ஆண்கள் மருத்துவரிடம் கேட்க மறுக்கும் அந்த’ 10 கேள்விகள் இதோ..!

உறுப்புகள் வளைந்துள்ளதா..?

தனக்கான அந்தரங்க பிரச்சினைகளை யாரிடம் பேசி தீர்வு காண்பது என்கிற மன குழப்பத்தில் பல ஆண்கள் உள்ளனர். அதிலும் தனது பிறப்புறுப்பு வளைந்த தன்மையுடன் இருப்பது சரியா தவறா என்பதை கூட கேட்க

தயங்குகின்றனர்.

பொதுவாக இது போன்று வளைந்து இருந்தால் உடலுறவு கொள்ளும் போது அதிக வலி ஆண்களுக்கு உண்டாகும். ஆதலால், இது போன்றே கேள்விகளை கட்டாயம் மருத்துவரிடம் கேட்க வேண்டும்.

விந்து வெளியேற்றம்

உறவில் இணைவதற்கு முன்னரே விந்து வெளியேறினால் அதை ஆண்கள் மிக மோசமானதாக கருதுகின்றனர். இது தனது பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள கோளாறோ என்கிற சந்தேகத்துடனே பல ஆண்கள் வாழ்கின்றனர்.

இது போன்ற நிலை ஏற்பட்டால் உங்கள் இணை கருத்தரிப்பது கடினமே. எனவே, இந்த சந்தேகத்தை அவசியம் மருத்துவரிடம் கேட்டு விடுங்கள்.

ஆண்மை இருக்கா..? இல்லையா..?

இன்று பல ஆண்கள் தயங்க கூடிய விஷயம் இது தான். தான் ஆண்மையுடன் தான் இருக்கிறேனா..? என்னால் உறவில் ஈடுபட முடியுமா..? என்கிற கேள்வியை மருத்துவரிடம் பலர் கேட்க தயங்குகின்றார்கள்.

இது பிரச்சினையாக இல்லாமல் இருந்தால் நல்லது. ஆனால், நீங்கள் சந்தேகப்பட்டது உண்மையானால்.?! ஆகவே எதுவாக இருந்தாலும் தயக்கம் இல்லாமல் கேட்டு விடுங்கள்.

விரைகளில் பிரச்சினையா..?

சில ஆண்களுக்கு தனது விரைகளில் முன்பை விட சில மாற்றங்கள் தென்பட தொடங்கும். ஆரம்ப நிலையில் இதை கண்டு கொள்ள மாட்டார்கள்.

அதன் பின் பெரிய அறிகுறிகள் ஏற்பட்டதும் இதை பற்றி யாரிடம் கேட்பது என தயங்கி நிற்பார்கள். இதற்கான சிறந்த நபர் உங்கள் மருத்துவரே.

அளவு சிறியதா..?

உடலுறவின் போது தந்து பிறப்புறுப்பு சிறியதாகவே உள்ளது; இதனால் எனது துணையை திருப்தி படுத்த முடியவில்லை என பல ஆண்கள் மன உளைச்சலில் புழுங்கி உள்ளனர்.

இது போன்ற நிலை உங்களுக்கும் இருந்தால் சற்றும் தயங்காமல் மருத்துவரிடம் கேட்டு விடுங்கள்.

விறைப்பு தன்மை

காலை நேரத்தில் விறைப்பு தன்மை பல ஆண்களுக்கு ஏற்படுவதில்லை. இது பிரச்சினையா..? இல்லை இதுதான் சரியா..? என்கிற குழப்பம் பல ஆண்களுக்கு உள்ளது.

பெரும்பாலும் இந்த நிலை ஏற்படுவதற்கு அதிக கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், ஹார்மோன் குறைபாடு, புகை மற்றும் மது பழக்கம் காரணமாக இருக்கலாம். இந்த கேள்வியை தவறாமல் கேட்டு விடுங்கள். இல்லையேல் பிரச்சினை உங்களுக்கு தான்.

பெரிய மார்பகங்களா..?

மார்பகம் என்பது ஒரு மட்டுமே. அதை பெரிய அளவில் நினைத்து கொண்டு பல ஆண்கள் தனது மார்பக பிரச்சினைகளை பற்றியும் பேசுவதில்லை.

மார்பகங்கள் பெரிதாக இருந்தால் டெஸ்டோஸ்டெரோன் என்கிற ஹார்மோன் குறைவாக உடலில் சுரக்கிறது என்றே அர்த்தம். இதை தவிர நீங்கள் நினைப்பது போன்று வேறு எதுவுமில்லை.

ஆர்வம் குறைவா..?

பல ஆண்களுக்கு தாம்பத்திய வாழ்வில் பிரச்சினை உண்டு. இதில் இருக்க கூடிய முக்கிய பிரச்சினையே உறவில் நாட்டம் இல்லாதது தான். இதை தனது துணையுடன் கூட தெரிவிக்க மாட்டார்கள்.

இது போன்ற நிலை உங்களுக்கு இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில், இது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றி விட கூடும்.

பிறப்புறுப்பில் துர்நாற்றமா..?

பல ஆண்கள் இந்த கேள்வியை கேட்க அதிகம் தயங்குவார்கள். தனது பிறப்புறுப்பில் ஒரு விதமான நாற்றம் ஏற்பட்டால் அது உடல் நலத்தில் குறைபாடு உள்ளதை குறிக்கிறதாம்.

துர்நாற்றம் பிறப்புறுப்பில் அதிகமாக வீசினால் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்பட்டுள்ளதை உணர்த்துகிறது. எனவே, தயக்கம் இல்லாமல் இதை பற்றி மருத்துவரிடம் கேளுங்கள்.

ஏன் இரத்தம் வருகிறது..?

தனது ஆணுறுப்பில் ஏற்பட கூடிய உதிர போக்கை பற்றி ஆண்கள் பல வித கேள்விகள் வைத்துள்ளனர். சில ஆண்கள், தான் ஆண்தானா..? என்கிற அளவுக்கு யோசித்து கொண்டு மன உளைச்சலுக்கு ஆளுகின்றனர்.

இது போன்ற உதிர போக்கு இருந்தால் தயங்காமல் மருத்துவரிடம் கேட்டு விடுங்கள். ஏனெனில், இது குடல் வகை புற்றுநோயாக கூட இருக்கலாம்.

%d bloggers like this: