Monthly Archives: திசெம்பர், 2018

ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி! இனி அதுக்கு கவலை இல்லை!

பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். ” National Vaccine Remainder ” என்று இதற்குப் பெயர்.
Continue reading →

கோக் குடிக்கிறதுக்கு மட்டும்னு நெனச்சீங்களா? வேற என்னலாம் பண்ணலாம்னு வாயை பிளந்து பாருங்க…

ஆச்சர்யங்கள்

அதைப்பற்றி கேள்விப்பட்டீர்கள் என்றால், ஆச்சர்யத்தில் வீட்டின் கொக்கோ – கோலாவை வாங்கி அடுக்கி வைத்துக் கொள்வீர்கள். சரி வாங்க. எப்படி எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்த்துவிடலாம்.

ஏனென்றால் இதில் பேக்கிங் சோடாவில் சோடியம் கார்பனேட் உள்ளடங்கி இருக்கிறது. அதனால் பேக்கிங் சோடாவில் உள்ள அத்தனை நன்மைகளும் இதிலும் உங்களுக்குக் கிடைக்கும்.

ஆஸ்துமாவை குணப்படுத்த
Continue reading →

உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா? – அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்

இந்தியாவின் அனைத்து கணினியிலுள்ள தகவல்களை கண்காணிக்கவும், பயன்படுத்தவும், வேண்டுமென்றால் அவற்றில் மாற்றம் செய்யவும் 10 அரசு முகமைகளுக்கு அதிகாரம் அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள உத்தரவு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Continue reading →

எரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. இது, தினசரி கார் பயன்படுத்துவோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெட்ரோல், டீசலுக்கு செலவிடும் தொகையை  கட்டுக்குள் வைத்திருக்க சில டிப்ஸ்…
Continue reading →

வயாகரா முதல் வைப்ரேட்டர் வரை…

இவை எல்லாமே ரகசியமாக அதிகமாக தேடப்படுபவை. பருவமடைந்த  மனிதர்கள் வாங்கிப் பயன்படுத்த விரும்பும் பொருட்கள் இவை. ஆனாலும் இதைப் பற்றியெல்லாம் நாம் வெளிப்படையாக அதிகம் பேசிக் கொள்வதில்லை. அவைதான் Sex Toys. இந்தியாவில் செக்ஸ் டாய்ஸ் உற்பத்தி செய்வதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இவை ஆன்லைனில் கொட்டிக் கிடக்கின்றன. தாராளமாக விற்பனையாகியும் வருகின்றன. 

இதற்கு உதாரணமாக சில மாதங்களுக்கு முன் வெளியான அந்தச் செய்தி இது தொடர்பாக நம்மை யோசிக்கச் செய்கிறது. சீனாவில் இருந்து அதிகளவில் கள்ளத்தனமாக செக்ஸ் டாய்ஸ் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. Continue reading →

பலன் சொல்லும் கைகள்!

கைரேகை சாஸ்திரத்தின் அடிப்படையில் ரேகைகளைப் பார்த்து பலன் சொல்லும் முறையை அறிவோம். அதேபோல், கைகளின் அமைப்பைப் பொறுத்தும் ஒருவருடைய குணநலன்களை அறியலாம் என வழிகாட்டுகிறது ரேகை சாஸ்திரம்.

Continue reading →

குடம்புளி – வாழ்நாளை நீட்டிக்கும் மாமருந்து!

யற்கையின் அழகு களி நடனமிடும் சேர நாட்டுக்கென (கேரள மாநிலத்துக்கு) பல பெருமைகள் உண்டு. அந்த வரிசையில் `குடம்புளி’யும் ஒன்று. அஞ்சறைப் பெட்டிக்குத் துணையான மண்பானையில் இடமளிப்பதோடு, சமையலில் கட்டாயம் சேர்க்கவேண்டிய நறுமணமூட்டி குடம்புளி. இன்றைய தலைமுறைக்கு குடம்புளி அதிகம் பரிச்சயம் இல்லாமலிருந்தாலும், அது கொடுக்கும் பலன்களுக்காகப் பரிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். 

Continue reading →

கருவே கலையாதே! – வலி தீர்க்கும் வழிகள்

ந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. என் வயிற்றில் இரட்டைக் கரு வளர்கின்றன என்று மருத்துவர் கூறியபோது… அவ்வளவு மகிழ்ச்சி, அவ்வளவு கனவுகள் என் கண்முன்னே! ‘நிஜமாவே எனக்கு இரட்டைக் குழந்தைகளா, டாக்டர்?’ என்று மருத்துவரிடம் மறுபடியும் கேட்டேன். ‘ஆமாம்மா! நல்லா ஹெல்த்தியா சாப்பிடுங்க!’ என்று கூறினார். வீட்டில் ஒரே குதூகலம், கொண்டாட்டம். ஆனால், சில வாரங்கள் கழித்து, எனக்கு மாதவிடாய் வருவதுபோல் இருந்தது. கொஞ்சம் உதிரம் கசிந்தது. உடனே டாக்டரைப் போய் பார்த்தேன். ‘ஒரு கரு கலைந்துவிட்டது; மற்றொன்றும் சீக்கிரமே கலைந்துவிடும் நிலையில் இருக்கிறது’ என்று கூறினார். உடைந்துபோனேன். என்னுள் ஒரு பாதியையே இழந்ததுபோல இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அந்த சோகத்திலும் வலியிலும் துடித்தேன்!” – தோழி ஒருவரின் வார்த்தைகள் இவை.

Continue reading →

2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – மீனம்

மீனம்

சுக்கிரன் சாதகமாக இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், பணப் புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். இழுபறியாக இருக்கும் வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழியில் உதவி கிடைக்கும்.

ஆனால், சந்திரன் 8-ல் இருப்பதால், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வறட்டு கௌரவத்துக்காக செலவு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.

Continue reading →

2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – கும்பம்

கும்பம்

ங்கள் ராசிக்குப் பாக்கிய ஸ்தானத்தில் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும்போது வருடம் பிறப்பதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் நல்லபடி முடியும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். செலவுகளும் ஏற்படும். முக்கிய பிரமுகர் களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

Continue reading →