தலைமுடி மெலிவதற்கான காரணங்கள் என்னென்ன

தலைமுடி சிறிதளவு தினமும் கொட்டுவது சாதாரணமான ஒன்றாகும். அதை எண்ணி கவலி ஏற்படுவதும் இயற்கை தான் ஆனால் ஒரு சாதாரண மனிதன் 80-100 ரோமங்களை ஒரு நாளில் இழப்பது உண்மை தான். திடீரென தலைமுடி அதிகம் கொட்டுவதும் புதிதாக ரோமங்கள் முளைக்காமல் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மேலே படியுங்கள்.

சரி முடி கொட்டுவதும் மெலிவதும் எதனால் ஏற்படுகிறது? இதற்கு பல காரணங்கள் இருக்கும் என்பதால் ஒரு குறிப்பிட்ட காரணத்தை மட்டுமே குறிப்பிட்டு கூற முடியாது. முதலில் இதனை எண்ணி பீதியடையாமல் இருக்க வேண்டும். தனது வாழ்நாளில் மூன்றில் ஒரு பெண் தலை முடி கொட்டும் பிரச்சினையை எதிர்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. பெரும்பாலும் இது தானாகவே சரியாகி விடும்.

பின்வரும் காரணிகளை நீங்கள் அறிந்து கொள்ள் வேண்டியது அவசியமகும்:

  • பரம்பரை ரீதியான காரணிகள்:

பெரும்பாலான நேரங்களில், பரம்பரை ரீதியாக தலைமுடி மெலிதல் காணப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தலை முடி மெலிதாகும் நிலை ஏற்படுகிறது.

  • எதிர்வினை காரணங்கள்

வெளிப்புற காரணிகள் ஏதோ ஒன்றினால் தலை முடி உதிர்தல் மற்றும்/அல்லது மெலிதல் ஏற்படுகிறது. அதன் காரணம் மன அழுத்தம், மோசமான டயட், குறிப்பிட்ட நௌய், மாசு ஆகியவற்றில் ஏதோ ஒன்றாக இருக்கக் கூடும்.

சில காரணிகளை நாம் இப்போது விவரமாக காண்போம்:

1. குறைபாடுகள்

புரதம், விட்டமின் B12 மற்றும் இரும்புச் சத்து குறைபாடு அதீத முடியுதிர்வை ஏற்படுத்தலாம்.

இதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? அதிக புரதம், கீரைகள், கேரட் மற்றும் சப்ளிமெண்டுகளை நீங்கள் உணவில் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட விட்டமின்களான B12 ஆகியவை அசைவ உணவுகளில் தான் காணப்படும். எனவே நீங்கள் சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்பவர் என்றால் சப்ளிமெண்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.

2. மனஅழுத்தம்

மன அழுத்தம் இருந்தால் கூந்தல் உதிரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். மன அழுத்தம் உங்களது ஹார்மோன்களை நிலை தடுமாற செய்து தலை முடியை பாதிக்கும்.

அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? தியானம் செய்யுங்கள். உங்களுக்கென சிறிது நேரத்தை செலவிடுங்கள். ஹெட் மசாஜ்களை . போதிய ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

3. டயட்டில் செய்யும் திடீர் மாற்றங்கள்

சரியான மற்றும் சரி விகித உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது உங்களது கூந்தலையும் சருமத்தையும் பாதிக்கும்.

அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? சத்து மிகுந்த டயட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். போதிய நீர் சத்தினை கொண்டிருப்பதும் அவசியம்.

4. வயது

இந்த ஒரு காரணம் உங்களது தலை முடியின் அடர்த்தியை குறைய செய்யும் முக்கியமான ஒன்றாகும். இது இயற்கையான நடைமுறையாகும்.

இதற்கு நீங்கள் என்ன செய்யலாம்t? தரமான எண்ணெயில் ஆயில் மசாஜ்களை செய்வது உங்கள் கூந்தல் மீண்டும் வளர உதவும்.

5. அடிக்கடி ஸ்டைலிங் செய்வது

நீங்கள் ப்ளோ ட்ரை, ஸ்ட்ரெயிட்டனிங், கலர் மற்றும் கர்ல் ஆகியவற்றை அடிக்கடி செய்வதால் உங்களது கூந்தலில் அடர்த்தி குறையும். இதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? உங்களது கூந்தலுக்கு சில நேரங்களில் பிரேக் கொடுப்பது அவசியம்.

ஹீட் பாதுகாப்பு பொருட்கள் மற்றும் வாரத்துக்கு ஒரு முறை தைலங்களை பயன்படுத்துவது அவசியம். உங்களது தலைமுடி வகைக்கு ஏற்ப ஷாம்பூ மற்றும் கண்டீஷனர்களை பயன்படுத்த வேண்டும்.

இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன். இதில் முக்கியமான ஒரு விஷயம், தலைமுடி உதிர்வை எண்ணி நீங்கள் கவலைப்படாமல் இருப்பதாகும். மருத்துவரை கலந்தாலோசியுங்கள் மற்றும் இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள். உங்களது சிக்கல் சரியாகிவிடும்!

%d bloggers like this: