ஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா?

ஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா?

வங்கியில் சேமித்து வைக்கப்படும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் விருப்பம். இதை நிறைவேற்றும் வகையில் சில தனியார் மற்றும் அரசு வங்கிகள் உயர்த்தியுள்ளன. இதன்

தொடர்ச்சியாக, எஸ்.பி.ஐ. வங்கியும் வைப்பு நிதிக்கான வட்டிவிகிதத்தை அதிகரித்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு அதிகமான தொகையில், ஓர் ஆண்டிற்கு சேமிக்கப்படும் வைப்பு நிதிக்கு, எஸ்.பி.ஐ. வங்கி 6.70 சதவிகித வட்டி அளிக்கிறது. இதுவே ஹெச்.டி.எப்.சி. வங்கியில் 7.50 சதமும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 7.95 சதமும், பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 6.75 சதமும், ஆக்ஸிஸ் வங்கியில் 7.50 சதமும் அளிக்கப்படுகின்றன.

உயர்த்தி அளிக்கப்பட்டுள்ள இந்த வட்டி விகிதத்தில், மிகக் குறைவாக எஸ்.பி.ஐ. வங்கியும், மிக அதிகமாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும் வட்டி அளிக்கின்றன.

ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான தொகையில், வாடிக்கையாளர்களை 60 வயதுக்கு குறைவானவர்கள், மேற்பட்டவர்கள் என இரண்டாக பிரித்துள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சிறப்புச் சலுகையாக வட்டி உயர்த்தி வழங்கப்படுகிறது. எஸ்.பி.ஐ. வங்கியை பொருத்தமட்டில், 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையில் வைப்புநிதியில் பணத்தை சேமிக்கலாம்.

%d bloggers like this: