அமமுகவில் பாதி பேரை காணோம்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்.. ஸ்டாலினின் அதிரடி தொடர்கிறதா?

சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து திடீர் என்று சில முன்னாள் எம்எல்ஏக்கள் காணாமல் போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திடீர் திடீர்ன்னு உடையுதாம், சாயுதாம் என்று வடிவேல் கூறுவதை போலத்தான் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. டிடிவி தினகரனின் லெப்ட் ஹேண்ட் என்று கருத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்று வாரம்தான் திமுகவில் சென்று இணைந்தார்.

இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் டிடிவி தினகரன் மீண்டும் வரவில்லை.ஆனால் அவருக்கு இன்னும் தொடர் அதிர்ச்சிகள் காத்து இருப்பதாக அமமுகவில் இருக்கும் நபர்கள் தெரிவிக்கிறார்கள்.

என்ன நடக்கிறது தற்போது

தற்போது அமமுக கழகத்தில் சில உறுப்பினர்கள் மட்டும் டிடிவியிடம் இருந்து ”தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்கள்”, 18 முன்னாள் எம்எல்ஏக்களில் ஒருவர் ஏற்கனவே திமுக சென்றுவிட்டார். இந்த நிலையில் மீதம் இருக்கும் 17 பேரில் 9 பேர் தினகரனின் தொடர்பு எல்லையில் இல்லை என்று கூறுகிறார்கள். இதுதான் தற்போது டிடிவி தினகரனை கலவரத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

முகாம் போட்டு உள்ளனர்

அதேபோல் இந்த காணாமல் போன 9 அமமுக உறுப்பினர்களும் குற்றாலம் அருகே முகாம் போட்டு பேசி வருவதாகவும் தகவல்கள் வருகிறது. தினகரன் பெரிதாக நம்பிய சில உறுப்பினர்களும் இதில் இருப்பதாக தகவல்கள் வருகிறது. ஆனால் இவர்கள் எதற்காக குற்றாலத்தில் இருக்கிறார்கள், அங்கே என்ன பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று முழு விவரம் வெளியாகவில்லை.

புதிய பதற்றம்

இந்த செய்தி வெளியே வந்ததும் தினகரன் வேகமாக களமிறங்கி, பெங்களூரு கிளம்பினார். சிறையில் இருக்கும் சசிகலாவை வேகமாக சென்று அவர் பார்த்தார். ஆனால் அவருடன் முன்னாள் எம்எல்ஏக்கள் 8 பேர் மட்டுமே சென்று இருக்கிறார்கள்.குற்றாலத்தில் இருக்கும் எம்எல்ஏக்கள் எல்லோரும் இதில் ஆப்சென்ட்! இதுதான் தற்போது தமிழக அரசியலில் புதிய புயலை உருவாக்கி இருக்கிறது.

உடைகிறதா?

பேய்ட்டி புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் போதே, இன்னொரு பேய் போன்ற அரசியல் புயல் தமிழகத்தைய் நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. அமமுகவை அந்த புயல் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம், சில முன்னாள் எம்எல்ஏக்களை தூக்கிக் கொண்டு திமுக பக்கம் கரையை கடக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆம் அமமுக உறுப்பினர்கள் சிலர் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.

ஏற்கனவே

இது தொடர்பாக ஏற்கனவே சில அரசியல் செய்திகள் வந்தது. செந்தில் பாலாஜியை தொடர்ந்து இன்னும் சிலர் திமுகவிற்கு மாற இருக்கிறார்கள். சிலர் அதிமுகவிற்கே திரும்பி செல்ல இருக்கிறார்கள் என்று கூறினார்கள். ஆனால் அந்த மாற்றத்திற்கான முன்னெடுப்புகள் இத்தனை வேகமாக நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை… ஏன் தினகரனே கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார்.
oneindia news

%d bloggers like this: