இன்று முதல் விண்ணில் வால் நட்சத்திர நகர்வு….. வெறும் கண்ணால் பார்க்கலாம்!

: இன்று முதல் விண்ணில் தெரியும் அரிய வால் நட்சத்திர நகர்வை இந்தியா முழுவதும் வெறும் கண்ணால் பார்க்கலாம் என கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய கொடைக்கானல் வான் இயற்பியல் மைய

ஆராய்ச்சியாளர் செல்வேந்திரன், விண்வெளியில் அவ்வப்போது வால் நட்சத்திரங்கள் நகர்வு இருக்கும் என்றும், தற்போது 46 பி எனும் விர்ட்டியனின் வால் நட்சத்திரம் பூமிப்பாதையில் நகர்கிறது என்று தகவல் அளித்துள்ளார். இந்த நகர்வானது இன்று முதல் வரும் 17ம் தேதி வரை பூமிப்பாதையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கு திசையில் நீல வண்ணத்தில் சுடர்விட்டு நகர்வதை இந்தியா முழுவதும் தொலைநோக்கி இன்றி வெறும் கண்ணாலும் காணலாம் என தகவல் அளித்துள்ளார். இன்று இரவு 9 மணி, நாளை மறுநாள் இரவு 8 மணி, டிச., 17ல் இரவு 7 மணி முதல் இந்த வால் நட்சத்திரத்தை பார்க்கலாம் என்றும் 3 நாட்களும் இந்த வால் நட்சத்திரம் நீல நிறத்தில் காணப்படுவது சிறப்பு அம்சமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கொடைக்கானலில் கோக்கர்ஸ் வாக் பகுதியில் டெலஸ்கோப் மூலம் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு வால் நட்சத்திரம் நகர்வு குறித்த விண்வெளி அதிசயத்தை காண கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

%d bloggers like this: