2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – கன்னி

கன்னி

ங்கள் ராசிக்கு 2-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் நிலையில் வருடம் பிறப்பதால், பணவரவுக்குக் குறை இருக்காது. தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும். உற்சாகமாக வலம் வருவீர்கள். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

ராசிநாதன் புதன் சாதகமான வீட்டில் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், நண்பர்களின் உதவி கிடைக்கும். நல்ல வசதியான வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். வீட்டில் ஏற்பட்டிருந்த பழுதுகள் நீங்கும்.

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேற்றுமொழி பேசுபவரின் ஆதரவு கிடைக்கும். குலதெய்வக் கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்வீர்கள். புது வேலை கிடைக்கும். கைமாற்றாக வாங்கி இருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

வருடத் தொடக்கம் முதல் 12.2.19 வரை ராசிக்கு 5-ல் கேது இருப்பதால், பிள்ளைகள் அடிக்கடி கோபப்படுவார்கள். அவர்களிடம் உங்கள் எண்ணங் களைத் திணிக்கவேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளைத் தூக்கவேண்டாம். பூர்வீகச் சொத்தை சரியாகப் பராமரிக்க முடிய வில்லையே என்று வருத்தப்படுவீர்கள். ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு.

13.2.19 முதல் வருடம் முடியும் வரை கேது 4-லும் ராகு 10-லும் இருப்பதால், சுற்றியிருப்பவர்களைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்வீர்கள். எதிர்காலம் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது.

வருடம் முழுவதும் சனி சாதகமாக இல்லாத காரணத்தால், மனத்தாங்கல் காரணமாக தாயாரைப் பிரிய நேரிடும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும்.

வீட்டில் களவுபோக வாய்ப்பு இருப்பதால், கவனம் தேவை. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வழக்குகளால் மன அமைதி பாதிக்கப்படக்கூடும்.

வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை; 19.5.19 முதல் 27.10.19 வரை, குரு ராசிக்கு 3-ல் நிற்பதால், புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும்.

13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 4-லிலும் குரு அமர்வதால், இழுபறியாக இருக்கும் வேலைகள் முடியும். ஆனால், தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவருக்குச் சிறுசிறு அறுவை சிகிச்சைகள் செய்ய நேரிடும்.  எனினும், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. அவருடன் அனுசரணை யாக நடந்துகொள்வது நல்லது. சொத்து வாங்கும் போது சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்வது நல்லது. உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும்.

வியாபாரிகளே! லாபம் அதிகரிக்கும். தேங்கிக் கிடக்கும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அதிரடி சலுகைகளை அறிவித்து விற்பனையை அதிகரிப்பீர்கள். பங்குதாரர்கள் வழக்கம்போல் முணுமுணுப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. வேற்று மாநிலத்தைச் சேர்ந்த வேலையாள்களால் நிம்மதி கிடைக்கும். புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். ஏற்றுமதி – இறக்குமதி, கன்ஸ்ட்ரக்‌ஷன், பவர் புராஜெக்ட் வகைகளால் ஆதாயம் உண்டாகும். பெரிய வியாபாரிகளின் அறிமுகம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களே! கூடுதல் நேரம் உழைத் தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. ஆனால், அலுவலகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுக்காக வாதாடி அவர்களுக்கு உரிய சலுகைகளைப் பெற்றுத் தருவீர்கள். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும்.

மாணவர்களே! கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். கலைப்போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். பெற்றோர் அரவணைத்துச் செல்வார்கள்.

மொத்தத்தில், இந்தப் புது வருடம் மன நிம்மதி யையும் ஓரளவு வசதி வாய்ப்புகளையும் அளிப்பதுடன், சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்:
கோயம்புத்தூர் மாவட்டம், பேரூரில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீஆஞ்சநேயரை, சனிக்கிழமைகளில் தரிசித்து வழிபட்டு வந்தால், விருப்பங்கள் தடையின்றி நிறைவேறும்.

%d bloggers like this: