உடனடி லோன் உஷாரா இருங்க

அவசரத்துக்கு பணம் தேவை. அதுவும் உடனடியாக வேண்டும். என்ன செய்வது என்று கையை பிசைபவர்கள்கள், குறைந்த ஆவணங்களை வைத்து உடனடியாக வழங்கப்படும் கடன்களை

தயக்கமின்றி வாங்கி விடுகிறார்கள்.  இதில் பல சிக்கல்கள் உண்டு. எனவே உஷாராக இருக்கவேண்டும். தனிநபர் கடன்: உடனடி பணத்தேவையை, அது லட்சங்களில் இருந்தாலும் பூர்த்தி செய்வது தனிநபர் கடன்கள். குறுகிய கால அளவில் திருப்பி செலுத்தக்கூடிய கடன் இது. ஆனாலும், இந்த கடன்களை வழங்குபவர்களுக்கு ரிஸ்க்  அதிகம். அதானல்தான் தனிநபர் கடன் எனப்படும் பர்சனல் லோன்களுக்கு 14 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும். கந்து வட்டி அளவுக்கு இருக்காது என்பதுதான் ஒரு நிம்மதி. பிரிட்ஜ் லோன்: வீட்டு லோன், வாகன கடன் என சிலர் வாங்கி குவித்திருப்பார்கள். திடீரென பணத்தேவை வந்து விட்டால் அந்த மாத இஎம்ஐ கட்டக்கூட காசு இருக்காது. காரணம் சம்பளத்தில் பாதிக்கும் மேல் இஎம்ஐ  முழுங்கிவிடும். இதுபோன்ற மாதாந்திர இஎம்ஐ கட்ட பிரிட்ஜ் லோன் மூலம் வங்கிகள் கை கொடுக்கின்றன. இவற்றுக்கு 12 முதல் 18 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது.

 கிரெடிட் கார்டு கடன்கள்:அவசரத்துக்கு பணம் தேவை. அதுவும் உடனடியாக வேண்டும். என்ன செய்வது என்று கையை பிசைபவர்களுக்கு கை கொடுக்கிறது கிரெடிட் கார்டு. இந்த கடன்களுக்கு ஆவணங்கள் கூட தேவையில் ைல என்பது கூடுதல் சிறப்பு அம்சம். எனவே கடன் கிடைப்பது உறுதி. கடன் தொகை இஎம்ஐ ஆக மாறிவிடும். ஆனால், இதன் மூலம் கடன் வாங்கியவர்கள் முறையாக திருப்பி செலுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் பாடு படு திண்டாட்டம் ஆகிவிடும். கிரெடிட் கார்டுகளுக்கு எதிரான  வழங்கப்படும் கடன்களுக்கு மாதம் 1.17 சதவீதம் முதல் 1.25 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. ஒரு தவணை விட்டுப்போய்விட்டால் கூட அபராதம் மிக அதிகமாக இருக்கும்.

 அவசர தேவைக்கு யார் பணம் கொடுத்தாலும் வாங்கிவிடலாம் என்று தோன்றும். ஆனால் நிபந்தனைகள் தெரியாமல் மாட்டிக்கொண்டு விடக்கூடாது. எல்லாவற்றையும் படித்துப்பார்ப்பது சாத்தியமே இல்லைதான். ஆனால், வட்டி,  தவணை செலுத்த தவறினால் விதிக்கப்படும் அபராதம், அடுத்த கட்ட நடவடிக்கைகள் என இவற்றையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். திருப்பி செலுத்த தவறிவிட்டால் கிரெடிட் ஸ்ேகாரில் கைவைத்து விடுவார்கள். ஜென்மத்துக்கு கடன் வாங்கவே முடியாது. வழக்கமாக கிரெடிட் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால்தான் கண்ணை மூடிக்கொண்டு கடன் தருவார்கள்  இதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்கின்றனர்

%d bloggers like this: