Monthly Archives: ஜனவரி, 2019

ஒரு ஆணை ஒரு பெண் முதன்முதலில் தொடும்போது உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்..?

தொட்டால் பூ மலரும்..!

ஒரு பெண் ஒரு ஆணை தொடும் போது உண்மையில் பூ போல அந்த ஆண் மலர தொடங்குவான். காற்றில் மிதப்பது போன்ற உணர்வை அந்த தொடுதல் உண்டாக்கும்.

எவ்வளவு தான் பிறர் மீது கோபம், சண்டை, வெறுப்பு இருந்தாலும் அந்த பெண் தொடும் போது மட்டும் மொத்த உயிரும் சிலிர்த்து போய் விடும்.

தடை செய்யப்பட்டது..!
Continue reading →

ஏகாதசி விரதம் இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள் !!

image

தை மாத தேய்பிறை ஏகாதசி ச‌பலா ஏகாதசி எனப்படும். இது பாவநிவர்த்தி கொடுக்கும் இன்றைய தினத்தில் பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கும் இல்லறம் இனிக்கும் தை மாத ஏகாதசியில் பெருமாளை விரதமிருந்து வணங்குவதால் சகல சம்பத்துகளுடன் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது ஐதீகம், மனிதர்களாக பிறந்த நாம் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும்.
Continue reading →

வேகமான வாழ்க்கையில் என்னங்க சுவாரஸ்யம் இருக்கு.. இதை படிங்க!

வேகமான வாழக்கைக்கு வேகத்தடை போடும் திறமையை கடவுள் பெண்களின் கையில் கொடுத்திருக்கார். பெண்கள் நினைத்தால்வீடும் கோயிலாகும்.

இதுகுறித்து நமது வாசகர் கலை எழுதியுள்ள ஒரு சிறு கட்டுரை.

வேகமான வாழ்க்கை சூழலும் இதனால் நாம் செயல்படும் வேகத்தில் கோபமும், இப்படிப்பட்ட கோபத்திலே வாழ்க்கையை கடந்து செல்லும் நமக்கு ஒரு அமைதி தேவைங்க.
Continue reading →

பொலிவான சருமம் எந்த நிறத்தையும் வசீகரமாக்கும். ஏன் தெரியுமா?

பல வருடங்களாகவே, இந்தியர்கள் ஃபேர் அண்டு லவ்லி சருமம் தான் அழகு என்ற கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர். மாநிறமுடைய பெண் வசீகரமான தோற்றத்துடன் இருந்தாலும் வெள்ளை தோல் இல்லாத காரணத்தால் அத்தனை வரவேற்பை பெற முடிந்ததில்லை. இந்தியர்கள் வெள்ளை சருமம் முதல் மாநிற சருமம் வரை பல வகையான சரும நிறத்தை கொண்டுள்ளனர். ஆனால் அதில் வெளுப்பான சருமம் கொண்டவர்களே மற்றவர்களை விட அழகானவர்கள் என்ற எண்ணம் வெகு காலமாக இருந்து வந்தது. ஆனால் அந்த நிலை தற்போது மாறி வருகிறது. இன்று பழுப்பு நிறமும் வெள்ளை சருமத்துக்கு இணையாக கருதப்படும் நிலை உருவாகிவிட்டது. பாலிவுட்டிலும் ஃபேஷன் துறையிலும் தற்போது மாநிறத்து தேவதைகள் பெருமையுடன் தங்களது பழுப்பு நிறத்தை தாங்கி உலா வருகின்றனர்.

Continue reading →

தலைமுடி மெலிவதற்கான காரணங்கள் என்னென்ன

தலைமுடி சிறிதளவு தினமும் கொட்டுவது சாதாரணமான ஒன்றாகும். அதை எண்ணி கவலி ஏற்படுவதும் இயற்கை தான் ஆனால் ஒரு சாதாரண மனிதன் 80-100 ரோமங்களை ஒரு நாளில் இழப்பது உண்மை தான். திடீரென தலைமுடி அதிகம் கொட்டுவதும் புதிதாக ரோமங்கள் முளைக்காமல் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மேலே படியுங்கள்.

சரி முடி கொட்டுவதும் மெலிவதும் எதனால் ஏற்படுகிறது? இதற்கு பல காரணங்கள் இருக்கும் என்பதால் ஒரு குறிப்பிட்ட காரணத்தை மட்டுமே குறிப்பிட்டு கூற முடியாது. முதலில் இதனை எண்ணி பீதியடையாமல் இருக்க வேண்டும். தனது வாழ்நாளில் மூன்றில் ஒரு பெண் தலை முடி கொட்டும் பிரச்சினையை எதிர்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. பெரும்பாலும் இது தானாகவே சரியாகி விடும்.

Continue reading →

உங்களின் கேபிள், DTH சேவைகளின் புதிய கட்டணம் எவ்வளவு?

புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் நேரம் வந்துவிட்டது. இதில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் சேனல்களை வைத்து புதிய சந்தா விலை என்னவென்று எளிமையாகக் கண்டறிவது எப்படி?

ரும் பிப்ரவரி 1-ம் தேதி கேபிள் மற்றும் டிடிஹெச் சேவைகளின் விலையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இந்தப் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ள டிராய் அதைத் திரும்பப்பெறுவதாகவும் தெரியவில்லை. கூடுதல் காலஅவகாசம் கொடுக்கப்போவதாகவும் தெரியவில்லை. எனவே நீங்கள் இதுவரை இதுதொடர்பாக எதுவும் செய்யவில்லை என்றால் முதல்கட்டமாக எந்தெந்த சேனல்கள் தேவை என்பதைத் தேர்வு செய்தாக வேண்டிய நேரம் இது. தேர்ந்தெடுத்தபின்

Continue reading →

LGPT

பதின் பருவக் குழந்தைகளுக்கு இயல்பிலேயே ஒரு பதற்றம் நெஞ்சுக்குள் இருக்கும். ஆண், பெண் இரு பால் குழந்தைகளின் பெற்றோருக்கும் தன் குழந்தை பாலியல் ரீதியாக பாதிக்கப்படக் கூடாது என்ற அச்சம் இருக்கும்.

இதற்கிடையில் குழந்தைகள் சந்திக்கும் பாலினக் குழப்பங்களைக் கையாள்வதைப் பற்றி பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை. ஓர் ஆண் குழந்தை ஒரு ஹோமோ செக்ஸுவல் என்பதை உணர்ந்து பெற்றோரிடம் சொல்கிறதென்றால் அதைப் பெற்றோர் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? அந்தக் குழந்தையை எவ்விதம் கையாள வேண்டும் என்று விளக்கம் அளிக்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.

அந்த 15 வயதுப் பையன் அம்மாவிடம் சொல்கிறான், ‘அம்மா நான் ஹோமோ செக்ஸுவல்’ என்று… Continue reading →

அழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்!

மேக்கப் போட்டா ஒருவரை அழகாக்கலாம்… இது பழசு. மேக்கப் மூலம் ஒருவரை டிரான்ஸ்பார்ம் செய்ய முடியும்…இது புதுசு என்கிறார்  ராதிகா. கடந்த 21 வருஷமாக மேக்கப் மற்றும் சிகை அலங்காரத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார். சாதாரண அழகுக்கலை  நிபுணராக இருந்தவர் தற்போது மாடலிங், விளம்பர துறையில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் முக்கிய ஸ்டைலிஸ்டாக வலம்  வருகிறார்.‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே மேக்கப் செய்து கொள்ள பிடிக்கும். வீட்டில் எப்போதும் கண்ணாடியில முகம் பார்த்து பவுடர்,  லிப்ஸ்டிக் ேபாட்டுக் கொண்டு இருப்பேன். Continue reading →

மூக்கு பற்றி இவையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

பொதுவாக நாம் மூக்கு பற்றி அதிகம் பேசுவதில்லை. அது பற்றிய தகவல்களும் அவ்வளவாக வெளிவருவதில்லை. நாம் உயிர் வாழ முக்கியத் தேவையான, சுவாச மண்டலத்தின் மிக முக்கியமான பகுதியான மூக்கு பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி?! மூக்கின் உட்புறம் கோழை மற்றும் முடியினால் சூழப்பட்டுள்ளது. மூச்சுக்காற்று சூடாகவும் ஈரப்பதம் நிறைந்ததாகவும் காணப்பட்டு பாக்டீரியா அல்லது அழுக்கு நுரையீரலைச் சென்றடையும் முன்பு வடிகட்டப்பட்டுவிடுகிறது. மூக்கு, நுகர்தலுக்கான உறுப்பும்கூட. அது சைனெஸஸ் (Sinuses) எனும் காற்றுக் குழியறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Continue reading →

டிரை பிரஷ்ஷிங்… பலே பலன்கள்!

குளிக்கும்போது உடலுக்கு பிரஷ் பயன்படுத்தும் பழக்கம் பலருக்கும் இருக்கும். குளிப்பதற்கு முன்பு பிரஷ் பயன்படுத்துவது பற்றித் தெரியுமா? சருமம் முழுவதையும் மிருதுவாக பிரஷ் செய்து, பிறகு குளிக்கச் செல்லலாம். இதை ‘டிரை பிரஷ்ஷிங்’ (Dry Brushing) என்பார்கள்.  

* சருமத்தில் சேரும் கொழுப்பினால், பின்புறத்திலும் தொடையிலும் தடிப்புபோல ஒன்று ஏற்படும். இது, `செல்லுலைட்’ (Cellulite) எனப்படும். இது சருமத்தில் அதிகமாகச் சேர்ந்தால், ஒவ்வாமை ஏற்பட்டு, கட்டிகளாக மாற வாய்ப்பிருக்கிறது. டிரை பிரஷ்ஷிங் செய்வதால், செல்லுலைட் உருவாவது தடுக்கப்படுவதுடன், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் வரும்முன் தடுக்கலாம்.

Continue reading →