இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு முன்ஜென்மம் இருந்துள்ளது என்று அறிந்துகொள்ளுங்கள்

ஒரே கனவு மீண்டும் மீணடும் வருவது

கனவுகள் என்பது உங்கள் வாழ்க்கையின் அனுபவங்களின் பிரதிபலிப்பாகும். ஒரே கனவு உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஒரே நேரத்தில் வருகிறதா? கனவுகளில் வரும் சூழ்நிலையும், மனிதர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தை உணர்த்துகிறதா? அப்படியென்றால் அந்த கனவு உங்களுடைய கடந்த பிறவியின் நினைவலைகளை மீண்டும் கொண்டுவருகிறது.

அதீத உள்ளுணர்வு

நமது அறிவையும், ஆற்றலையும் அதிகரிக்கும் உள்ளுணர்வு நமக்கு தானாக வந்துவிடுவதில்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். சில நேரங்களில் இந்த அறிவாற்றல் உங்களின் கடந்த கால வாழ்க்கையில் இருந்தும் வந்திருக்க வாய்ப்புள்ளது. நமது வயது சிறியதாக இருந்தாலும் நமது ஆன்மாவின் அனுபவம் அதிகமாக இருப்பதால் உங்களுக்கு இந்த ஞானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

வித்தியாசமான நினைவுகள்

சிறுவயதில் நம்மால் விவரிக்க முடியாத பல நினைவுகள் நமக்கு தோன்றும், பின்னாளில் மட்டுமே நம்மால் அதனை விவரிக்க இயலும். பெரியவர்களை விட குழந்தைகளிடம் ஆன்மாவை கடக்கும் புள்ளி அருகில் இருக்கும். அவர்கள் தங்கள் கடந்த கால வாழ்க்கையிலிருந்து நினைவுகளை எளிதில் பெற இயலும். நீங்கள் கடந்த காலத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தீர்களோ அந்த அளவு இபிகா நினைவுகள் உங்களை தொடரும்.

தேஜா வூ உணர்வு

இந்த உணர்வு கிட்டதட்ட நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு தருணத்தில் இருந்திருக்கும். தற்பொழுது நடக்கும் ஒரு விஷயம் ஏற்கனவே நம் வாழ்க்கையில் நடந்தது போன்ற உணர்வு இருக்கும். பெரும்பாலும் தேஜா வூ தானாக வரும். ஆனால் சிலசமயம் இது வாசனை, பொருள், இடம் போன்றவற்றால் தூண்டப்படும். இது நரம்பியல் கோளாறுகள் என்று சிலர் கூறுகிறார்கள், சிலர் இது மற்ற பரிமாணங்களில் இருந்து ஏற்படுகிறது என்று நம்புகிறார்கள். ஆனால் இது உங்கள் முன்ஜென்மத்தின் அறிகுறியாக இருக்க நிறைய வாய்ப்புள்ளது.

மற்றவர்களின் உணர்வுகளை நீங்கள் உணர்வது

முதிர்ச்சியடைந்த ஆன்மாக்கள் உணர்ச்சிகளை எளிதில் உறிஞ்சுக்கொள்ளும். அதன்படி சிலசமயம் மற்றவர்களின் மனா உணர்ச்சிகளை மட்டுமின்றி, உடல் உணர்ச்சிகளையும் உங்களால் புரிந்து கொள்ள இயலும். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் கூட்டத்தை தவிர்ப்பார்கள், ஏனெனில் அவர்களால் கூட்டத்தில் உள்ளவர்களின் உணர்ச்சிகளை கிரகித்துக்கொள்ள இயலும். இது உங்களுக்கு முன்ஜென்மம் இருந்ததை உறுதிசெய்யும்.

அதீத புத்திக்கூர்மை

சில குழந்தைகள் அவர்கள் வயதிற்கேற்றவாறு நடந்து கொள்ளமாட்டார்கள். இளைஞர்களுக்கு இணையாக அவர்களது செயல்களும், பேச்சும் இருக்கும். இந்த அனுபவத்தை ” சோல் ஏஜ் ” என்று கூறுவார்கள். அதாவது ஆன்மாவின் வயது என்று அழைப்பார்கள். நீங்கள் பூமிக்கு புதிய ஆன்மாவாக இருந்தால் உங்கள் செயல்கள் குழந்தைத்தனமாக இருக்கும். ஆனால் அனுபவம் வாய்ந்த ஆன்மாவாக இருக்கும் பட்சத்தில் செயல்களில் முதிர்ச்சி இருக்கும்.

வரலாறை விரும்புவீர்கள்

நீங்கள் குழந்தையாக இருந்த போது எதாவது ஒரு காலகட்டத்தை பற்றியோ அல்லது கலாச்சாரத்தை பற்றியோ அதிக ஆர்வத்துடன் கற்றிருக்கிறீர்களா?. அவ்வாறு இருந்தால் அதற்கான விளக்கம் இதுதான் உங்கள் ஆன்மா அந்த குறிப்பிட்ட காலகட்டத்திலோ, இடத்திலோ அல்லது கலாச்சாரத்திலோ வாழ்ந்திருக்கிறது.

விவரிக்க முடியாத அச்சங்கள் இருக்கும்

இது உண்மைதான். இது பிரச்சினையின் ஒரு வடிவமாக இருந்தாலும் சில விவரிக்க முடியாத அச்சங்கள் உங்களுக்கு இருந்தால் அது உங்கள் கடந்த கால வாழ்க்கையிலிருந்து ஏற்பட்டதாகும். குறிப்பாக தண்ணீரில் மூல்கு பயம், குறிப்பிட்ட விலங்குகள், குறிப்பிட்ட சில இடங்கள், குறிப்பிட்ட எண்கள், நிறங்கள் போன்றவற்றிக்கு பயப்படுவது கடந்த ஜென்மத்தை உறுதிப்படுத்தும்.

ஒருவரை பார்த்ததுமே எடைபோட்டு விடுவீர்கள்

ஒருவரை பார்த்து சில நிமிடங்கள் அவர்களுடன் பேசினாலே அவர்களுடைய குணநலன்கள், வாழ்க்கைமுறை போன்றவற்றை நீஙகள் கணித்துவிடுவீர்கள். அதாவது உங்கள் ஆன்ம பலம் மற்ற ஆன்மாக்கள் பற்றிய தகவல்களை எளிதில் அறிந்துகொள்ளும். அதன்காரணம் அப்படிப்பட்டவர்களை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்கனவே பார்த்ததுதான்.

தனிமையை விரும்புவீர்கள்

நீங்கள் இந்த உலகத்திற்குள் முதல் முறையாக வந்துள்ளீர்கள் எனில் எப்படி மற்றவர்களுடன் விளையாடுவது, தனக்கான வாழ்க்கையை எப்படி வசதியாக அமைத்துக்கொள்வது என்று உங்கள் ஆன்மா சிந்திக்கும். ஆனால் உங்கள் ஆன்மா ஏற்கனவே பலமுறை இங்கு வாழ்ந்திருந்தால் நீங்கள் தெரிந்து விளையாட்டை மீண்டும் மீண்டும் விளையாட ஆர்வம் காட்டமாட்டீர்கள்.

திருப்தியான வாழ்க்கை

நீங்கள் ஏற்கனவே இங்கு வாழ்ந்திருந்தால் உங்களுக்கு முக்கிய குணங்களான பொறுமை, நேர்மை, சுய ஒழுக்கம் போன்ற்வற்றை பற்றி நன்கு தெரிந்திருக்கும். எனவே நீங்கள் அனைத்திலும் சரியாக இருக்க முயல்வீர்கள். உங்களுக்கு அதிக அனுபவம் இருப்பதால் மற்றவர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்போது அதனை தீர்க்க முதல் ஆளாக நிற்பீர்கள், அந்த பிரச்சினையால் அவர்களுக்கு என்ன நடக்க போகிறது என்பதை உங்களால் முன்கூட்டியே உணர இயலும். எனவே அவர்களுக்கு சரியான பாதையை காட்டுவீர்கள்.

ஏமாற மாட்டிர்கள்

நீங்கள் அப்பாவியாக இருக்க முடியாது. நீங்கள் ஏற்கனவே இங்கு வாழ்ந்தவராய் இருந்தால் மற்றவர்கள் ஆடும் மூளைவிளையாட்டையும், ஏமாற்றும் வித்தையையும் நீங்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள். உங்களை ஏமாற்றும் நோக்கத்துடன் ஒருவர் பேசினால் அவர்களின் நோக்கத்தை முன்கூட்டியே நீங்கள் அறிந்துகொள்வீர்கள்

%d bloggers like this: