என்னது இப்படியெல்லாமா படிப்புகள் இருக்கு? வாழ்க்கை ஜொலிக்க சூப்பர் சாய்ஸ்!

இப்பெல்லாம், நம்மலைச் சுற்றி இருப்பவர்களுக்காகவே ஏதேனும் ஓர் டிகிரி வாங்கி வச்சுகிட்டு, படிச்சதுக்கும், செய்யுற வேலைக்கும் சம்பந்தமே இல்லாமத்தான் எல்லாரும் இருப்போம். அல்லது பெரும்பாலும் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனா நமக்கு என்ன பிடிக்கும், நம்ம தலையில என்ன ஏறும்னே சோசிக்காம விருப்பமில்லாத பாடத்தை தேர்வு செய்து ஒரு டிகிரியை வாங்க வச்சுடுராங்க நம்ம பெற்றோர். இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால், நமது வாழ்க்கைக்கு ஒரு பொருளாதார பாதுகாப்பை ஏற்படுத்தி தருவதாக இந்த டிகிரி இருக்கு.

என்னது இப்படியெல்லாமா படிப்புகள் இருக்கு? வாழ்க்கை ஜொலிக்க சூப்பர் சாய்ஸ்!

குறிப்பாக, நாள் முழுதும் ஆட்டம் , பாட்டம், வீடியோ கேம்ஸ், செல்பி என்று மகிழ்ச்சியுடன் இருக்கும் இன்றைய தலைமுறையினருக்கு இவைகள் ஒரு வித அயர்ச்சியை தருகின்றன. இந்த நூற்றாண்டில், இத்தகைய தடைகளை உடைத்தெறிந்து, வருங்காலத்திற்கான பல்வேறு விருப்பங்களை தேர்வு செய்து வாழ்வில் வெற்றியடையலாம். இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் சில கலைகள் தற்போது மிகவும் பிரபலமாகி வருகின்றன.

இதுவரை உங்கள் எண்ணத்தில் ரகசியமாக இருந்த இந்த ஆசைகளை உங்கள் வாழ்க்கையாக்கி அதில் வெற்றி பெற இதோ சில வழிகள்.

புகைப்படக் கலை

பொதுவாக இந்த கலையை தொழிலாக எடுக்க அதிகமானோர் முயற்சிப்பது கிடையாது. ஆனால் தற்போது வளர்ந்து வரும் இளைஞர்கள் தங்கள் தொழில் விருப்பமாக புகைப்படக் கலையை பெரிதும் தேர்ந்தெடுகின்றனர். இளைஞர்கள் மட்டுமில்லாமல் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் இந்த கலையை விரும்பி மேற்கொண்டு அதில் லாபம் அடைகின்றனர்.
சந்தோஷமா சம்பாதிக்கலாம்

உங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கை உங்கள் வருமானத்திற்காகவும் செய்யும்போது ஒரு வித சந்தோசம் உண்டாகிறது. அதே நேரம் பணமும் சம்பாதிக்க முடிகிறது. இதில் தவறென்ன? புகைப்படக்கலை தொடர்பான பல வேலைகள் உள்ளன. அவை,

சாதனை புகைப்படம்:

பல சாதனை தருணங்களை புகைப்படம் எடுப்பது.

வனவிலங்கு புகைப்படம்:

வன விலங்குகள்,பறவைகளை அதன் அருகில் சென்று அதன் கூர்மையான பற்களை மட்டும் படம் பிடிப்பது போன்றவை

திருமண புகைப்படம்:

உங்கள் திறமையை கொண்டு ஒருவரின் வாழ்நாளில் திருமண நாளை மறக்க முடியாததாக உணர்த்துவது.

பயண புகைப்படம்:

பயணங்களின் மறக்க முடியாத அனுபவங்களைத் தாங்கிய புகைப்படம்

பேஷன்/ அழகு புகைப்படம்:

அழகான ஆண்கள் மற்றும் பெண்களுடன் பழுவதற்கான வாய்ப்புகள் இவற்றால் கிடைக்கக்கூடும்.

உணவு புகைப்படம்:

புகைப்படம் எடுத்து முடித்தவுடன் ஒரு அருமையான விருந்து நிச்சயம்.

