நீங்கள் வீட்டில் செய்யும் இந்த எளிய சட்னிகள் உங்கள் உயிரை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா?

தக்காளி சட்னி

நாம் அதிகம் பயன்படுத்தும் சட்னிகளில் முதலிடத்தை பிடிப்பது தக்காளி சட்னிதான். இந்த சட்னி வைட்டமின்கள் மற்றும் குளுதோதியானை வழங்குகிறது. இந்த சிவப்பு நிற உருண்டை பழமானது உங்கள் ஆரோக்கியத்தின் கொள்கலனாகும். இதன் குறிப்பிடத்தகுந்த பலன்களில் ஒன்று இதுபுற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியது. மேலும் உங்கள் சருமத்தை மென்மையாக மாற்றக்கூடியது. இது ஒருவர் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

புதினா சட்னி

புதின பழங்காலம் முதலே மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் அற்புத மூலிகையாகும். செரிமானத்தை அதிகம் ஊக்குவிக்கும் புதினாவானது வயிற்றில் வீக்கம் மற்றும் வாயுக்கோளாறு ஏற்படுவதை தடுக்கக்கூடியது. மேலும் புதினா சட்னியானது குமட்டல், பசியின்மை போன்ற பிரச்சினைகளை குணப்படுத்தக்கூடும்.

வெங்காயம் மற்றும் பூண்டு சட்னி

வெங்காயம் மற்றும் போன்று இரண்டும் தனித்தனியாக பல மருத்துவகுணங்களை கொண்டது. இவை இரண்டும் இணையும்போது அது சுவையில் மட்டுமின்றி சத்துகளிலும் சிறந்ததாக மாறுகிறது. இந்த சட்னி செரிமானத்தை ஊக்குவிக்கவும், மூல நோயை குணப்படுத்தவும் உதவும். பூண்டில் உள்ள ஆன்டி – பாக்டீரியல் மற்றும் பூஞ்சைக்கு எதிரான பண்புகள் கொழுப்பை குறைக்க உதவும்.

நெல்லி சட்னி

நெல்லி சட்னி நாம் அதிகம் பயன்படுத்தாத ஒரு சட்னியாகும். இந்த சட்னியின் மூலம் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது, இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இது இன்சுலினின் அளவை சீராக்குவதன் மூலம் கணையத்தை பாதுகாக்கக்கூடும்.

கறிவேப்பிலை சட்னி

கறிவேப்பிலை பல நன்மைகளை வழங்கக்கூடியது, ஆனால் நாம் இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதில்லை. கறிவேப்பிலையில் அதிகளவு இரும்புச்சத்தும், போலிக் அமிலமும் உள்ளது. உங்கள் உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு போலிக் அமிலமும் மிகவும் அவசியமானது. உங்கள் உடலில் இரத்தசோகை ஏற்படாமல் இருக்க இதனை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

கொத்தமல்லி சட்னி

செரிமானத்தை ஊக்குவிக்க கொத்தமல்லி சட்னி ஒரு சிறந்த தேர்வாகும். மற்ற பொருட்களை காட்டிலும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே அதிகம் உள்ள பொருள் இதுதான். இந்த ஊட்டச்சத்துக்கள் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பயனளிப்பதாகும். இது இன்சுலினின் அளவை சீராக்குவதுடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்கும்.

பிரண்டை சட்னி

பிரண்டை சட்னி அல்சர், மலசிக்கல் மற்றும் மூல நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது. குழந்தைகளுக்கு இந்த சட்னியை கொடுப்பது சிறிது கடினம்தான், எனவே அவர்களுக்கு பிரண்டையை வீடு வடிவத்தில் கொடுங்கள். குழந்தைகளுக்கு தொடர்ந்து பிரண்டையை அவர்கள் உணவில் சேர்ப்பது அவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் எழுவதை தடுக்கும்.

புளி சட்னி

புளி சட்னி பல ஆரோக்கிய மருத்துவ பலன்களை கொண்டது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சினையை குணப்படுத்தும். மேலும் இந்த நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் பித்த உப்புகளை வெளியேற்ற பயன்படுகிறது. இதில் உள்ள டார்ட்டாரிக் அமிலம் மிகச்சிறந்த ஆண்டிஆக்சிடண்ட் ஆகும்.

ஜாதிக்காய் சட்னி

இந்த சட்னி பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக செயல்படக்கூடியது. இது சிறந்த வலி நிவாரணியாக இருப்பதுடன் வயிறு வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்குக்கு சிறந்த மருந்தாக உள்ளது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். இது கவனத்தை அதிகரிக்கும் சிறந்த டானிக்காக மூளைக்கு செயல்படுகிறது.

%d bloggers like this: