40 வயதை தாண்டும் ஆண்கள் எந்த நோயும் அண்டாம இருக்க இந்த 5 பொருளையும் சாப்பிடணும்

Life begins at forty’ என்பார்கள். அப்படிப்பட்ட நாற்பது வயதில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். வாழ்க்கையில் ஒரு விதமாக செட்டில் ஆகி நாற்பதை கடக்கும் போது தான் நமது ஆரோக்கியம் அவசியமாகிறது. 40 வயதில் இளமை தோற்றத்தை பெறுவது அவ்வளவு சுலபமல்ல.

பொறுப்புகளும், டென்ஷனும் தலைதூக்கி இருந்தாலும் உங்கள் ஆரோக்கியத்தை பேண இதுவே சரியான நேரம். அதற்காக நீங்கள் நிறைய மெனக்கெடல்களை செய்ய வேண்டாம். சில உணவுகளை உங்கள் உணவில் சேர்த்து கொண்டாலே போதும் நாற்பதிலும் நீங்கள் ஹீரோ தான். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

முழு தானியங்கள்

40 வயது தாண்டியபின்

40 வயதிற்கு பிறகு உணவில் நார்ச்சத்து சேர்த்துக் கொள்வது அவசியம். இது உங்கள் குடல் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. சீரணமின்மை, மலச்சிக்கல், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் வராது. முழு தானியங்களில் ஏராளமான விட்டமின்கள், தாதுக்கள் இருப்பதால் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். நார்ச்சத்து உணவுகள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் தாக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளும். எனவே தினசரி உணவில் நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

நட்ஸ்

40 வயதை அடைந்தவர்கள் கண்டிப்பாக நட்ஸ் சாப்பிட வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்துகள், புரோட்டீன், அன்சேச்சுரேட்டேடு கொழுப்புகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்றவை உடலுக்கு வலிமையையும், நோயெதிர்ப்பு சக்தியையும் தருகிறது. நீங்கள் ஆபிஸில் இருக்கும் போது கூட இதை ஸ்நாக்ஸ் ஆக எடுத்து கொண்டு வரலாம்.

பால்

நாற்பது வயதை அடைந்த ஆண்கள் பலரும் சந்திக்கின்ற பிரச்சினை கை, கால் மற்றும் மூட்டு வலி பிரச்சினைகள். இது உங்கள் உடம்பில் போதிய கால்சியம் இல்லாததை காட்டுகிறது. எனவே உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க தினசரி பால் அருந்துங்கள். இதன் கால்சியம் சத்து எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கும்.

க்ரீன் டீ

க்ரீன் டீயை ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் இருப்பிடம் என்றே கூறலாம். இதை தவறாமல் பருகி வரும் போது கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுதல், நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தம் செய்தல், இதய நோய்கள் வராமல் தடுத்தல், வயிற்று பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

மூலிகைகள்

மூலிகைகள் இயற்கையின் வரப்பிரசாதம் ஆகும். இதில் ஏராளமான நோய் களுக்கான மருந்துகள் பொதிந்துள்ளன. 40 வயதில் ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு மருந்து மாத்திரைகள் சாப்பிடாமல் இயற்கை மூலிகைகளை சாப்பிடலாம். இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. எளிதான வழியும் கூட. உதாரணமாக மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது அலற்சி, தலைவலி, சலதோஷம் மற்றும் உடல்வலிக்கு நிவாரணம் அளிக்கும்.

இந்த உணவுகளுடன் உடற்பயிற்சியும் செய்து வந்தால் 40 என்ன அறுபதிலும் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

%d bloggers like this: