2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – கடகம்

கடகம்

ராசிக்கு 4-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் வேளையில் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முக்கிய பிரமுகர்களின் வரிசையில் இடம்பிடிக்கும் அளவுக்கு சாதிப்பீர்கள்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கு களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரைகுறையாக தடைப்பட்டு நின்றிருந்த கட்டடப் பணிகள் மீண்டும் தொடங்கும். அதற்கு வங்கிக்கடன் கிடைக்கும். தாய்மாமன், அத்தை வழியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.


வருடம் பிறக்கும்போது செவ்வாய் 9-ல் இருப்பதால் தொட்டது துலங்கும்; புதிய முயற்சிகள் வெற்றியடையும். முன்தொகை கொடுத்து வைத்திருந்த சொத்துக்கு, மீதித் தொகையையும் கொடுத்து பத்திரப்பதிவு செய்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

12.2.19 வரை ராசிக்கு 7-ல் கேதுவும் ராசிக்குள் ராகுவும் நிற்பதால், உடல்நலக் குறைபாடு உண்டா கும். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தைத் தவிர்ப்பது அவசியம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு  12-லும், கேது 6-லும் இருப்பதால், மனப் போராட்டம் ஓயும். கோயில் திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வருவார்கள். உற்சாகம் பிறக்கும். மற்றவர்களை சரியாகப் புரிந்து கொள்வீர்கள்.

ராசிக்கு 6-ல் புதன் இருக்கும்போது புது வருடம் பிறப்பதால் உறவினர்கள், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வருடத் தொடக்கம் முதல் 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.20.19 வரை குரு ராசிக்கு 5-ல் இருப்பதால், நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள், பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர் கல்வி, உத்தியோகம் சிறப்பான முறையில் அமையும். குலதெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர்கள்.

13.3.19 முதல் 18.5.19 வரை மற்றும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ல் மறைவதால், சின்னச் சின்ன வேலைகளையும் போராடித்தான் முடிக்க வேண்டி வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர் களுடன் நேசத்துடன் பழகுங்கள். எவருடனும் வீண் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.

வருடம் முழுவதும் ராசிக்கு 6-ல் சனி இருப்பதால், எதிரிகளும் நட்பு பாராட்டுவார்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். புது வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் நல்ல திருப்பம் ஏற்படும்.

வியாபாரிகளே! பற்று வரவு கணிசமாக உயரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்து வீர்கள். வேலையாள்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். பங்குதாரர்கள் சற்று முரண்டுபிடிப்பார்கள். லாபத்தைக் குறைத்து விற்று வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பீர்கள். கமிஷன், பதிப்பகம், சிமெண்ட், மருந்து வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களே! உங்களுக்குப்  பணிச் சுமை அதிகரிக்கும். பிப்ரவரி 13-ம் தேதி முதல் எதிர்ப்புகள் விலகும். உங்கள்மீது வீண்பழி சுமத்திய அதிகாரி மாற்றப்படுவார். புதிதாக வரும் அதிகாரி அனுசரணையாக நடந்துகொள்வார். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! புதுமையாகச் சில படைப்பு களை வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புது வருடத்தின் முற்பகுதி, உங்களுக்கு அலைச்சலையும் ஆரோக்கியக் குறைவையும் தந்தாலும், வருடத்தின் பிற்பகுதி அதிரடி முன்னேற்றங்களைப் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், இளநகர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீஉமையாம்பிகை சமேத ஸ்ரீஉடையீஸ்வரரைப் பிரதோஷ நாளில் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; பிரச்னைகள் அகலும்.

%d bloggers like this: