2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – துலாம்

துலாம்

சுக்கிரனும் சந்திரனும் உங்கள் ராசிக்குள் இருக்கும்போது வருடம் பிறப்பதால், இங்கிதமாகவும் இதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும்.

வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்படும். அவ்வப்போது உடல்நலன் சிறிதளவு பாதிக்கும் என்றாலும், உரிய சிகிச்சை யால் உடனே சரியாகிவிடும்.12.2.19 வரை ராசிக்கு 4-ல் கேதுவும் 10-ல் ராகுவும் இருப்பதால், வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். காரியங்களில் தடை ஏற்படும். வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொத்துகள் வாங்குவது விற்பதில் வில்லங்கம் ஏற்பட்டு நீங்கும்.

13.2.19 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ல் அமர்வதால், புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதரர் வகையில் ஆதாயம் உண்டாகும். ராகு 9-ல் இருப்பதால், சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் தடை ஏற்பட்டு நீங்கும். வேற்று மொழி பேசுபவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும்.

செவ்வாய் 6-ல் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், மனப் போராட்டங்கள் குறையும். எதிர்த்தவர்கள் அடங்கிப் போவார்கள். பேச்சில் அனுபவ முதிர்ச்சி வெளிப்படும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

வருடம் முழுவதும் சனி 3-ல் இருப்பதால், திடீர் யோகம் உண்டு. பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதுத் தொழில் தொடங்கு வீர்கள். வாழ்க்கைத்துணைவரின் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. சிலருக்கு வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை; 19.5.19 முதல் 27.10.19 வரை, குரு உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். அனைத்து வகையிலும் நன்மைகள் உண்டாகும்.

குரு பகவான், 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 3-ல் அமர்ந்தும் திகழ்வதால், ஒரே நாளில் பல வேலைகளைச் சேர்த்துப் பார்க்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் ஏற்பட்டு நீங்கும்.

வியாபாரிகளே! தொழிலில் போட்டிகளையும்  எதிர்ப்புகளையும் கடந்து லாபம் சம்பாதிப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். உங்களில் சிலர், வெளிநாட்டு நிறுவனத் துடன் புது ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். கடையைப் புது இடத்துக்கு மாற்றுவீர்கள். வேலையாள்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி வரும். ஸ்டேஷனரி, பேன்ஸி ஸ்டோர், உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களே! 13.2.19 முதல் அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும் அதிகம் உழைக்கவேண்டி வரும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்கச் சற்று போராடவேண்டி இருக்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மனதுக்குப் பிடித்தமான வகையில் இடமாறுதல் கிடைக்கும்.

மாணவர்களே! சாதித்துக் காட்டவேண்டும் என்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கேற்ற உழைப்பும் வேண்டும். அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. மொழித் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்.

கலைத்துறையினரே! வரவேண்டிய சம்பளப் பாக்கி கைக்கு வரும். கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகள் வந்தாலும் பொருட்படுத்தாமல் தைரிய மாக இருப்பீர்கள். புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களுக்குத் தேவையான பண வரவையும், செல்வாக்கையும், பதவிகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், தாழம்பூர் எனும் ஊரில் அருளும் அருள்மிகு திரிசக்தி அம்மனை, வெள்ளிக்கிழமைகளில் தரிசித்து வழிபட்டால் வெற்றிகள் சேரும்.

%d bloggers like this: