வயாகரா முதல் வைப்ரேட்டர் வரை…
இவை எல்லாமே ரகசியமாக அதிகமாக தேடப்படுபவை. பருவமடைந்த மனிதர்கள் வாங்கிப் பயன்படுத்த விரும்பும் பொருட்கள் இவை. ஆனாலும் இதைப் பற்றியெல்லாம் நாம் வெளிப்படையாக அதிகம் பேசிக் கொள்வதில்லை. அவைதான் Sex Toys. இந்தியாவில் செக்ஸ் டாய்ஸ் உற்பத்தி செய்வதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இவை ஆன்லைனில் கொட்டிக் கிடக்கின்றன. தாராளமாக விற்பனையாகியும் வருகின்றன.
இதற்கு உதாரணமாக சில மாதங்களுக்கு முன் வெளியான அந்தச் செய்தி இது தொடர்பாக நம்மை யோசிக்கச் செய்கிறது. சீனாவில் இருந்து அதிகளவில் கள்ளத்தனமாக செக்ஸ் டாய்ஸ் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. Continue reading →
பலன் சொல்லும் கைகள்!
கைரேகை சாஸ்திரத்தின் அடிப்படையில் ரேகைகளைப் பார்த்து பலன் சொல்லும் முறையை அறிவோம். அதேபோல், கைகளின் அமைப்பைப் பொறுத்தும் ஒருவருடைய குணநலன்களை அறியலாம் என வழிகாட்டுகிறது ரேகை சாஸ்திரம்.
குடம்புளி – வாழ்நாளை நீட்டிக்கும் மாமருந்து!
இயற்கையின் அழகு களி நடனமிடும் சேர நாட்டுக்கென (கேரள மாநிலத்துக்கு) பல பெருமைகள் உண்டு. அந்த வரிசையில் `குடம்புளி’யும் ஒன்று. அஞ்சறைப் பெட்டிக்குத் துணையான மண்பானையில் இடமளிப்பதோடு, சமையலில் கட்டாயம் சேர்க்கவேண்டிய நறுமணமூட்டி குடம்புளி. இன்றைய தலைமுறைக்கு குடம்புளி அதிகம் பரிச்சயம் இல்லாமலிருந்தாலும், அது கொடுக்கும் பலன்களுக்காகப் பரிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
கருவே கலையாதே! – வலி தீர்க்கும் வழிகள்
அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. என் வயிற்றில் இரட்டைக் கரு வளர்கின்றன என்று மருத்துவர் கூறியபோது… அவ்வளவு மகிழ்ச்சி, அவ்வளவு கனவுகள் என் கண்முன்னே! ‘நிஜமாவே எனக்கு இரட்டைக் குழந்தைகளா, டாக்டர்?’ என்று மருத்துவரிடம் மறுபடியும் கேட்டேன். ‘ஆமாம்மா! நல்லா ஹெல்த்தியா சாப்பிடுங்க!’ என்று கூறினார். வீட்டில் ஒரே குதூகலம், கொண்டாட்டம். ஆனால், சில வாரங்கள் கழித்து, எனக்கு மாதவிடாய் வருவதுபோல் இருந்தது. கொஞ்சம் உதிரம் கசிந்தது. உடனே டாக்டரைப் போய் பார்த்தேன். ‘ஒரு கரு கலைந்துவிட்டது; மற்றொன்றும் சீக்கிரமே கலைந்துவிடும் நிலையில் இருக்கிறது’ என்று கூறினார். உடைந்துபோனேன். என்னுள் ஒரு பாதியையே இழந்ததுபோல இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அந்த சோகத்திலும் வலியிலும் துடித்தேன்!” – தோழி ஒருவரின் வார்த்தைகள் இவை.