வியாபார விருத்திக்கு…

ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம்அ கற்றிவளர்
   அந்திபக லற்றநினை வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்திஉனை
   அன்பொடுது திக்கமனம் அருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
   சந்திரவெ ளிக்குவழி அருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்திசைம திக்கவளர்
   சம்ப்ரமவி தத்துடனெ அருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமனம்
   உன்றனைநி னைத்தமைய அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி
   வந்தணைய புத்தியினை அருள்வாயே
கொங்கில்உயிர் பெற்றுவளர் தென்கரையில் அப்பரருள்
   கொண்டுஉட லுற்றபொருள் அருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தன்என வெற்றிபெறு
   கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே

காங்கேயத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலுள்ள திருத்தலம் கொங்கணகிரி. இங்கு வட்டமலை என்ற பெயருடன் திகழும் குன்றின் மீது கோயில் கொண்டிருக்கும் முருகன் மீது அருணகிரியார் அருளிச் செய்த அற்புதமான திருப்புகழ் பாடல் இது.
செவ்வாய்க்கிழமைகளில், வீட்டில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, இந்தப் பாடலைப் பாடி வழிபட, பதவி உயர்வு, வியாபார விருத்தி உட்பட சகல சௌபாக்கியங்களும் கைகூடும். புண்ணிய தலங்களில் முருகனை தரிசிக்கும்போதும், இப்பாடலைப் பாடி வழிபட்டு வரம் பெறலாம்.

%d bloggers like this: