2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – மீனம்

மீனம்

சுக்கிரன் சாதகமாக இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், பணப் புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். இழுபறியாக இருக்கும் வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழியில் உதவி கிடைக்கும்.

ஆனால், சந்திரன் 8-ல் இருப்பதால், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வறட்டு கௌரவத்துக்காக செலவு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.

செவ்வாய் ராசியில் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். வீடு கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 12.2.19 வரை லாப வீட்டில் கேது இருப்பதால், எவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கும் மனவலிமை கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். ராகு 5-ல் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும்.

13.2.19 முதல் வருடம் முடியும் வரை, ராகு 4-லும் கேது 10-லும் அமர்வதால், வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழி ஏற்படக்கூடும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும்.

வருடம் முழுவதும் சனி 10-ல் இருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். ஆனாலும், உத்தியோகத்தில் சில பிரச்னைகள், வீண்பழிகள் ஏற்படக்கூடும். நெருக்கமானவர்களிடம்கூட குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேலை இல்லாதவர்களுக்கு புது வேலை கிடைக்கும். புதுப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். செலவு களைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை; 19.5.19 முதல் 27.10.19 வரை, குரு உங்கள் ராசிக்கு 9-ல் இருப்பதால், சுபநிகழ்ச்சிகள் அதிகரிக்கும்.

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனை களை ஏற்றுக்கொள்வார்கள். குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கி, அதிக வட்டிக் கடனைத் தந்து முடிப்பீர்கள். நீண்டநாள் களாகச் செல்ல நினைத்த வெளி மாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நண்பர்கள் வீட்டு விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள்.

13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரத்திலும் குரு 10-ல் அமர்வதால், சிறுசிறு அவமானங்கள் ஏற்பட்டு நீங்கும்.

பழைய பிரச்னைகள் மறுபடியும் தலைதூக்குமோ என்பது போன்ற அச்ச உணர்வு ஏற்படும். சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்தப் பார்ப்பார்கள். மற்றவர் களுக்கு அநாவசிய வாக்குறுதி தரவேண்டாம்.

வியாபாரிகளே! லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்து வாடிக்கையாளர் களைக் கவருவீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். அனுபவம் மிக்க வேலையாள்கள் பணியில் சேருவார்கள். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். விரும்பியபடி கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், தோல்பொருள் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.

உத்தியோகஸ்தர்களே! பொறுப்புகள் அதிகரிக் கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பணிகளை முடிப்பதில் சுணக்கம் காட்ட வேண்டாம். சக ஊழியர்கள் மதிப்பார்கள். பதவி உயர்வுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மாணவர்களே! பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். நண்பர்களைச் சரியாகப் புரிந்து கொள்வீர்கள். நினைவாற்றலை அதிகரித்துக் கொள்வீர்கள்.

கலைத்துறையினரே! உழைப்புக்கு ஏற்றப் பலன் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புது வருடம், உங்களின்  செயல் வேகத்தை அதிகப்படுத்துவதுடன், புதிய  முயற்சிகளில் வெற்றிகளை ஈட்டித் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்:  பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை, பிரதோஷ நாளில் தரிசித்து வழிபடுங்கள்; தடங்கல்கள் நீங்கி, நன்மைகள் கைகூடும். 

%d bloggers like this: