2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – விருச்சிகம்

விருச்சிகம்

ங்கள் ராசிக்கு 12-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், சின்னச் சின்ன கனவுகள் நிறைவேறும். கடன் பிரச்னைகளை இதமாகப் பேசி சமாளிப்பீர்கள்.

குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவி செய்வீர்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். விலையுயர்ந்த நவீன சாதனங்கள் வாங்குவீர்கள்.

வருடத் தொடக்கத்திலிருந்து 12.2.19 வரை ராசிக்கு 3-ல் கேது இருப்பதால், எதையும் திட்ட மிட்டுச் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராசிக்கு 9-ல் ராகு இருப்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அடிக்கடி வீண் டென்ஷன் ஏற்படும். தந்தையுடன் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். 13.2.19 முதல் கேது 2-லும், ராகு 8-லும் இருப்பதால், மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்கவும். வெளி வட்டாரத்தில் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. கண்களைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.

வருடம் முழுவதும் ஏழரைச் சனியில் பாதச் சனி நடப்பதால், பல் வலி, காது வலி ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். வெளியிடங்களில் முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பணப் பற்றாக்குறை ஏற்படும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.

ராசிநாதன் செவ்வாய் 5-ல் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. குழந்தையின் வளர்ச்சியை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வது நல்லது. சகோதரர்களால் அலைச்சலும் செலவுகளும் இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்கவும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ளுங்கள். அவர்கள் விரும்பும் கல்விப் பிரிவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.

வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை; 19.5.19 முதல் 27.10.19 வரை, குரு உங்கள் ராசியில் அமர்ந்து ஜன்ம குருவாக இருப்பதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். குடும்பத்தில் அடிக்கடி சச்சரவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கையில் பிடிப்பின்மை ஏற்பட்டு நீங்கும்.

13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரமாகவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரப்படி குரு உங்கள் ராசிக்கு 2-ல் அமர்ந்தும் திகழ்வதால், பணவரவு அதிகரிக்கும். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். ஒதுங்கியிருந்த உறவினர்களும் நண்பர்களும் வலிய வந்து உறவாடுவார்கள். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.

வியாபாரிகளே! வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். வேலையாள்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களைக் கவர புதுப்புது யுக்திகளைக் கையாளுவீர்கள். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு, பிளாஸ்டிக் வகை களால் ஆதாயம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களே! உங்கள் நிர்வாகத் திறமை கூடும். பாரபட்சமாக நடந்துகொண்ட அதிகாரி உங்களைப் பாராட்டும் நிலை ஏற்படும். கூடுதல் சலுகைகள் கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட்டாலும் அதனால் நன்மையே உண்டாகும். ஆனால், ஏழரைச் சனி தொடர்வதால் மறைமுக பிரச்னைகள் இருக்கும். சக ஊழியர்களுடன் அளவோடு பழகவும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

மாணவர்களே! தேர்வுகளில் எதிர்பார்த்தபடி அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வர். நல்ல நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். 
 
கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்பு களால் முன்னேறுவீர்கள். வெளிநாட்டு நிறுவனங் களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

மொத்தத்தில், இந்தப் புது வருடம் உங்களின் திறமையை அதிகப்படுத்துவதுடன், பணப் புழக்கத்தையும் வெற்றியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: மதுரை மாவட்டம், பேரையூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமியைப் பூசம் நட்சத்திரத்தன்று தரிசித்து வழிபட்டு வாருங்கள்; சுபிட்சம் உண்டாகும்.

%d bloggers like this: