கருப்பையில் நீர்கட்டியா? எப்படி சரி செய்வது…

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (pcos)எனப்படும் கருப்பை நீர்கட்டி பிரச்னையால் இன்றைய காலத்தில் அதிகளவு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம், என்று பார்த்தால் மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் என மருத்துவ வல்லூநர்கள் தெரிவிக்கின்றன்னர்.

மேலும் கருப்பையில் நீர்கட்டி உள்ளவர்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும். மாதவிடாய் என்பது மாதம்தோறும் வயதுக்கு வந்த பெண்கள் மத்தியில் உண்டாகும் சுழற்சி முறையிலான செயற்பாடு. இது ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை குறிக்கும் செயல் என்றும் கூறலாம். இது சரியாக வரவில்லை எனில் அந்த பெண் ஆரோகியமாக இல்லை. அவள் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

மேலும் குழந்தை உண்டாவதிலும் பலவிதமான பிரச்னைகள் வருகிறது. கருவுற்றாலும் சினை முட்டைகன் முதிர்ச்சி அடைய தேவையான ஹார்மோன்கள் சுரப்பதில்லை. இதை மிக எளிமையான முறையில், எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி சரி செய்யலாம்.

நாம் உண்ணும் உணவில் தினமும் அதிகளவு லவங்க பட்டையை சேர்த்துக்கொண்டால் நீர்கட்டி பிரச்னைகள் குணமடையும் . அத்துடன் தினமும் காலையில், துளசி இலைகளை சாப்பிட்டு வருவதும் நல்லது. அல்லது அவற்றை வெந்நீரில் நன்கு கொதிக்க வைத்து அருந்தலாம். அடிவயிற்றில் வலி ஏற்படும்போது வெந்நீரில் ஒத்தடம் கொடுத்து வந்தால் நல்லது.

மேலும் ஆளி விதை பொடியை உண்டு வருவதும் நல்லது. அத்துடன் கழற்சிகாயை தினமும் மிளகுடன் சேர்து உண்டு வர கருப்பை நீர்கட்டிகள் கரைந்து சரியான நேரத்தில் மாதவிடாய் வரும். அதனால் ஏற்படும் கருப்பை பிரச்னைகளும் குணமடையும். இந்த கழற்சி காய் அனைத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை தவறாமல் உண்டால் வருவதினால் நீர்கட்டிகள் சரியாகிவிடும்.

%d bloggers like this: