Advertisements

2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – எளிய பரிகாரங்களுடன்…

கனவுகள் நனவாகும்! – புத்தாண்டு பொதுப் பலன்கள்
நிகழும் விளம்பி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை, தட்சிணாயனம் ஹேமந்த ருதுவில், கிருஷ்ணபட்சத்து தசமி திதியில், சமநோக்கு கொண்ட சித்திரை நட்சத்திரம் – துலாம் ராசி, கன்னி லக்னத்திலும், அதிகண்டம் நாமயோகம், பவம் நாமகரணம், நேந்திரம் ஜீவனம் நிறைந்த அமிர்தயோக நன்னாளில், நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி குரு பகவானின் ஆதிக்கத்தில் (2+0+1+9=3)இந்த ஆண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
இந்த வருடத்தின் லக்னம் மற்றும் வருடப்பிறப்பு நாளின் விதி எண் (5) உள்ளிட்ட பல அம்சங்கள் புதனின் ஆதிக்கத்தில் வருவதால் மக்களிடையே விழிப்பு உணர்வு பெருகும். ஜனநாயகம் தழைக்கும். பள்ளி மாணவர் களிடையே பொது அறிவு வளரும். விளையாட்டில் உலக அரங்கில் மாணவர்கள் சாதிப்பார்கள். விளையாட்டுத் துறையில் இந்தியா சாதிக்கும்.

 

பாடத்திட்டம் நவீனமாகும். இண்டர்நெட், ஆன்லைன், வாட்ஸப் பயன்பாடு அதிகமாகும். மாணவர்களிடையே தவறான பழக்கவழக்கங்கள் வந்து விலகும். சிவில் சர்வீஸ் தேர்வுகளை அதிகமானவர்கள் எழுதுவார்கள். அரசாங்க வேலையை அதிகமானவர்கள் விரும்புவார்கள். இளைஞர்களிடையே சுயதொழில் ஆர்வமும் அதிகமாகும். அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு கூடும். வருடம் பிறக்கும்போது சூரியனும் சனியும் ஒன்றாக இருப்பதால், அரசியல் தலைவர்கள் கண்ணியம் தவறி நடந்து கொள்வார்கள். மத நல்லிணக்கம் குறையும். கோவா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அரசியல் நெருக்கடிகள் ஏற்படும். மகாராஷ்டிர மாநிலம் தீவிரவாதிகளால் மீண்டும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும். ராணுவ ரகசியங்கள் கசியும். மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பிப்ரவரி மாதம் முதல் ராமர் கோயில் விவகாரம் தீவிரமாகும்.
5.5.19 முதல் 9.8.19 வரை உள்ள காலக் கட்டத்தில் நாடெங்கும் இன, மத மோதல்கள், தீவிரவாதிகளால் அரசியல் தலைவர்களுக்கு ஆபத்து, மத்தியில் ஆட்சி அமைப்பதில் இழுபறி, பிரதமருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும்.
இந்தக் காலக்கட்டத்தில் நிலநடுக்கங்கள் மற்றும் புயல்களால் சேதம் அதிகமாகும். பாலியல் மற்றும் கிரிமினல் குற்றங்கள், வாகன விபத்துகள் கூடுதலாகும். தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சேலம், தர்மபுரி, கோவை, கிருஷ்ணகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இயற்கைச் சீற்றங்கள் அதிகரிக் கும். டெல்டா மாவட்டங்களில் பதற்றம் நீடிக்கும்.
மிதுன ராசியில் ராகு வந்து அமர்வதால், சாஃப்ட்வேர் துறையில் மீண்டும் வேலை வாய்ப்பு அதிகமாகும். கம்ப்யூட்டர் இன்ஜினியர் கள் செழிப்படைவார்கள். அதேநேரம், சைபர் கிரைமும் அதிகமாகும். பெட்ரோல், டீசல் மற்றும் தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும். தனுசில் சனியும் கேதுவும் இணைவதால் பொருளாதாரம் இறங்குமுகமாகும். அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சியடையும். பணவீக்கம் அதிகமாகும். மழைப்பொழிவு, உணவு உற்பத்தி குறையும். ரியல் எஸ்டேட் தொடர்ந்து மந்தமடையும்.
சித்திரை நட்சத்திரத்தில் வருடம் பிறப்பதால், சொந்த வீடு வாங்குவது போன்ற நீண்டநாள் கனவுகள் பலிக்கும். பெண் குழந்தைகளைப் புதிய நோய்கள் தாக்கும், பெண்களுக்கு மாதவிடாய் ஹார்மோன், கர்ப்பப் பை, நீர்க்கட்டி ஆகிய பாதிப்புகள் அதிகமாகும்.
வருடம் முழுவதும் தனுசில் சனி பகவான் நிற்பதாலும் கேது இணைவதாலும் அரசியலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும். ரயில்வே மற்றும் வங்கித்துறைகள் நவீனமாகும்.

Advertisements
%d bloggers like this: