Advertisements

2019 – புத்தாண்டு ராசிபலன்கள் -மேஷம்

மேஷம்

ராசிக்கு 7-ம் வீட்டில் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் வேளையில் 2019 புது வருடம் பிறக்கிறது. உங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் ஏற்படும். அழகு, ஆரோக் கியம் கூடும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். தடைப்பட்ட காரியங்கள் சாதகமாகும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

வருடம் பிறக்கும்போது, ராசிநாதன் செவ்வாய் 12-ல் இருப்பதால், திடீர் பயணங்கள் ஏற்படும்.சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சகோதர வகையில் மனக் கசப்புகள் அதிகரிக்கும்.

12.2.19 வரை ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ல் ராகுவும் இருப்பதால், மறைமுக நெருக்கடிகள், தாயாருக்கு முதுகுத் தண்டவடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்து செல்லும். 13.2.19 முதல், வருடம் முடியும் வரை ராசிக்கு 9-ல் கேது அமர்வதால், பிதுர்வழிச் சொத்தில் பிரச்னைகள் ஏற்படும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவைப்படும். அவருடன் மன வருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும்.
ஆனால், ராகு 3-ல் இருப்பதால், மனதில் தைரியம் அதிகரிக்கும். தடைப்பட்ட விஷயங்கள் அனுகூலமாக முடியும். இளைய சகோதர வகையில் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும்.
இந்த வருடம் முழுவதும் சனி 9-ல் இருப்பதால், தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அவசியமான செலவுகள் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு, வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வரும்.
வருடம் பிறக்கும்போது, புதன் சாதகமான வீட்டில் இருப்பதால், உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களுக்கு, நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி முடிப்பீர்கள்.
வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை; பிறகு 19.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ல் இருப்பதால், வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும்.  திடீர் பயணங்களாலும் அதிகரிக்கும் செலவுகளாலும் திணறுவீர்கள்.
13.3.19 முதல் 18.5.19 வரை குரு பகவான் அதிசாரமாகவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை 9-ம் வீட்டிலும் அமர்வதால், செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். சுபநிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தவோ அல்லது புதுப்பிக்கவோ செய்வீர்கள். தந்தையுடன் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும்.
வியாபாரிகளே! பற்று வரவு கணிசமாக உயரும். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு விற்பனையைப் பெருக்குவீர்கள். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். கமிஷன், பதிப்பகம், வாகன உதிரி பாகங்கள் வகையில் லாபம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களே! குரு 8-ல் இருப்பதால் சின்னச் சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். மேலதிகாரிகளின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டாம். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகவும். சிலருக்கு, இடமாற்றம் ஏற்படக்கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.
மாணவர்களே! உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்கள் சந்தேகங்களை ஆசிரியர்களிடன் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுங்கள். கவனத்தோடுப் படித்து உயர்வு பெறுங்கள்.
கலைத்துறையினரே! இந்தப் புத்தாண்டில் சின்னச் சின்ன தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும், புகழும் கௌரவமும் கூடும். பழைய சம்பளப் பாக்கி கைக்கு வரும். புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.
மொத்தத்தில், புது வருடத்தின் முற்பகுதி, உங்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தினாலும், பிற்பகுதி உங்களைச் சாதிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: கோவை மாவட்டம், தாளக்கரை தண்டுக்காரன் பாளையம் எனும் ஊரில் அருளும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை, சுவாதி நட்சத்திர நாளில் தரிசித்து வழிபடுங்கள்; வளம் பெருகும்.

Advertisements
%d bloggers like this: