Daily Archives: பிப்ரவரி 2nd, 2019

இன்று இந்த வருடத்திற்கான முதல் சனிப்பிரதோஷ விரதம்

இன்று இந்த வருடத்திற்கான முதல் சனிப்பிரதோஷ விரதம்

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். பிற தோஷங்களை நீக்கும் வலிமை பிரதோஷத்திற்கு உண்டு. சிவனுக்கு உகந்த விஷேசங்களில் பிரதோஷமும் ஒன்று. அதிலும் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது.

சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

இன்று அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.

சனி மகாபிரதோஷத்தின் 17 பலன்கள்!

சனி மகாபிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்..

1. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம்  பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால்  சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது.

2. பிரதோஷ காலம் என்பது மாலை 4 மணியில் இருந்து 6.30 வரை என சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனைத் தரிசிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் இறைவனுக்கும் நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது.

Continue reading →

இரண்டே வாரம்தான் அவகாசம்!’ – ஆளுநர் பிரம்மாஸ்திரத்தால் பதறும் எடப்பாடி பழனிசாமி

ஓரளவுக்குத்தான் அவர்களை எதிர்க்க முடியும். இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு ஆட்சியை நடத்த வேண்டும். தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வோடு தி.மு.க சேர்ந்து கொண்டு ஆட்சியைக் கவிழ்த்துவிடக் கூடாது’ என அச்சப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி.

`அ.தி.மு.க-வோடு கூட்டணி அமையும்’ எனத் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். `நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் பா.ஜ.க-வின் தயவு தேவைப்படலாம் என்பதால் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ச்சியான வழக்குகளால் ஆட்சிக்கான ஆபத்தும் பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

Continue reading →

அ.ம.மு.க.வைக் கட்டுப்படுத்தும் மூன்று சக்திகள்!"

தினகரனின் நம்பிக்கையைப் பெற்ற இம்மூவரும் கட்சியில் தீவிரமாகச் செயல்படுவது மற்ற சில நிர்வாகிகளின் கண்களை உறுத்துகிறது.”

செந்தில்பாலாஜியின் தி.மு.க. அட்டாக், பிணையப்படும் வழக்குகள், தெளிவாகாத கூட்டணி என்று அடுத்தடுத்த தாக்குதல்களால் நிலைகுலைந்து போயிருக்கிறார், அ.ம.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். இந்தப் பஞ்சாயத்துகள் போதாதென்று, உட்கட்சிக்குள்ளேயே மாவட்டச் செயலாளர்கள் மோதிக்கொள்வது அடுத்த தலைவலியை உருவாக்கியுள்ளது. இப்படியிருக்கும் நிலையில், அ.ம.மு.க-வை மூன்று சக்திகள் கட்டுப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.

Continue reading →

நண்பர்களுடன் இந்த தகவலை பகிர்ந்து கொள்வது உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை உண்டாக்கும் தெரியுமா?

உங்கள் துணையை பற்றிய செய்திகள்

ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தன்னுடைய துணையை பற்றிய தகவல்களை ஒருபோதும் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. உங்கள் துணையை பற்றி பேசலாம், ஆனால் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை கூறவேண்டிய அவசியமில்லை. உங்கள் நண்பர்களும் அதை தெரிந்து கொண்டு எதுவும் செய்யப்போவதில்லை.

உறவு சிக்கல்கள்
Continue reading →

மருத்துவ குறிப்புகள்

1. ஒரு 30 வினாடிகள்…
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்…
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
Continue reading →