குளிர்காலத்தில் குழந்தைகள் பராமரிப்பு

* குளிர்காலத்தில் குழந்தைகள் பராமரிப்பு எப்படி இருக்க வேண்டும்?
குளிர்காலத்தில் குளிரும், பனியும் அதிகமாக இருப்பதால் தகுந்த உடையளிந்து தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அதிகாலை பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு குளிர்தாங்கும் படி உடைகள், ஷூ போன்றவை அணிந்து அனுப்ப வேண்டும். குழந்தைகள் குடிப்பதற்கு ஜில்லென்று தண்ணீர் கொடுக்கக் கூடாது. சற்று வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க கொடுக்கலாம்.

தூங்கும் பொழுது பாய் பயன்படுத்தினால் குளிர் தாங்கும். குழந்தைகளை வெறும் தரையில் தூங்க வைக்கக்கூடாது. உடல் முழுவதும் நன்றாக போர்த்தி கொள்ள வேண்டும்.
முகத்தை போர்வையால் மூடிக்கொள்ள கூடாது. கிருமி பாதிப்பு வராமல் இருப்பதற்கு கொதிக்கவைத்த நீரையே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக குளிர்காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறாமல் இருப்பதால் தோலில் சற்று உலர் தன்மை ஏற்படும். எனவே குழந்தைகளுக்கு கால், கைகளில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விட வேண்டும்.
* குளிரில் குழந்தைகளை விளையாட விடலாமா?
மிக அதிகமான குளிரும், பனியும் நிலவும் பகுதிகளில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக்கூடாது.
* குளிர் காலத்தில் முதியோர் பராமரிப்பு எப்படி இருக்க வேண்டும்?
குளிர் காலத்தில் பெரிதும் பாதிக்கப்படுவது முதியோர் தான். பொதுவாக குளிர் காலத்தில் உடம்பில் உள்ள ரத்த நாளங்கள், முக்கியமாக தோலில் உள்ள ரத்த நாளங்கள் சுருக்கமடையும். அந்த ரத்த நாளங்கள் சுருங்கும் போது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ரத்தக்குழாய் அடைப்பால் ஏற்படும் வாய்ப்பு வயதானவர்களுக்கு ஏற்படலாம். இருதய நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சளிபிடிக்கவும் வாய்ப்புண்டு. சர்க்கரை நோயாளிகளில் தானியங்கி நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டோருக்கு உடம்பில் உள்ள வியர்வை சுரப்பிகள் செயலிழந்து இருக்கும். எனவே, குளிர் காலத்தில் வியர்வையே வராது.
தொடர்ந்து தோலில் வியர்வை வராவிட்டால் தோல் உலர் தன்மை அடைந்து விடும். தோலில் அரிப்பு ஏற்படும். அரிக்கும்போது அது புண்ணாகி மிகவும் பெரிய புண்ணாகும் வாய்ப்புண்டு. முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் வெடிப்பு ஏற்படும். இந்த கால் வெடிப்பு கால் புண் வருவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விடும். எனவே வயதானவர்கள் முக்கியமாக நடை பயிற்சி செய்யும்போது குளிர் முடிந்தவுடன் நடை பயிற்சி செய்வது நல்லது.
* சளி பிடிக்கும் போது ‘ஆவி’ பிடிப்பது நல்லதா? அது சரயானதா?
சூடான நீராவி சளியை இளக வைக்கக்கூடியது. வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளால் மூக்கிலும், மூக்குக்கு அருகில் உள்ள சைனஸ் பகுதிகளிலும் இறுகியிருக்கும். இதனால் சளி கெட்டியாக இருக்கும். அந்த கெட்டியான சளியை ஆவி பிடிப்பதன் மூலம் இளக செய்து மூக்கு வழியாக நீராக வெளியேற்றலாம். எனவே, சளி இருக்கும் போது ஆவி பிடிக்கலாம். அவசியம் ஏற்படின் ஆவி பிடிக்க மருந்துகள் உள்ளன.
டாக்டர் ஜெ. சங்குமணி,
சர்க்கரை நோய் நிபுணர், மதுரை
sangudr@yahoo.co.in

%d bloggers like this: