இந்த 6 குணங்கள் உள்ளவர்கள் உங்கள் குடும்பத்தின் நிம்மதியை கெடுத்து விடுவார்களாம் தெரியுமா?

விதுரர்

விதுரரின் தாய் மற்றும் தந்தை இருவருமே இராஜவம்சத்தை சேர்ந்தவராக இல்லாததால் விதுரர் இறுதிவரை ராஜவாரிசாக ஏற்றுக்கொள்ளப்படவேயில்லை. ஆனால் இவரின் ஞானத்திற்காக அவர் அஸ்தினாபுரத்தின் பிரதம அமைச்சராகவும், திருதராஷ்டிரனின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார். திருதராஷ்டிரன் தவறான காரியங்கள் செய்ய எத்தனிக்கும் போதெல்லாம் விதுரர் தன் ஞானத்தால் அவருக்கு

சரியான அறிவுரையை கூறினார். ஆனால் திருதராஷ்டிரனுக்கு இருந்த புத்திரமோகம் விதுரரின் சீரிய அறிவுரைகளை புறந்தள்ள செய்தது.

விதுர நீதி

திருதராஷ்டிரனுடன் விதுரர் செய்த உரையாடல்கள், அவர் கூறிய போர் தந்திரங்கள், குடும்ப பிரச்சினைகளுக்கான தீர்வுகள், அவரின் அறிவுரைகள் அனைத்தும் விதுர நீதி என்று தொகுக்கப்பட்டது. துரியோதனன் பிறக்கும் முன்னரே அவனால் குரு வம்சம் அழியும் என விதுரர் கணித்து கூறினார். எனவே துரியோதனனை பிறந்தவுடனேயே கொல்ல அறிவுறுத்தினார். ஆனால் திருதராஷ்டிரன் அதனை புறக்கணித்துவிட்டார்.

குடும்பம்

தன் அனுபவத்தில் இருந்து விதுரர் உணர்ந்தது என்னவெனில் சில பண்புகள் கொண்டவர்கள் குடும்பத்தில் இருக்கும்போது அந்த குடும்பம் ஒருபோதும் மகிழ்ச்சியாகவோ, முன்னேறவோ முடியாது. அவ்வாறானவர்களை கொண்ட குடும்பம் விரைவில் அழிந்துவிடும். அவர் கூறும் முக்கிய கூற்று என்னவெனில் ” திர்காலத்தில் இழப்பை ஏற்படுத்தும் ஆதாயத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது “.

மூத்தவர்கள் குடும்பத்தை கட்டுப்படுத்தவேண்டும்

குடும்பத்திற்கு மூத்தவர்கள் தங்கள் குடும்பத்தை ஒற்றுமையாக வைத்திருக்க போதுமான ஆற்றலை பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தை வளர்ப்பதற்கும், வடிவமைப்பதற்கும் அவர்கள்தான் பொறுப்பு. ஒருவேளை அவர்களால் அதனை செய்ய இயலாமல் போனாலோ அல்லது செய்ய மறுத்தாலோ அதன்பின் அந்த குடும்பம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது. மூத்தவரின் மறைவிற்கு பிறகு அவரின் தகுதியுடன் ஒருவர் இல்லையென்றால் அந்த குடும்பத்தை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.

சண்டைகளை தீர்த்துவைக்க வேண்டும்

வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஒரு குடும்பம் எப்பொழுதும் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் சண்டையிடுபவர்களிடம் இருந்து விலகியோ அல்லது தவிர்க்கவோ இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் குடும்பத்தின் அமைதியை சீர்குலைக்கக்கூடியவர்கள். இத்தகைய தனிநபர்கள் குடும்ப உறுப்பினர்களின் நேர்மறை அதிர்வுகளை உண்கின்றனர்.

இளைஞர்களுக்கு அன்பு மற்றும் பரிவு

விதுரர் கூறுவது என்னவெனில் குடும்பத்தில் உள்ள இளைஞர்களை அன்புடன், பரிவுடனும் சுயநலமில்லாமல் கவனித்துக்கொள்ள வேண்டியது மூத்தவர்களின் பொறுப்பு ஆகும். மூத்த ஆண்களின் கடமை என்னவெனில் இளைஞர்கள் குடும்பத்தினர் சாப்பிட்டார்களா, ஆரோக்கியமான விவாதம் செய்வது, இளைஞர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் அவர்களுக்குள் மோதல்கள் ஏற்படமால் தடுப்பதும் ஆகும்.

மோசமான குணம் உள்ளவர்கள்

அனைத்து குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் எப்பொழுதும் மற்றவர்களின் அனைத்து செயல்களையும் கண்டிப்பவராக இருப்பார்கள், மற்றவர்களை மட்டம் தட்ட எப்பொழுதும் வாய்ப்புகளை தேடிக்கொண்டு இருப்பார்கள். அவர்களின் குணமும், பார்வையும் எப்பொழுதும் தவறானதாகவே இருக்கும், அவர்களுக்கு குடும்பத்தின் வளர்ச்சியை பற்றி எந்தவித கவலையும் இருக்காது. அவர்களை பெரும்பாலும் தள்ளிவைப்பதே குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு ஏற்றதாகும்.

தவறுகளுக்கும், பாவங்களுக்கும் இடையில் வித்தியாசம் காண்பது

குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்பொழுதுமே மற்றவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் செய்வது தவறா அல்லது பாவமா என்பதை அடையாளம் காணவேண்டும். அவர்கள் செய்யும் பாவங்களை ஏற்றுக்கொள்வதோ அல்லது அதனை மறைக்க உதவுவதோ உங்கள் குடும்பத்தின் மரியாதயை சமூகத்தில் குறைக்கும். மேலும் இது உங்கள் குடும்பத்தின் அழிவுக்கும் வழிவகுக்கும்.

வெறுப்பை உமிழ்பவர்கள்

விதுரர் கூறும் எச்சரிக்கை என்னவெனில் வெறுப்பை உமிழ்ப்பவர்களின் அன்பும், நன்னெறியும் அவர்கள் இலாபமடையும் வரைதான் இருக்கும். அவர்களுக்கான இலாபம் குறையும்போது அவர்கள் குடும்பத்தின் நிலை பற்றியோ , அதன் முன்னேற்றத்தை பற்றியோ கவலைப்படமாட்டார்கள். அவர்களின் செயல்களே குடும்பத்தின் மகிழ்ச்சியையும், அமைதியையும் அழிக்கும்.

%d bloggers like this: