Monthly Archives: ஜனவரி, 2019

பாய்சனாகுமா பாரசிட்டமால்?

குழந்தைக்குக் காய்ச்சல் எனில், உடனே பாரசிட்டமால் கொடுக்கும் பெற்றோர்கள், அதன் அளவு மற்றும் மருந்து கொடுக்கும் இடைவேளைகளை கவனத்தில்கொள்வதில்லை. இது  ஆபத்தானது. பாரசிட்டமாலைப் பொறுத்தவரை, அதன் அளவு மிக முக்கியம். அனைத்து வயதினருக்குமே, மிக முக்கியமாகக் குழந்தைகளுக்கு, அதிகபட்சம் இவ்வளவுதான் அளிக்க வேண்டும் என்கிற அளவுகோல் இருக்கிறது. அந்த அளவு, குழந்தைகளின்

Continue reading →

வயிற்று உப்புசம் தவிர்ப்பது எப்படி?

ரே காஸ் பிரச்னை… என்னால முடியலை…’, `வயிறு கல் மாதிரி இருக்கு, பசி எடுக்குறதே இல்லை, சரியா சாப்பிடவும் முடியலை…’ என்பன போன்ற புலம்பல்களை அடிக்கடி கேட்டிருப்போம். வயிறு நிறைய சாப்பிட்டாலும், எதுவும் சாப்பிடாவிட்டாலும் சிலருக்கு வயிறு உப்புதல் என்பது அடிக்கடி நிகழும் பிரச்னை. சிலருக்கு, கடுமையான வயிற்றுவலியும் சேர்ந்து படுத்தி எடுத்துவிடும். வயிற்று உப்புசம் ஏற்பட என்ன காரணம், அது என்ன மாதிரியான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும், அதற்கான தீர்வுகள் என்னென்ன என்று விவரிக்கிறார் குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணன். 

உப்புசம் ஏற்படுவது ஏன்?

Continue reading →

365 நாளும் குளிக்கலாம்!

குளிர்காலம் ஆரம்பிச்சாச்சு. காலையில் வெயில் கொளுத்தினாலும், மாலை நேரத்தில் லேசாக பனிப்படர துவங்கியுள்ளது. எதை  தொட்டாலும் ஜில்லென்று இருக்கு. தண்ணீரும் ஜில்லுனு இருப்பதால், நாளை குளிக்கலாம்ன்னு குளியலை தவிர்ப்பவர்களுக்கு தினமும்  குளிப்பதன் அவசியம் நிச்சயம் தெரிந்திருக்காது. குளியல் என்பது உடலில் உள்ள அழுக்குகளை மட்டும் போக்குவதற்கு அல்ல. வெயிலோ  அல்லது குளிர்காலமோ எதுவாக இருந்தாலும், உடலில் இருந்து வெளியாகும் வெப்பத்தை தணித்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும்.  Continue reading →

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!

அழகிய பாதங்களைப் பெற

பெடிக்யூரில் அழகைவிட ஆரோக்கியமே முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. நம் முகத்தை பளிச்சென வெளிப் படுத்த எத்தனையோ வழிமுறைகளை முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதில் சிறிதளவு கவனத்தைக்கூட பாதங்களுக்கு நாம் கொடுப்பது இல்லை. நமது மொத்தஉடலையும் தாங்கும் பாதங்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஏற்கனவே நாம் குறிப்பிட்டபடி பாதங்களில் உள்ள நுண் துளைகள் வழியாக காலில் உள்ள அழுக்குகள் நம் ரத்தத்தோடு கலக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பாக பாதங்களை நன்றாக அழுத்தி சுத்தம் செய்துவிட்டு படுக்கச் செல்கிறோம். அதுவே எப்போதும் நல்லதும் கூட. Continue reading →

இரவு உணவை இப்படி சாப்பிட்டால் உங்களுக்கு ஆயுள் இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?

ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் குறைவான உணவுகள்

இந்த வகையான உணவுகளை சாப்பிட அறிவுறுத்த முக்கிய காரணம் இந்த உணவுகள் எளிதில் செரிமானம் அடைந்துவிடும். இரவு நேரத்தில் அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிடுவது உங்கள் தூக்கத்தை கெடுப்பதுடன் அடுத்தநாள் காலையில் தலைவலியையும் உண்டாக்கும்.

தயிருக்கு பதில் மோரை பயன்படுத்தவும்
Continue reading →

குளிர்காலத்தில் குழந்தைகள் பராமரிப்பு

* குளிர்காலத்தில் குழந்தைகள் பராமரிப்பு எப்படி இருக்க வேண்டும்?
குளிர்காலத்தில் குளிரும், பனியும் அதிகமாக இருப்பதால் தகுந்த உடையளிந்து தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அதிகாலை பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு குளிர்தாங்கும் படி உடைகள், ஷூ போன்றவை அணிந்து அனுப்ப வேண்டும். குழந்தைகள் குடிப்பதற்கு ஜில்லென்று தண்ணீர் கொடுக்கக் கூடாது. சற்று வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க கொடுக்கலாம்.

Continue reading →

மருந்தாகும் உணவு – மஞ்சள் ஊறுகாய்

றுகாயின் வேலையே, செரிமானத்துக்குத் தேவையான நொதிகளைத் தூண்டுவதுதான். அதனால்தான் உணவு வரிசையில் கடைசியாகப் பரிமாறப்படுகிறது. அறுசுவையில் மூன்று சுவைகளான புளிப்பு, உப்பு, காரம் மூன்றும் ஒருசேர கிடைத்தால்தான், செரிமானத்துக்கான நொதிகள் நன்கு தூண்டப்படும். இதுவே இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளும், செரிமான நொதிகள் தூண்டப்படுவதை மெதுவாக்கும். நம் உணவில் அதிகம் சேர்க்கப்படுபவை இவைதான் என்பதால்தான், கடைசியாக ஊறுகாயைச்  சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. அதேநேரம், செரிமானத்துக்கான நொதிகள் அதிகமாகச் சுரப்பதும் நல்லதல்ல. அதனால் உடல் உஷ்ணம் தொடர்பான பல தொந்தரவுகள் ஏற்படக்கூடும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும்போது வயிற்றுப்புண், ரத்தம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, மிகக் குறைந்த அளவில் ஊறுகாயை எடுத்துக்கொள்ளவும்.

Continue reading →

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்!

ல வருடங்களுக்குமுன்பு, தொலைபேசியைப் பயன்படுத்தவே தடுமாறிய மக்களின் கைகளில், இன்று ஆண்ட்ராய்டு போன்கள் எப்படி வெகு சாதாரணமாகப் புழங்குகிறதோ, அதேபோன்று அன்று பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போன்றவையெல்லாம் சூதாட்டம் என்றும், இது நமக்குச் சரிப்பட்டுவராது என்றும் ஒதுங்கியவர்கள், இன்று இந்த முதலீட்டுத் திட்டங்களின் பக்கமாக கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள். இந்த முதலீட்டுத் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை அதன் லாபகரமான செயல்பாடுகள் மற்றும் அவை தரும் சிறந்த வருமானம் பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் பரவலாக அறிந்துகொண்டு, முதலீட்டை அதிகரிக்கும் மக்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துகொண்டே வருகிறது. இத்தகைய முதலீட்டின்போது, நம்மையறியாமல் நாம் சில தவறுகளைச் செய்துவிடுகிறோம். அந்தத் தவறுகள் என்னென்ன, அந்தத் தவறுகளைச் செய்யாமல் இருப்பது எப்படி என்பதை கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

நாமினியைக் குறிப்பிடத் தவறுதல்

Continue reading →

சின்ன பிரச்னையல்ல – சினைப்பை நீர்க்கட்டி!

பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் மகளும், ‘கேதார்நாத்’ திரைப்படத்தின் நாயகியுமான சாரா அலிகான், தனக்கு `பி.சி.ஓ.எஸ்’ எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி  பாதிப்பு இருந்ததாக சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூறியிருந்தார். அதன் காரணமாகவே, அவருக்கு உடல் எடை வேகமாக அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். சாரா மட்டுமல்ல, இந்தியாவில் வருடத்துக்கு     பத்து லட்சம் பெண்கள், `சினைப்பை நீர்க்கட்டி’ எனப்படும் பி.சி.ஓ.எஸ் (Polycystic Ovary Syndrome) பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள்.

Continue reading →

வரியைச் சேமிக்கும் 30 வழிகள்..!

ம்மில் பலருக்கு எந்த முதலீட்டுக்கு அல்லது எந்தச் செலவுக்கு எவ்வளவு வருமான வரிச் சலுகை கிடைக்கும் என்கிற விவரம் தெரியாமலே இருக்கிறது. இதனால் வரிச் சலுகை தரும் திட்டங்களில் முதலீடு செய்யாமல், ஏதேதோ திட்டங்களில் பணத்தைப் போடுகிறார்கள். இங்கே நாம் சொல்லியிருக்கிற வருமான வரியைச் சேமிக்கும் 30 வழிகளின்படி நீங்கள் நடந்தால், வருமான வரியைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும்!

பொதுவாக, 60 வயதுக்கு உட்பட்டவர்களின் நிதி ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்போது, வருமான வரி கட்ட வேண்டிவரும். 60 வயதுக்கு மேல் 80 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த வரம்பு ரூ.3 லட்சமாகவும், 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்தக் குடிமக்களுக்கு ரூ.5 லட்சமாகவும் உள்ளது.

Continue reading →