தி.மு.க-வுக்குத் தாவுகிறாரா செந்தில்பாலாஜி? – பரபரக்கும் கரூர் அரசியல்!
அ.ம.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குத் தாவப் போகிறார் செந்தில்பாலாஜி’ என்பதுதான் இப்போது கரூர் பரபரப்பு. டிசம்பர் 9-ம் தேதி இரவு தன் ஆதரவாளர்களுடன் அவர் ரகசிய ஆலோசனையில் ஈடுபட, விவகாரம் விறுவிறுப்பாகிறது.
சசிகலா, எடப்பாடிக்கு செக்?! – ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை…
வழக்கத்தைவிட, வேகமாக வந்த கழுகார், ‘‘விகடன் விருது நிகழ்ச்சிகளுக்காக நிறைய மீட்டிங் இருக்கிறது’’ என்றபடியே அவசர அவசரமாகத் தகவல்களை அடுக்கினார்.
‘‘சாராய ஆலை பணம், சுவிஸ் வங்கி ஆவணங்களில் மன்னார்குடி குடும்பம்… குறிப்பாக, சசிகலா பெயர் மீண்டும் அடிபடுகிறது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அதை மனதில் வைத்தே வருமானவரித் துறை மூலமாக அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு.’’‘‘விளக்கமாகச் சொல்லும்.’’
தூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா? – காரணம் இதுதான்!
நைட்டு நல்லாதான் தூங்குனேன், ஆனாலும் டயர்டாவே இருக்கு . முதுகு வேற வலிக்குது…” காலையில் அலுவலகத்தில் கம்யூட்டரை ஆன் செய்வதற்கு முன்பாக பக்கத்தில் இருப்பவர்களிடம் பெரும்பாலானோர் சொல்லும் வார்த்தைகள் இவை.
சாப்பிட்ட உடன் செய்யக்கூடாத சில செயல்கள் என்ன தெரியுமா…!
சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என நம் வீட்டில் உள்ளவர்கள் செல்லுவதுண்டு. அவை எந்த பொருள்கள் என்று பார்ப்போம். ஏன் அவ்வாறு செய்யக்கூடாது என்பது பற்றியும் பார்ப்போம்.
Continue reading →
தொடர்ந்து ஏசி அறையில் இருப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்…!
எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. இதனால் வைட்டமின் டி குறைபாடு உருவாகும். இந்த வைட்டமின், கருவுறுதலில் ஆரம்பித்து இதயம், நுரையீரல் சீராக இயங்குவது வரை தேவையான ஒன்றாகும். இது கிடைக்காமல் போனால் எலும்புகள் பலவீனமடையும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவை எளிதாக வரும்.
Continue reading →
உங்கள் காதலி எப்படிப்பட்டவர்னு தெரியணுமா..? அப்போ முதல்ல அவருடைய காத பாருங்க..!
ஒலி..! ஒலி..!
இந்த உலகின் அழகிய ஒலியை ரசிப்பதற்காகவே நமக்கு இந்த காதுகள் உள்ளன. இசை பிரியர்களுக்கு காது இல்லையென்றால், அவ்வளவுதான்..! “மொழி” படத்தில் இந்த உறுப்பின் முக்கியத்துவத்தை மிக அழகாக காட்டி இருப்பார்கள். இதை விட ஒரு சுவாரசியமான ஒன்று என்னவென்றால், உங்கள் காது உங்களை பற்றி சொல்வதே…
காதுவும் மரபணுவும்..!
Continue reading →
இரத்தக்கட்டை நீக்கும் எளிமையான இயற்கை வைத்திய குறிப்புகள்….!
சாதாரணக் காயம்தானே என்று அலச்சியதால் நாம் கவனிக்காமல் விட்டுவிடும் சின்னக் காயங்கள்கூட சில நேரங்களில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
Continue reading →
நீங்கள் வீட்டில் செய்யும் இந்த எளிய சட்னிகள் உங்கள் உயிரை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா?
தக்காளி சட்னி
நாம் அதிகம் பயன்படுத்தும் சட்னிகளில் முதலிடத்தை பிடிப்பது தக்காளி சட்னிதான். இந்த சட்னி வைட்டமின்கள் மற்றும் குளுதோதியானை வழங்குகிறது. இந்த சிவப்பு நிற உருண்டை பழமானது உங்கள் ஆரோக்கியத்தின் கொள்கலனாகும். இதன் குறிப்பிடத்தகுந்த பலன்களில் ஒன்று இதுபுற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியது. மேலும் உங்கள் சருமத்தை மென்மையாக மாற்றக்கூடியது. இது ஒருவர் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
புதினா சட்னி
புதின பழங்காலம் முதலே மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் அற்புத மூலிகையாகும். செரிமானத்தை அதிகம் ஊக்குவிக்கும் புதினாவானது வயிற்றில் வீக்கம் மற்றும் வாயுக்கோளாறு ஏற்படுவதை தடுக்கக்கூடியது. மேலும் புதினா சட்னியானது குமட்டல், பசியின்மை போன்ற பிரச்சினைகளை குணப்படுத்தக்கூடும்.
வெங்காயம் மற்றும் பூண்டு சட்னி
வெங்காயம் மற்றும் போன்று இரண்டும் தனித்தனியாக பல மருத்துவகுணங்களை கொண்டது. இவை இரண்டும் இணையும்போது அது சுவையில் மட்டுமின்றி சத்துகளிலும் சிறந்ததாக மாறுகிறது. இந்த சட்னி செரிமானத்தை ஊக்குவிக்கவும், மூல நோயை குணப்படுத்தவும் உதவும். பூண்டில் உள்ள ஆன்டி – பாக்டீரியல் மற்றும் பூஞ்சைக்கு எதிரான பண்புகள் கொழுப்பை குறைக்க உதவும்.
நெல்லி சட்னி
நெல்லி சட்னி நாம் அதிகம் பயன்படுத்தாத ஒரு சட்னியாகும். இந்த சட்னியின் மூலம் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது, இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இது இன்சுலினின் அளவை சீராக்குவதன் மூலம் கணையத்தை பாதுகாக்கக்கூடும்.
கறிவேப்பிலை சட்னி
கறிவேப்பிலை பல நன்மைகளை வழங்கக்கூடியது, ஆனால் நாம் இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதில்லை. கறிவேப்பிலையில் அதிகளவு இரும்புச்சத்தும், போலிக் அமிலமும் உள்ளது. உங்கள் உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு போலிக் அமிலமும் மிகவும் அவசியமானது. உங்கள் உடலில் இரத்தசோகை ஏற்படாமல் இருக்க இதனை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
கொத்தமல்லி சட்னி
செரிமானத்தை ஊக்குவிக்க கொத்தமல்லி சட்னி ஒரு சிறந்த தேர்வாகும். மற்ற பொருட்களை காட்டிலும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே அதிகம் உள்ள பொருள் இதுதான். இந்த ஊட்டச்சத்துக்கள் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பயனளிப்பதாகும். இது இன்சுலினின் அளவை சீராக்குவதுடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்கும்.
பிரண்டை சட்னி
பிரண்டை சட்னி அல்சர், மலசிக்கல் மற்றும் மூல நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது. குழந்தைகளுக்கு இந்த சட்னியை கொடுப்பது சிறிது கடினம்தான், எனவே அவர்களுக்கு பிரண்டையை வீடு வடிவத்தில் கொடுங்கள். குழந்தைகளுக்கு தொடர்ந்து பிரண்டையை அவர்கள் உணவில் சேர்ப்பது அவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் எழுவதை தடுக்கும்.
புளி சட்னி
புளி சட்னி பல ஆரோக்கிய மருத்துவ பலன்களை கொண்டது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சினையை குணப்படுத்தும். மேலும் இந்த நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் பித்த உப்புகளை வெளியேற்ற பயன்படுகிறது. இதில் உள்ள டார்ட்டாரிக் அமிலம் மிகச்சிறந்த ஆண்டிஆக்சிடண்ட் ஆகும்.
ஜாதிக்காய் சட்னி
இந்த சட்னி பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக செயல்படக்கூடியது. இது சிறந்த வலி நிவாரணியாக இருப்பதுடன் வயிறு வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்குக்கு சிறந்த மருந்தாக உள்ளது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். இது கவனத்தை அதிகரிக்கும் சிறந்த டானிக்காக மூளைக்கு செயல்படுகிறது.