Daily Archives: திசெம்பர் 25th, 2018

2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – ரிஷபம்

ரிஷபம்

ராசிக்கு 6-ல் சந்திரன் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் நழுவ விடாமல் பயன்படுத்தி  முன்னேறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வலிமை ஏற்படும். புது வேலை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.

வருடம் பிறக்கும்போது ராசிக்கு 11-ல் செவ்வாய் இருப்பதால்,செல்வம், செல்வாக்கு உயரும். அனுபவத்தைப் பயன்படுத்தி காரியம் சாதிப்பீர்கள். முக்கியமான சில முடிவு களைத் துணிந்து எடுப்பீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பீர்கள். Continue reading →

2019 – புத்தாண்டு ராசிபலன்கள் -மேஷம்

மேஷம்

ராசிக்கு 7-ம் வீட்டில் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் வேளையில் 2019 புது வருடம் பிறக்கிறது. உங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் ஏற்படும். அழகு, ஆரோக் கியம் கூடும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். தடைப்பட்ட காரியங்கள் சாதகமாகும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

வருடம் பிறக்கும்போது, ராசிநாதன் செவ்வாய் 12-ல் இருப்பதால், திடீர் பயணங்கள் ஏற்படும்.சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சகோதர வகையில் மனக் கசப்புகள் அதிகரிக்கும்.

Continue reading →

2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – எளிய பரிகாரங்களுடன்…

கனவுகள் நனவாகும்! – புத்தாண்டு பொதுப் பலன்கள்
நிகழும் விளம்பி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை, தட்சிணாயனம் ஹேமந்த ருதுவில், கிருஷ்ணபட்சத்து தசமி திதியில், சமநோக்கு கொண்ட சித்திரை நட்சத்திரம் – துலாம் ராசி, கன்னி லக்னத்திலும், அதிகண்டம் நாமயோகம், பவம் நாமகரணம், நேந்திரம் ஜீவனம் நிறைந்த அமிர்தயோக நன்னாளில், நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி குரு பகவானின் ஆதிக்கத்தில் (2+0+1+9=3)இந்த ஆண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
இந்த வருடத்தின் லக்னம் மற்றும் வருடப்பிறப்பு நாளின் விதி எண் (5) உள்ளிட்ட பல அம்சங்கள் புதனின் ஆதிக்கத்தில் வருவதால் மக்களிடையே விழிப்பு உணர்வு பெருகும். ஜனநாயகம் தழைக்கும். பள்ளி மாணவர் களிடையே பொது அறிவு வளரும். விளையாட்டில் உலக அரங்கில் மாணவர்கள் சாதிப்பார்கள். விளையாட்டுத் துறையில் இந்தியா சாதிக்கும்.

Continue reading →

பிரசவத்துக்குப் பிறகு… சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு

ச்சி முதல் பாதம் வரை கர்ப்பிணியின் உடலுக்குள் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்துவது கர்ப்ப காலம். உடல் பருக்கும். சருமத்தில் கரும்புள்ளிகளும் சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். வாயைச் சுற்றிய சருமம் உலர்ந்துபோகும்.  கருவைச் சுமந்த வயிற்றில் தழும்புகள் ஏற்படும். கொத்துக் கொத்தாகக் கூந்தல் உதிரும். இவை எல்லாமே தற்காலிகமானவைதான். பத்து மாதங்கள் உடலுக்குள் நிகழ்ந்த ஹார்மோன் மாற்றங்கள்

Continue reading →

ஒட்டுண்ணிகள் நிகழ்த்தும் மாய விளையாட்டு!

வெனம் (Venom)… சமீபத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம். கதாநாயகனை ஏலியன் ஒட்டுண்ணி (Parasite) தாக்கிவிடும். அந்த ஒட்டுண்ணியால் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. அதன் இயக்கத்துக்கு ஓர் ஓம்புயிர் (Host) தேவை. அதனால், அந்த ஏலியன் ஒட்டுண்ணி, கதாநாயகனான ஓம்புயிரிடம் ஓர் ஒப்பந்தம் செய்து இணக்கமாகிவிடும். ஒட்டுண்ணியும் ஓம்புயிரும் சேர்ந்து செயல்படுவார்கள். இதனால், கதாநாயகனுக்குப் புது சக்தி கிடைக்கும். கதாநாயகன் சூப்பர் ஹீரோவாக மாறிவிடுவான்.

நிஜ வாழ்க்கையில் இது சாத்தியமில்லை. ஒட்டுண்ணியால் ஓம்புயிருக்கு ஒரு காலத்திலும் நன்மை செய்ய முடியாது. ஒட்டுண்ணி தனது வாழ்க்கைச் சுழற்சிக்கு ஓம்புயிரையே சார்ந்திருக்கும். ஓம்புயிரின் உடலில் அது மறைந்திருந்து, தேவையான ஆற்றலைக் கிரகித்துக்கொள்ளும்.

Continue reading →