Advertisements

ஸ்டாலினுக்கு குறிவைக்கும் மோடி! – ஐ.பி ரிப்போர்ட்… ஐ.டி ரெய்டு

மிழகத்தின் முக்கியமான இடங்களில் ஐ.டி ரெய்டு நடக்கும் என்று கடந்த இதழில் சொல்லிச் சென்றீர். ஆனால், அந்த இதழ் கடைக்கு வருவதற்குள்ளாகவே ரெய்டு நடந்தேறிவிட்டதே?” என்றவாறு, பூங்கொத்துக் கொடுத்து கழுகாரை வரவேற்றோம். காலரைத் தூக்கிவிட்டபடி, செய்திகளுக்குள் புகுந்தார் கழுகார்.
‘‘ஆம்… ரெய்டு நடக்கும் என்று நான் சொன்ன அன்றே ரெய்டு தொடங்கிவிட்டது. நடக்கப்போவதைச் சொல்வதுதானே நம்ம ஸ்டைல். கடைசி ஓவரில் அடித்து ஆடுவதைப் போல, இருக்கும் சில நாள்களில், பிற கட்சிகளுக்கு எப்படியெல்லாம் நெருக்கடி கொடுக்கலாம் என்பதில் பி.ஜே.பி அரசு மண்டையை

உடைத்துக்கொண்டிருக்கிறது. முதலில் அ.தி.மு.க-வை வழிக்குக் கொண்டு வர ஐ.டி.ரெய்டுதான் உதவியது; இப்போது, தி.மு.க-வுக்கு குறிவைக்கப்பட்டுள்ளது. இது, தி.மு.க-வைத் திக்குமுக்காட வைத்து, தேர்தல் நேரத்தில் நிலைகுலைய வைக்கும் வகையிலான ஏற்பாடு. தன்னுடைய அஸ்திரம் குறிதவறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, நிறையவே யோசித்து யோசித்துத்தான் பி.ஜே.பி தரப்பு, ஐ.டி ரெய்டு எனும் இந்த அஸ்திரத்தை ஏவியுள்ளது!’’
‘‘வணிக நிறுவனங்களில் நடக்கும் ரெய்டு களுக்கும், தி.மு.க-வுக்கும் என்ன சம்பந்தம்?’’
‘‘மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியைக் கடுமையான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். இது மோடி தரப்பை ஏகத்துக்கும் கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. அதிலும் சில நாள்களுக்கு முன், தர்மபுரியில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‘ஜெயலலிதா மரணத்தில் மோடியையும் விசாரிக்க வேண்டும்’ என்று கொளுத்திப்போட்டது, டெல்லியின் கோபத்தை அதிகப்படுத்திவிட்டது. தமிழிசை சௌந்திரராஜன், ‘ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா மர்ம மரணத்தில் ஸ்டாலினை விசாரிக்க வேண்டும்’ என்று உடனடியாக வாய் திறந்தார். தற்போது நடந்திருக்கும் வருமான வரித்துறை ரெய்டுக்கும், இந்த வார்த்தைப் போருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார்கள்!’’
‘‘இன்னும் தெளிவாகச் சொல்லும்!’’
‘‘லோட்டஸ் குழுமங்கள், ரேவதி குழும நிறுவனங்கள், ஜி ஸ்கொயர் உள்ளிட்ட பல இடங்களில், கடந்த  ஜனவரி 29-ம் தேதி வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது. சென்னை மட்டுமன்றி கோவை உள்ளிட்ட 72 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது. மேலோட்டமாகப் பார்த்தால், வணிக நிறுவனங்கள் மீதான சோதனையாகத் தெரிந்தாலும், தி.மு.க-வுக்கு ஒரு வகையில் செக் வைக்கவே இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன என்கிறார்கள்.’’
‘‘ஓ…!’’

 

‘‘கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவர், மேற்கண்ட நிறுவனங்கள் சிலவற்றில் முதலீடு செய்துள்ளார். ரெய்டு நடந்த நிறுவனங்களில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள், ஐந்தாண்டு களுக்கு முன்பு, மஞ்சள் நோட்டீஸ் கொடுத்தவை யாம். ஆனால், சமீபகாலங்களில் பலகோடி ரூபாய் முதலீடு செய்து, பெரும் வருவாய் ஈட்டிவந்தாலும், வருமானவரியை முறையாகச் செலுத்தவில்லையாம். குறிப்பாக, பிரபல நிறுவனம் ஒன்றின் அசுர வளர்ச்சிக்குப் பின்னால் தி.மு.க-வின் முக்கியக் குடும்பத்து வி.ஐ.பி ஒருவர் இருக்கிறாராம். தென் மாவட்டங்களில் கோலோச்சும் வகையில் காய்களை நகர்த்திவரும் அந்த வி.ஐ.பி-யின் முதலீட்டை மூலதனமாக வைத்துத்தான் இந்த நிறுவனம் இத்தனை வளர்ச்சி அடைந்துள்ளது என்கிற விவரங்கள் வருமானவரித் துறையினரின் செவிகளில் விழுந்துள்ளன. இந்த விஷயத்தை மோப்பம் பிடித்த பி.ஜே.பி மேலிடத்தரப்பு, சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்தது. இந்த சமயம் பார்த்து, மத்திய உளவுத்துறையான ஐ.பி நிறுவனம் ரிப்போர்ட் ஒன்றும் வந்து சேரவே, உடனடி ரெய்டுகளுக்கு உத்தரவு பறந்ததாம்!’’
‘‘அப்படி என்ன இருக்கிறது அந்த ரிப்போர்ட்டில்?’’
‘‘அ.தி.மு.க-வின் ஒவ்வொரு மூவ்மென்ட் பற்றியும், உளவுத்துறையான ஐ.பி அனுப்பிய ரிப்போர்ட்டை வைத்துதான் அந்தக் கட்சியின் அமைச்சர்கள் தொடங்கி அனைவருக்கும் ஆட்டம் காட்டிவருகிறது டெல்லி.  அந்த வகையில், லேட்டஸ்ட்டாக வந்த ஒரு ரிப்போர்ட்டில், தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது, டெல்லியைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்துவிட்டது. ஏற்கெனவே பல வகைகளிலும் தி.மு.க-வைத் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பி.ஜே.பி தரப்பில் முயற்சி செய்தார்கள். ஆனால், அது கனிந்துவருவதாகத் தெரியாததால்தான், அ.தி.மு.க-வுக்கு அழுத்தம் கொடுத்து, கூட்டணிக்குள் கொண்டுவரும் வேலைகள் தொடர்கின்றன. அதேசமயம் தி.மு.க-வை வீக் செய்வதற்கான காரணமும் கிடைத்துவிட்டதால், குறி வைத்துவிட்டனர்!’’
‘‘ஓ… கதை அப்படிப் போகிறதா?’’

‘‘குறிப்பாக, வருமானவரித் துறை ரெய்டு நடத்திய இரண்டு நிறுவனங்கள், தி.மு.க தரப்புக்கு நெருக்கமானவை. இவற்றின் கீழ் கிட்டத்தட்ட 17 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த எட்டு மாதங்களில் மட்டும், இந்த இரண்டு நிறுவனங்களிலும் 1,360 கோடி ரூபாய்க்குப் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை வருமானவரித் துறை மோப்பம் பிடித்துள்ளது. இதில் ஒரு கட்டுமான நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பிலுள்ள பாலா என்பவர், தி.மு.க-வின் முக்கிய வாரிசு ஒருவருக்கு நெருக்கமானவர். இந்த நிறுவனத்தின் சார்பில், சென்னையில் முக்கியமான சில கட்டடங்களையும், வில்லங்கத்தில் இருந்த சில இடங்களையும் விலைக்கு வாங்கியுள்ளனர். அதேபோல மற்றொரு நிறுவனத்தில் தி.மு.க-வின் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகனின் மகன் கார்த்திக் பங்குதாரராக இருக்கிறார். இந்த கார்த்திக், தி.மு.க-வின் ஐ.டி விங்க்கில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். இவர், ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கும் நெருக்கமானவர். இப்போது புரிகிறதா?’’
‘‘ஓரளவுக்கு!’’
‘‘சபரீசன் மூலம் தி.மு.க-வின் பணம், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என்று வருமானவரித் துறை சந்தேகிக்கிறது. இந்த நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனை குறித்த ஆவணங்களை எடுத்துச்சென்றிருக்கிறது வருமானவரித் துறை. அதை வைத்து தி.மு.க-வுக்குக் கடுமையான நெருக்கடி தரப்படலாம்!’’

‘‘பயங்கர பிளான்தான்.’’
‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க பெரும் சரிவைச் சந்திக்கக் காரணம், 2ஜி விவகாரம். தற்போது இந்த வழக்கிலிருந்து கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப் பட்டுவிட்டனர். ஆனாலும், வழக்கு மேல்முறையீட்டில் இருக்கிறது. தற்போது, இந்த ரெய்டு மூலமாகக் கிடைத்திருக்கும் விவரங்களை வைத்து தி.மு.க-வின் பணபலத்தைப் பாரீர் என்று பரப்புரை நடத்தும் திட்டத்தில் பி.ஜே.பி இருக்கிறது. கூடவே, ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா மர்மமரண விவகாரத்தையும் விடப்போவதில் லையாம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சாதிக் பாட்ஷாவின் மனைவியை ஏதாவது ஒரு தொகுதியில் நிற்கவைத்து தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கும் ஏற்பாடுகளும் நடக்கின்றன! அது நீதி கேட்கும் வகையிலான நெருக்கடியாக இருக்குமாம். அநேகமாக, 2 ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட ஆ.ராசா அல்லது கனிமொழி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில்கூட அவர் நிறுத்தப்படலாம் என்கிறார்கள்.’’
‘‘அது சரி, பி.ஜே.பி-க்குத்தான் இதுவரை தோள்கொடுக்க எந்தக் கட்சியும் வரவில்லை என்கிறார்களே!’’
‘’அது உண்மையில்லை. ‘மதுரையில் மல்லுக்கட்டி நின்ற அ.தி.மு.க பெருந்தலைகள் அடுத்த சில நாள்களில் மனம் மாறியுள்ளனர். பி.ஜே.பி தரப்பில் அவர்களிடம் பேசியவர்கள், சில ‘அஸ்திர’ங்களைக் காட்டியதும் பணிந்துவிட்டனராம். ஆனால், பாதிக்குப் பாதித் தொகுதிகளை வாங்கிவிடலாம் என்று நினைத்த பி.ஜே.பி-க்கு, ஒற்றை இலக்கத் தொகுதிகளை மட்டுமே வழங்கும் முடிவில் தெளிவாக இருக்கிறதாம் அ.தி.மு.க!’’
‘‘அம்மாவின் ஆசியுடன்…!’’
‘‘அதேதான்’’ என்று சிரித்த கழுகார்,
‘‘ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பதினோரு பேரின் வழக்கும், அ.தி.மு.க சட்டவிதிகளை மாற்றியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் உள்ளன. இவை, இந்த மாதத்தில் விசாரணைக்கு வரவுள்ளன. இதில் எந்தச் சிக்கலும் வந்துவிடக் கூடாது என ஆளும் அ.தி.மு.க தரப்பு நினைக்கிறது. குறிப்பாக, கட்சி சட்டவிதிகள் வழக்கில் கே.சி.பழனிச்சாமிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தால், தேர்தல் படிவத்தில் கையெழுத்துப்போடும் வாய்ப்பே இ.பி.எஸ்., ஒ.பி.எஸ் இருவருக்கும் பறிபோய்விடும். இந்த விஷயத்தை நாசூக்காக பி.ஜே.பி தரப்பிலிருந்து சொல்லியுள்ளார்கள்.’’

‘‘நீர் சொன்ன அஸ்திரத்தில் இதுவும் ஒன்றோ..!’’
‘‘ஆமாம். ஆகக்கூடி, கூட்டணி அறிவிப்பு விரைவில் வந்துவிடும். பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூரிலும், 19-ம் தேதி கன்னியாகுமரியிலும் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார் மோடி. கூட்டணி முடிவாகாமல் இந்தக் கூட்டத்தில் எப்படிப் பேசுவது என்ற குழப்பம், பி.ஜே.பி தரப்புக்கு இருந்தது. இப்போது திருப்பூர் கூட்டத்தில் வைத்தே கூட்டணி பற்றி மோடி அறிவிக்கும் வாய்ப்பிருக்கிறது!’’
‘‘தேர்தல் ஜுரம் ஆரம்பித்துவிட்டது போலிருக்கிறதே!’’
‘‘தேர்தலுக்கு முன்னதாக, பலகட்ட ஏற்பாடுகளை அ.தி.மு.க தரப்பு செய்துவருகிறது. அதில் ஒன்றாக இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையில் இருக்கும் கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் வந்துவிடுமாம். மாவட்டவாரியாக அ.தி.மு.க-வினர் பட்டியல் தயாராகியுள்ளதாம். விரைவில் அறிவிப்பு வந்துவிடும்!’’ என்கிறார்கள்.
‘‘திருச்சியில் வைகோ நிற்கப்போவதாக ஊரே பேசிக்கொண்டிருக்கிறதே!’’

‘‘வைகோ அதைத்தான் விரும்புகிறாராம். கடந்த சில மாதங்களாக நிறையக் கூட்டங்கள், கல்லூரி விழாக்கள் என்று திருச்சியைச் சுற்றிச் சுற்றிப் பங்கேற்று வருகிறார். ஆனால், தி.மு.க தலைமை அந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்குமா என்பது சந்தேகம்தான். குறிப்பாக, மாவட்டச் செயலாளரான நேரு உள்பட பலரும் தங்களின் ஆட்களுக்காகத் தொகுதியைக் குறி வைத்துள்ளனராம். அதனால், ‘ராஜ்யசபா எம்.பி ஆக்கிவிடுகிறோம்’ என்று வைகோவிடம் சொல்கிறார் களாம் தி.மு.க தரப்பில். ஆனால், அவர் என்ன செய்யப்போகிறார் என்பது வேட்பாளர் பட்டியல் வெளியாகும்வரை சஸ்பென்ஸ்’’ என்று சொல்லி மறுபடியும் சிரித்த கழுகார், சிறகுகளை விரித்தார்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: