரியான சிந்தனையுடன் செயல்பட்டாலே பெரிய லாபத்தை ஈட்டி விடலாம். இத்தகைய தொழில்களுக்கு அதிக அளவில் முதலீடு செய்ய தேவையில்லை, சிந்தித்து செயல்பட்டால் கூடுதல் லாபம் காண முடியும். எடுத்துக்காட்டாக வீட்டில் இருந்த படியே செய்யும் பல தொழிலில் அதிக முதலீடு தேவைப்படுவதில்லை.

பராமரித்தல்

குறைந்த அளவு முதலீட்டில் அதிக அளவு லாபம் தரக்கூடிய வேலைகளில் ஒன்று தொழில் உரிமையியல். அதாவது ஒருவர் நடத்தும் தொழிலின் ஒரு பிரிவை நீங்கள் உரிமையாகக் கொண்டு நடத்துவதே. இதற்காக நீங்கள் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டியது இல்லை. தேவையான அனைத்தையும் உரிமையாளர்களே கொடுத்து விடுவார். ஆனால், இவற்றில் வரும் பெருன்பான்மையான லாபம் உங்களுக்குத்தான்.

உள் அலங்காரம்

ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டை அழகாக வைத்துக்கொள்ள விரும்புவர். ஆனால், அதற்கான முறைகள் தான் அவர்களுக்குத் தெரியாது. அதுவும் வீட்டின் உள் அலங்காரம் என்பதை அனைவரும் விரும்புகின்றனர். இதற்கென தனியாக இருக்கும் வேலைதான் உள் அலங்காரம். இதன் மூலம் ஒருவர் தனது தனிப்பட்ட திறனை காண்பித்து அதன் மூலம் பணமும் சம்பாதிக்கலாம்.

புகைப்படக்கலை

அனைவருக்குள்ளும் ஒரு புகைப்படம் எடுக்கும் ஆற்றல் எப்பொழுதும் உள்ளது. அதற்குச் சான்று உங்கள் கையில் இருக்கும் செல்போன் தான். அழகான எதையாவது பார்க்கும் போது உடனே அதை புகைப்படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. இந்த ஆற்றலைக் கொஞ்சம் மெருகேற்றினால் போதுமானது. அதிக அளவில் லாபம் பார்த்துவிடலாம்.

விருந்து மற்றும் நிகழ்ச்சிக்குத் திட்டமிடுபவர்

இன்றைய பிஸியான காலகட்டத்தில் யாருக்குத்தான் விழா மீதான ஆர்வம் உள்ளது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, விழா ஜம்முன்னு நடக்கவேண்டும் தான் பெரும்பாலான வசதி படைத்தோர் கூறுகின்றனர். அதனை பயன்படுத்திக் கொள்வதே நம் வேலை. விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்குத் திட்டம் தீட்டி செயல்முறைப்படுத்துவதில் அதிக வேலை இருந்தாலும் அதிக லாபம் உண்டு. இந்த பிஸினஸ்ஸை செய்ய பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. ஆனால் அதிக அளவு லாபம். இதற்குப் பெரிய முதலீடு உங்கள் மூலைதான்.

உணவு

உணவுடன் உங்கள் ஆர்வத்தையும் சேர்த்தால் சுவையுடன் லாபத்தையும் பெற முடியும். உணவு தொழிலை நீங்கள் நடத்தும் முறையில் அதற்கான மூலத் தொகை நிர்ணயம் செய்யப்படுகின்றது. சிற்றுண்டி கடைக்கு பெரிய அளவில் செலவு இல்லை. இதுவே உணவு என்றால் சற்று கூடுதல் முதலீடு. ஆனால் அனைத்திற்கும் லாபமே.

வெப் டிசைனிங்

இண்டர்நெட், இந்த வளர்ச்சியடைந்த தொழில்நுட்ப உலகில் காற்றிற்கு அடுத்தபடியாக அதிகம் பரவி இருப்பது இண்டர்நெட் தான். இதில், வெப் டிசைனிங் தற்போது மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. மேலும், ஒவ்வொரு நிறுவனத்திற்கு அத்தியாவசியமானதாக உள்ளது. இணையத் தளத்தில் இதன் மூலம் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகின்றது. இதனைப் பயன்படுத்தி பல வலைத் தளங்கள் சிறப்பாகச் செயல் பட்டு வருகின்றது என்ற உண்மையை நாம் அனைவரும் அறிவோம். ஆகையால் வலை வடிவமைப்பின் மூலம் பலவித வேலைவாய்ப்பு முன்னேற்றத்தைப் பெற முடியும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்காது.

பேக்கரி

உலகில் பேக்கரி பொருட்களுக்கும், இனிப்பு சுவைக்கும் அடிமையாகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதன் சுவைக்காக ஏங்கும் மக்களுக்காக பேக்கரி தொழில் செய்தால் கண்டிப்பாக முன்னேற்றம் தான். அதற்கான அடிப்படை பொருட்களை வாங்குவது எளிமையான காரியம் தான். தொடக்கத்தில் பெரிய அளவில் ஆரம்பிக்காமல் சிறிய அளவில் ஆரம்பித்தால் பெரிதாக செலவில்லாமல் அதிகமான லாபத்தைப் பெற முடியும்.

ஒரு மறுமொழி

  1. ஜி இந்த கிரிப்டோ கரண்சி தொழில் தொடர்பான முதலீடுகள் மற்றும் இதன் தனித்துவம் எந்தெந்த நாணயம் நல்ல நாணயம் இதுபற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள் ஜி

%d bloggers like this: