ஆண்களே, உங்கள் தொப்பையை குறைக்க இவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்…!

கேலியும் கிண்டலும்..!

பல இடங்களில் நம்மை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்ற மிக முக்கியமான ஒன்று இந்த தொப்பை தான். சிலர் எவ்வளவோ வழிகளை ட்ரை செஞ்சாலும் இந்த உடல் எடையும், அதன் விளைவாக வந்த தொப்பையும் குறையாமலே இருக்கும். உங்களை இதில் இருந்து விடுவிக்க இந்த சமையல் அறை பொருட்கள் போதுமாம்.

தேன் வைத்தியம்

பலரின் தொப்பையை குறைக்கும் வைத்தியம் இந்த தேனிலும் எலுமிச்சையிலும் உள்ளதாம். நீங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இந்த தொப்பையை 2 வாரத்தில் குறைத்து விடலாம். மிக முக்கியமானது, இதனை தொடர்ந்து குடிக்க வேண்டும்.

புதினா

உங்களின் அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களை வெளியேற்றி விட்டாலே இந்த தொப்பை பிரச்சினை தேர்ந்து விடும். உங்கள் உணவில் புதினாவை கூடுதலாக சேர்த்து சாப்பிட்டால் பித்த பையில் உள்ள கொழுப்புகளை மிக விரைவிலே வெளியேற்றி விடுமாம். அத்துடன் இவை மிக குறைந்த கலோரிகளை கொண்டதால் உடல் எடையையும் குறைத்து விடும்.

தக்காளி

இதில் உள்ள 9-oxo-ODA என்கிற முக்கிய மூல பொருள் உங்களின் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை வெளியேற்ற பெரிதும் உதவுகிறதாம். ஒரு பெரிய தக்காளியில் 33 கலோரிகள் இருக்கிறதாம். ஆதலால், உடல் பருமனையும் இது குறைத்து விடும். எனவே, இனி தக்காளியை ஒதுக்கி வைக்காதீர்கள்.

தேனும் பூண்டும்

உடலுக்கு பலவித நன்மைகளை இந்த குறிப்பு தரவல்லது. தினமும் காலையில் இதனை தவறாது சாப்பிட்டு வந்தாலே உங்களுக்கு பலன் அதிகம். அத்துடன் பலவித நன்மைகளையும் உங்களால் அடைய முடியும். இதற்கு தேவையானவை..

பூண்டு 10 பல்

தேன் தேவையான அளவு

செய்முறை :-

10 பற்கள் பூண்டை எடுத்து, தோல் உரித்து பொடிசாக நறுக்கி கொள்ளவும். பிறகு இதனை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு, இவை மூழ்கும் வரை தேனை ஊற்றி கொள்ள வேண்டும். இந்த கலவையை ஒரு நாள் முழுக்க ஊற வைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு குறைந்து தொப்பை நீங்கி விடும்.

இலவங்க பட்டை

மசாலா பொருளான இந்த இலவங்க பட்டையின் மகத்துவம் அதிகமானது. இவை உடல் எடையை சீக்கிரமாகவே குறைக்க பெரிதும் வழி செய்கிறது. எனவே, தினமும் காலை வேளையில் காபியுடன் சிறிது இலவங்க பொடியையும் சேர்த்து உண்டால் தொப்பை விரைவில் குறைந்து விடும்.

ஜீரக நீர்

செரிமான பிரச்சினை முதல் ரத்த ஓட்டம் வரை பலவித உடல்நல குறைபாடுகளை சரி செய்ய வல்லது இந்த ஜீரக நீர். நீரை கொதிக்க விட்டு அதில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து 3 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும். பிறகு இதனை வடிகட்டி தினமும் காலையில் குடித்து வந்தால் வயிற்று உப்பசம், தொப்பை ஆகியவற்றிற்கு தீர்வு கிடைத்து விடும்.

ஓமம்

பலவித மூலிகை தன்மைகளை கொண்டது இந்த ஓமம். இவை செரிமான கோளாறுகளை குணப்படுத்தி, கொழுப்புகளை குறைக்க வழி செய்கிறது. காலை உணவிற்கு 30 நிமிடம் முன்னதாக இதனை 1 ஸ்பூன் சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால் இதன் பலன் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

வெள்ளரிக்காய்

நீர்சத்து அதிகம் நிறைந்த இந்த வெள்ளரிக்காயை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். 100 கிராம் வெள்ளரிக்காயில் வெறும் 45 கலோரிகளே உள்ளன. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் தொப்பை பிரச்சினை குறைய கூடும்.

%d bloggers like this: