அலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா… வந்துவிட்டது பெடல் டெஸ்க்!

பொதுவாக அலுவலகம் செல்லும் பலருக்கும் உள்ள தலையாயப் பிரச்னை… தங்களுடைய உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள நேரம் இல்லை என்பதுதான். இதில் விதிவிலக்காக சிலரும் உண்டு. காலையில் எழுந்ததும் வியர்க்க விறுவிறுக்க நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வார்கள். அதன் பிறகு அலுவலகம் கிளம்பிப்போய் உற்சாகத்துடன் தங்களுடைய பணிகளை முடித்துவிடுவார்கள்.
அப்படியான வாழ்க்கை சிலருக்கு அமையாது.

பெடல் டெஸ்க்

Photo courtesy:  amazon.com

குறிப்பாக, ஐ.டி நிறுவன ஊழியர்கள், இரவுப் பணியாளர்கள் காலையில்தான் உறங்கவே செல்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்குக் கைகொடுக்க வந்துள்ளது பெடல் டெஸ்க் (PedalDesk). வழக்கமாக அமரும் டெஸ்க்கில் பெடலை வைத்துத் தயாரித்துள்ளனர். 

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் உடற்பருமன் அதிகரிப்பதோடு, சிலருக்கு சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படுவது உண்டு. அவர்களுக்கு இந்த பெடல் டெஸ்க் ஒரு வரப்பிரசாதமாகும். இதை அமெரிக்காவில் உள்ள `மாசசூசெட்ஸ் அம்ஹெஸ்ட் பல்கலைக்கழகம்’ ( University  of Massachusetts Amherest) உருவாக்கியுள்ளது. இதை அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டே பயன்படுத்த முடியும். இதனால், உடலில் இன்சுலின் சீராகச் சுரக்கும்.

`தாங்கள் பணிபுரியும் இடங்களில் பெடல் டெஸ்க்கை பயன்படுத்தி, பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் உடல் உழைப்பு சாராதவர்கள் தங்களுடைய உடல்நலனைக் காக்க முடியும். உடற்பருமன், சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகளைக் கட்டுக்குள் வைக்க முடியும்’ என்று பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே, அலுவலகத்தில் பணியாற்றுவோர் இதைப் பயன்படுத்தி நலம் பெறலாம்.  

%d bloggers like this: