2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – மகரம்

மகரம்

ராசிக்கு 10-ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள்.

சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். மற்றவர் களால் செய்ய முடியாத காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வீடு, வாகன வசதிகள் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

செவ்வாய் 5-ல் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், வீடு, மனை வாங்குவது விற்பது சுலபமாக முடியும். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். கடனாக வாங்கிய பணத்தைத் தந்து முடிப்பீர்கள். நீண்ட நாளாகத் தேடியும் கிடைக்காத முக்கிய ஆவணம் கைக்குக் கிடைக்கும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

12.2.19 வரை ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் இருப்பதால், குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள், உடல்நலக் குறைபாடுகள் வந்துபோகும். ஆனால், 13.2.19 முதல் வருடம் முடியும் வரை, கேது 12-லும் ராகு 6-லும் இருப்பதால், மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வந்து சேரும்.

வாழ்க்கைத்துணையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

வருடம் முழுவதும் விரயச் சனி நீடிப்பதால், அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். வேலைச்சுமை அதிகரிக்கும். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. கடன்களால் கௌரவம் குறைந்துவிடுமோ என்று அடிக்கடி கவலைப்படுவீர்கள்.

வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை; 19.5.19 முதல் 27.10.19 வரை குரு லாப வீட்டில் இருப்பதால், உங்களின் செல்வம், செல்வாக்கு கூடும். புதுப் பதவிகள் தேடி வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். திருமணப் பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரமா கவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரப்படியும் குரு 12-ல் மறைவதால், வீண் செலவுகளால் கையிருப்பு கரையும். மற்றவர்களுக் காக ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டாம். சிலருக்கு, திடீர் பயணங்களும் உங்களைப் பற்றிய வதந்திகளும் ஏற்படும். பழைய கடன்களை நினைத்து கவலைப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

வியாபாரிகளே! விரயச் சனி தொடர்வதால், புதுத் தொழில் தொடங்குவதைத் தவிர்ப்பதுடன், பெரிய முதலீடுகள் செய்வதையும் தவிர்ப்பது நல்லது. போட்டிகளைச் சமாளிக்க புது திட்டங்களை செயல் படுத்துவீர்கள். தள்ளிப்போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி, எண்டர்பிரைசஸ், மரம், ஸ்டேஷனரி, கல்வி நிறுவனங்கள், எரிபொருள்கள் வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் சின்னச் சின்ன அவமானங்களைச் சந்திக்கவேண்டி வரும். ஆனாலும், உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் ஏற்படும். சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பார்கள். இழந்த சலுகை களை திரும்பப் பெறுவீர்கள்.

மாணவர்களே! படிப்பதுடன் படித்தவற்றை மறுபடி எழுதிப் பார்ப்பதும் அவசியம். கடினமாக உழைத்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற முடியும். போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் பாராட்டப்படு வீர்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

மொத்தத்தில், இந்தப் புது வருடத்தில்  தடைகள் ஏற்பட்டாலும், உங்களின் விடாமுயற்சியால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்: சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீலட்சுமிகோபாலரை, சனிக் கிழமைகளில் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; வெற்றிகள் குவியும்.

%d bloggers like this: