ஆண்களே! மலட்டு தன்மையை உங்கள் வீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உருவாக்குகின்றன..!

விஷம் கொண்ட உலகம்..!

நாம் இருக்க கூடிய எல்லா இடங்களிலும் நம்மை ஒரு வித விஷ தன்மை, கால்களை சுற்றிய பாம்பு போல சுற்றி வருகின்றன. இவை தான் நம் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி சாப்பிட கூடியவை.

நாம் பயன்படுத்தும் வீட்டு பொருட்களில் இந்த நச்சு தன்மை அதிக அளவில் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் அவ்வளவு தான்..!

Non-stick பாத்திரங்கள்

பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் இந்த Non-stick பாத்திரங்கள் அதிக அளவில் இருக்கும். சுலபமாக சமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நாம் பயன்படுத்தும் இந்த பொருள் அதிக விஷ தன்மை கொண்டதாம்.

காரணம் இவற்றை தயாரிக்க பயன்படுத்தும் perfluorooctanoic acid என்கிற கொடிய விஷ தன்மை கொண்ட அமிலங்கள் தான். இது புற்றுநோயை செல்களை உருவாக்கும் தன்மை கொண்டதாம்.

ரூம் ஸ்பீரியர்ஸ் (Room spray)

வாசனை மிக்க இடமாக நமது வீடு இருக்க வேண்டும் என்கிற உங்கள் ஆசை தான் உங்களுக்கு மரண மேடையாக மாறி விடுகிறது. ஆமாங்க, ந பயன்படுத்தும் இந்த வகை ரூம் ஸ்பீரியர்களில் 2, 5-dichlorophenol என்கிற வேதி பொருட்கள் கலந்துள்ளன.

இவை குழந்தைகளுக்கு பருவமடைதல் செயலை தடுத்து விடும். மேலும், சுவாச கோளாறுகள், நுரையீரல் பாதிப்பு, அதிக மன அழுத்தம் போன்றவையும் ஏற்பட கூடும்.

மரபணு மாற்றப்பட்டதா..?

இன்று எதை தொட்டாலும் அதில் மரபணு மாற்றப்பட்ட தன்மை கொண்ட உணவுகள் உள்ளன. இந்த வகை உணவுகள் தான் குழந்தை இன்மை, மலட்டு தன்மை, விந்தணு குறைபாடு போன்ற பிரச்சினைகளை இந்த காலத்தினருக்கு ஏற்படுத்துகிறது.

அந்தரங்க உறுப்பு நோய்கள்..!

மைக்ரோவேவ்-வில் நாம் பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக்கிற்கும் இதே தன்மை தான் உள்ளது. இந்த வகை பிளாஸ்டிக் ஆண்களின் வாழ்வை சீரழிக்கும் தன்மை கொண்டது.

காரணம் இதிலுள்ள Bisphenol A மற்றும் Bisphenol S என்கிற நச்சு பொருள் ஆணுறுப்பை பாதித்து, புற்றுநோயை உண்டாகுமாம்.

செயற்கை சர்க்கரைகள்

வீட்டில் இருக்க கூடிய உணவுகள் பொருட்களே நமக்கு எமனாக மாறினால் எத்தகைய கொடுமையாக இருக்கும்..! சர்க்கரை என்கிற பெயரில் இன்று நாம் பயன்படுத்தும் அதிக சுத்திகரிப்பு தன்மை உள்ள சர்க்கரைகளை உணவில் சேர்த்து கொண்டால் புற்றநோய் ஏற்பட்டு மரணம் உறுதியாகும்.

பிளாஸ்டிக்கும் நோய்களும்..!

இப்போது தான் தமிழகத்தில் பிளாஸ்டிகிற்கு தடை வந்துள்ளது. இருப்பினும் நம்மில் பலர் பிளாஸ்டிக்கை வேறு விதங்களில் பயன்படுத்தி வருகின்றோம்.

பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் பாக்ஸ் ஆகியவற்றில் நாம் சூடாக எந்த உணவை வைத்து சாப்பிட்டாலும் மரணம் நமக்கு தான்.

சோப்புகள்

உடலில் இருக்க கூடிய அழுக்குகள் நீங்கவும், வாசனையுடன் இருக்கவும் பெரும்பாலும் நாம் சோப்பை உபயோகிப்போம். இவற்றில் triclosan என்ற மூல பொருள் அதிக அளவில் இருந்தால் சருமத்தை பாதிக்கும்.

மேலும், கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை பாதித்தல், உடல் பருமன், தைராய்டு போன்ற கோளாறுகளும் ஏற்படும்.

ஹேண்ட் வாஷ் லிக்வீட்

எதை செய்தலும் காய் கழுவும் பழக்கம் கொண்ட பலருக்கும் தான் இந்த பதிவு. கையை எப்போதுமே ஹேண்ட் வாஷ் லிக்வீட்களை பயன்படுத்தி கழுவினால் கிருமிகள் அழிவதோடு வேதி பொருட்கள் உங்களின் கையில் அதிக அளவில் ஒட்டி கொள்ளும். இவை அந்த கிருமிகளை விட மிக ஆபத்தானவை என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

இயற்கையே சிறந்தது..!

நம் முன்னோர்கள் எப்போதுமே மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்ததற்கு முக்கிய காரணமே இயற்கை வழிகள் தான். அவர்களின் வாழ்வும் இயற்கையும் ஒரு சேர இருந்ததால் தான் 100 வருஷத்துக்கும் மேல் சொந்த உழைப்பில் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

எனவே, நம் வீட்டில் இருக்க கூடிய பொருட்களில் வேதி தன்மை குறைந்தாலே நம் ஆயுள் தானாகவே கூடும்

%d bloggers like this: