தினமும் 2 வாழைப்பழங்கள் சாப்பிடுவதால், உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்ன்னு தெரியுமா..?

மஞ்சள் நிறமே..!

மஞ்சள் நிறைத்து பழம் என்றால் நம் எல்லோருக்கும் சட்டென நினைவுக்கு வருவது இந்த வாழைப்பழம் தான். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இந்த பழத்தின் முழு தன்மைக்கும் முக்கிய காரணம். ஆமாங்க, வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் எ, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், ஃபோலேட், மெக்னீசியம் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளதாம்.

ரத்த சோகையை குணப்படுத்த

பலருக்கு எப்போதும் சோர்வாகவும், உடல் முழுவதும் வெளுத்து போனது போன்றும், சுவாச பிரச்சினையாகவும் இருக்க கூடும். இவை ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதாலே ஏற்படுகிறது. இதை ரத்த சோகை என்போம். தினமும் 2 வாழைப்பழம் சாப்பிடுவதால் ரத்தத்தின் அளவு அதிகரித்து ரத்த சோகையை குணப்படுத்தலாம்.

உடல் எடைக்கு

வாழைப்பழத்தில் அதிக அளவில் நார்சத்து உள்ளது. எனவே, இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்களின் உடல் எடை மிக சீக்கிரத்திலே குறைய பல வாய்ப்புகள் உள்ளதாம். இவற்றில் உள்ள ஸ்டார்ச், அடிக்கடி பசி எடுப்பதை தவிர்க்கிறது. அத்துடன் உங்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் இது குறைகிறதாம்.

செரிமான கோளாறுகளுக்கு

இன்று எதை சாப்பிட்டாலும் நெஞ்சிலே இருப்பது போன்றும், ஜீரணம் ஆகாதது போன்றும் இருப்பது அதிகமாகி விட்டது. இதனை சரி செய்ய வெறும் 2 வாழைப்பழம் போதும். உங்களின் குடல் சார்ந்த பலவித பிரச்சினைகளுக்கு வாழைப்பழம் சிறந்த தீர்வை தருகிறது. மேலும், மலச்சிக்கலை எளிதில் குணப்படுத்த தினமும் 2 வாழைப்பழமே போதும்.

இதய ஆரோக்கியத்திற்கு

தினமும் 2 வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து உங்களை உங்களை காத்து கொள்ளலாம். மேலும், மாரடைப்பு, இதய நோய்கள் போன்றவற்றையும் இவை தடுக்கும். இதற்கெல்லாம் முக்கிய காரணம் இதில் உள்ள பொட்டாசியம் தான்.

துள்ளி குதிக்க

தினமும் 2 வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உங்களின் ஆற்றல் அளவு இரு மடங்காக அதிகரிக்கும். அலுவலகத்தில் மிக சீக்கிரத்திலே சோர்வடைந்து விடுபவர்களுக்கும், தசை வலிகள் இருப்பவர்களுக்கும், தீர்வை தர வாழைப்பழம் சிறந்த மருந்து. மொத்தத்தில் அதிக ஆற்றலை தந்து உங்களை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும்.

மன அழுத்தத்தை போக்க

tryptophan என்கிற மூல பொருள் சந்தோஷத்தை தரும் ஹார்மோனை அதிகரிக்க கூடியவை. இவை வாழைப்பழத்தில் அதிகம் உள்ளதால் உங்களின் சோகங்களை துரத்தி அடிக்க கூடிய தன்மை இந்த வாழைப்பழத்திற்கு உள்ளதாம். மேலும், ஒரு வாழைப்பழத்தில் 27 mg மெக்னீசியம் உள்ளதால், இவையும் நமது மனநிலையை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுமாம்.

ஆஸ்துமா

பொதுவாகவே குழந்தைகள் வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இது உண்மையில் அவர்களுக்கு அதிக நன்மையை தருகிறது. இதில் உள்ள எண்ணற்ற வைட்டமின்கள் 34 சதவீதம் ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு

பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் கால பிரச்சினைகளில் இருந்து வாழைப்பழம் காக்கிறதாம். மாதவிடாய் வலியோ, பயமோ, அதனால் ஏற்படும் மன அழுத்தத்தையும் இவை முழுவதுமாக சரி செய்து விடுமாம். இதற்கு முழு காரணம் வாழைப்பழத்தில் உள்ள இருப்புசத்து தான்.

வாழைப்பழ தினம்..!

தினமும் சாப்பிட கூடிய பழ வகைகளில் இந்த வாழைப்பழம் முக்கிய இடத்தை நமது அன்றாட வாழ்க்கை முறையில் பிடித்துள்ளது. ஆதலால், தினமும் 2 வாழைப்பழத்தை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்குங்கள். என்றென்றும் வாழைப்பழ தினமாக அமையட்டும் நண்பர்களே..!

%d bloggers like this: