வருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா?

எனக்கு ஒரு சன்.. இரண்டு பெண் ஆனால் கைக்கொடுப்பது பென்சன். இந்த வரிகள் கேட்டவுடன் சிரிப்பை வரவைத்தாலும் இன்றைய உலகில் பலருக்கும் நடப்பது இதுதான். பிள்ளைகளை நம்பி வாழும் பெற்றோர்களை விட பென்சனை நம்பி வாழும் பெற்றோர்களே அதிகம்.

பென்சன் திட்டம்:

சரி..சிறந்த பலனை அளிக்கும் பென்சன் திட்டத்தை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் பென்ஷன் திட்டங்களில் ஒன்று எல்ஐசி ஜிவன் சாந்தி மற்றொன்று என்பிஎஸ். இந்தத் திட்டங்களில் முதலீடு செய்தால் தொடர்ந்து பென்ஷன் பெற முடியும். இரண்டு திட்டங்களும் வெவ்வேறு வகையில் முதலீட்டாளர்கள் பயன் அளிக்கிறது.

எல்ஐசி ஜிவன் சாந்தி திட்டத்தில் ஒரே அடியாக அதாவது ஒற்றைப் பிரீமியாக ஒரு பெறும் தொகையினை முதலீடு செய்து அதனைப் பென்ஷனாகப் பெறுவது ஆகும். இந்தத் திட்டம் கீழ் முதலீடு செய்யும் போது ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகை திரும்ப வழங்கப்படும்.

ஜீவன் சாந்தி திட்டம் கீழ் 60 வயதில் முதலீடு செய்து மாதம் 50,000 ரூபாய் பென்ஷன் வேண்டும் என்றால் இந்தத் திட்டத்தில் 70 லட்சம் ரூபாயினை முதலீடு செய்ய வேண்டும். இதுவே 50 வயதில் பென்ஷன் வேண்டும் என்றால் 80 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதுவே 40 வயது என்றால் 86 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டம் கீழ் முதலீடு செய்யக் குறைந்தபட்ச வயது 30 ஆகும்.

இதே எல்ஐசி ஜீவன் சாந்தி திட்டத்தில் முதலீட்டினை தொடங்கிய 20 ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் 50,000 ரூபாய் பென்சன் வேண்டும் என்றால் 30 வயது ஆகும் போது 29 லட்சம் ரூபாயினை முதலீடு செய்ய வேண்டும். இதுவே 50 வயதாகிறது என்றால் 33 லடம் ரூபாயினை முதலீடு செய்ய வேண்டும்.

%d bloggers like this: