Daily Archives: திசெம்பர் 24th, 2018

ஒரே இரவில் ஸ்டாலினால் சாதிக்க முடிந்தது!’ – சசிகலாவிடம் ஆதங்கப்பட்ட அ.ம.மு.க நிர்வாகிகள்

இப்படித்தான், `கர்நாடகாவில் ஒரு ஜட்ஜ்மெண்ட்’ எனச் சொல்லி, கவர்னர்கிட்ட எங்களை மனு கொடுக்க வைத்தீர்கள். ஒவ்வொரு தடவையும் ஜட்ஜ்மெண்ட் உதாரணங்களைச் சொல்கிறீர்கள். ஒரு வழக்கிலாவது ஜெயித்துக் காட்டியிருக்கிறீர்களா..’ எனக் கோபப்பட்டார் அந்த நிர்வாகி.
நாடாளுமன்றத் தேர்தலை இலக்காக வைத்துச் செயல்படத் தொடங்கியுள்ளனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள். `இடைத்தேர்தலில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. டெல்லியில் நமக்கான செல்வாக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், பத்து எம்.பி தொகுதிகளை இலக்காக வைத்து முன்னேறுவோம்’ என சசிகலாவிடம் தெரிவித்துள்ளனர் அக்கட்சி நிர்வாகிகள்.

Continue reading →

கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை!

யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி ஓடுகிறார்கள்? எதனால் பாலியல் பிரச்னைகளை சரி செய்கிறேன் என்று இத்தனை போலி மருத்துவர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள்? நன்றாக யோசித்து பாருங்கள்! Continue reading →

அதிக உணவுக் கட்டுப்பாட்டால் உடல் எடை அதிகரிக்கும்’ – அச்சுறுத்தும் ஆய்வு

மெரிக்காவிலுள்ள வாஷிங்டனில் நடந்த ஒரு ஆய்வில், உணவுக் கட்டுப்பாட்டில் அதிக ஆர்வமாக இருப்பவர்களுக்கு, அளவுக்கதிகமாக சாப்பிடும் ‘உணவு சார்ந்த ஒழுங்கின்மைப் பிரச்னை’ (Binge-eating Disoder) யும் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், அவர்களின் உடல் எடை (Obesity) அதிகரிக்கிறது என்றும், மனநலம், உடல்நலம் சார்ந்த சில பாதிப்புகளும் ஏற்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். உணவு ஒழுங்கின்மை சார்ந்து செயல்படும் சர்வதேச பத்திரிகை (International Journal of Eating Disorders) என்ற தளத்தில், இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

Continue reading →

எந்தெந்தத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு? – தி.மு.க எடுத்த சர்வே

நாடாளுமன்றத் தேர்தல்குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் ஸ்டாலின். தி.மு.க. கூட்டணியில் போட்டியிட உள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகுறித்த பேச்சுக்களும் நடந்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், வேட்பாளர்கள் யார் யார் என்ற பட்டியலை ஜெயலலிதாவைப் போல முதலில் வெளியிடுவதற்கு முடிவு செய்திருக்கிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில், 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க போட்டியிட வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாகக் கூறியிருக்கிறார். கூடவே, எந்தெந்தத் தொகுதிகளில் யாரை நிறுத்த வேண்டும் என்பது குறித்தும் தீவிர ஆலோசனை நடந்துவருகிறது. 

Continue reading →

மருந்தாகும் உணவு – கொள்ளு தால் மக்னி

தினமும் உணவில் சேர்க்கவேண்டிய அளவுக்கு, மிகச் சிறந்த தானியம் கொள்ளு. ரசம், துவையல், சுண்டல், தால் எனச் செய்து சாப்பிடலாம். ரத்தம் உறைதல், சினைப்பை நீர்க்கட்டி, பித்தப்பைக் கல் பிரச்னைகளுக்கு கொள்ளு சிறந்த தீர்வு.

தேவையானவை:

கொள்ளு : அரை கப்

ராஜ்மா : 2 டேபிள்ஸ்பூன்

Continue reading →

குழந்தைகளுக்குத் தனியறை… பரவலாகும் கலாசாரம்

பெட்ரூம் கல்ச்சர்’ (Bedroom  Culture) – இந்த வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா அல்லது இந்த வார்த்தையை நீங்கள் முன்னெப்போதும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மேலைநாடுகளிலுள்ள குழந்தைகள்  பதின்பருவத்தை எட்டிப் பார்த்ததுமே அவர்களுக்கென்று தனியறை ஒதுக்கப்பட்டுவிடும். தங்குதல், தூங்குதல் என்று எல்லாமே அந்த அறையில்தான் அவர்களுக்கு நடக்கும். தங்களுக்கான உலகத்தை அவர்கள் அதில் கட்டமைத்துக்கொள்வார்கள். இப்படி சற்று வயது வந்த

Continue reading →

பத்து எம்.எல்.ஏ-க்களுக்கு குறி… தி.மு.க வேட்டை ஆரம்பம்

ண்ணன் என்னடா… தம்பி என்னடா… அவசரமான உலகத்திலே…” என்று பாடியபடியே வந்தார் கழுகார்.
“புரிகிறது… புரிகிறது. ஓ.பி.எஸ்-ஸின் தம்பி நீக்கம் பற்றித்தானே சொல்லவருகிறீர்…” என்றோம்.
“அடடே, உமக்குக் கற்பூரப்புத்தி… என்ற கழுகார், “ஓ.பி.எஸ்-ன் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப் பட்டிருக்கிறார். ‘கழக உடன்பிறப்புகள் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று தலைமைக் கழகம் 19-ம் தேதி மாலை அறிவித்தது. ஆனால், அன்று காலைதான் அவர் கோலாகலமாக மதுரை ஆவின் தலைவராக  பதவியேற்றுக்கொண்டார். ஆவினில் பலரது அதிருப்திகளுடன் அவர் தலைவர் பதவியைப் பிடித்ததாகக் கிளம்பிய புகாரில்தான், ராஜா கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ‘தன் தம்பியை நீக்க ஓ.பி.எஸ் எப்படி கையெழுத்திட்டார்?’ என்று ஆச்சரியப் படுகிறார்கள்.” “சரி, என்னதான் நடந்தது?”

Continue reading →