தொழில்முறை நடனம்:

நீங்கள் ஒரு முதன்மை நடன கலைஞர் ஆக வேண்டும் என்பது உங்கள் விருப்பமா? அதனை தடுத்து நிறுத்த யாரும் இல்லை. உங்கள் விருப்பத்திற்கேற்ப, உங்களை தயார் செய்ய பல்வேறு நடன நிறுவனங்கள் பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்பை கற்று கொடுக்கின்றன.

அவற்றுடன் உங்களை இணைத்து நீங்கள் விரும்பியது போல் பல்வேறு மேடைகளில் உங்கள் பாதங்களை பதிய வையுங்கள். நடனத்தில் ஏற்கனவே முன் அனுபவம் உள்ளவர்களாக இருந்தால் நீங்களே நடன கூடத்தை தொடங்குங்கள்.

ஆரம்பத்தில் சிறிய திட்டங்களை ஏற்று நடனம் அமைத்து கொடுங்கள். சிறியதாக இருந்தாலும் முதலில் தொடங்க எண்ணுங்கள். படிப்படியாக உங்கள் முன்னேற்றம் உங்கள் கையில்..
சொமேலியர் (மது நிபுணர்) :

சொமேலியர் என்பவர் மதுவை பற்றி அதிகம் தெரிந்த ஒரு நிபுணர் ஆவார். அல்கஹாலின் தரத்தை பற்றி உணர்ந்த ஒருவர் எல்லா மது பான விடுதிகள் மற்றும் அதன் தயாரிப்பு நிறுவங்களிலும் தேவைப்படுவார்.

மதுவை பற்றிய ஆழ்ந்த ஞானம் மற்றும் எந்த உணவுடன் ஒயின், பீர், ஸ்பிரிட் போன்ற பானங்கள் ஏற்கும் என்பது பற்றிய அறிவு போன்றவை உள்ள ஒரு பொறுப்பான வேலை இந்த வேலை. உணவகங்களில் எந்த பானத்திற்கு எந்த உணவை அன்பளிப்பாக வழங்கலாம் என்ற முடிவையும் இவர்களே எடுக்கிறார்கள். ஆகவே இதற்கான சான்றிதழை பெற்று இந்த வேலையில் சேரலாம். ஆனால் மிகவும் கவனமாக கையாள வேண்டிய வேலை இது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

செயலி வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்:

தற்போது எல்லோர் கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் பலர் பல வித விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்து விளையாடுகின்றனர். உங்களுக்கு விளையாட்டுகள் பற்றிய ஞானம் இருந்தால் இதனை முயற்சிக்கலாம். பல்வேறு பல்கலைக்கழகங்கள் வீடியோ கேம் வடிவமைப்பு பற்றிய படிப்பை தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்திருகின்றன.

இந்த துறை இன்று பணம் கொழிக்கும் ஒரு துறையாக விளங்குகின்றது . உங்கள் படைப்பாற்றலையும் கற்பனை திறனையும் இதில் நீங்கள் செலுத்தி வெற்றி பெறலாம். இதனையே ஒரு செயலியாக மாற்றி வடிவமைக்கும்போது எல்லோர் கைகளிலும் உங்கள் கற்பனை தான் விளையாடிக் கொண்டிருக்கும்.

உணவு விமர்சகர்:

உணவு மீது அதிகம் விருப்பம் உள்ளவர்களுக்கான வேலை இது. பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்கள் சமைத்த உணவு, அந்த இடம், உணவின் தரம், வாடிக்கையாளர் சேவை போன்றவற்றை பற்றிய உண்மையான கருத்துக்களை பதிவு செய்வதை ஒரு தொழிலாக செய்வதால் உங்கள் வருமானம் அதிகரிக்கும்.

எல்லா விதமான உணவையும் விரும்பி உண்ணும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் உங்கள் வாழ்நாள் முழுதும் சந்தோஷமாக இந்த வேலையை செய்யலாம். உலகத்தில் உங்களை போல் அதிர்ஷ்டசாலி வேறு யாருமே இருக்க மாட்டார்கள்.

%d bloggers like this: