உடலுறவுக்கு முன் இந்த 10 உணவுகளையும் சாப்பிட கூடாது! மீறினால் உறவில் சிக்கல் தான்!

பீன்ஸ்

உங்கள் இணையுடன் இணையும் போது பீன்ஸ் சாப்பிடுவதை முழுவதுமாக தவிர்த்து விடுங்கள். ஏனெனில், தாம்பத்தியத்திற்கு முன் பீன்ஸ் சாப்பிட்டால் வயிற்றில் வலியை ஏற்படுத்தலாம். அல்லது அதிகப்படியான வாயுக்களை வயிற்று பகுதியில் உருவாக்கும். இதனால் உறவில் இடையூறு ஏற்படும்.

உப்பு

உடலுறவில் இணைவதற்கு முன்னர் ஒரு போதும் உப்பு அதிகம் சேர்த்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்.

காரணம், இவை வயிற்றில் உப்பசத்தை உண்டாக்கி தாம்பத்தியத்தின் போது இடையூறு தரும். இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் அந்த நேரத்தில் திருப்தியை தராது.

சோளம்

விளையாட்டு தனமாக கூட சோளத்தை தாம்பத்தியத்திற்கு முன் சாப்பிட்டாதீர்கள். இது பாலுணர்வை குறைக்கும் தன்மை கொண்ட உணவு பொருளாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன், கார்ன் பிளெக்ஸ் போன்ற உணவுகளையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

வெங்காயம்

உணவில் அதிகம் வெங்காயம் சேர்த்திருந்தால் அதை உறவில் ஈடுபடுவதற்கு முன்னர் தவிர்த்து விடுவது நல்லது. இவற்றை சாப்பிட்ட பிறகு உறவில் ஈடுபட்டால் உடலில் இருந்து ஒரு வித துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆதலால் இவை மிக பெரிய இடையூறை உங்களுக்கு ஏற்படுத்தும்.

அதிமதுரம்

எப்போதுமே உடலுறவுக்கு முன் அதிமதுரத்தை தேனிலோ அல்லது பாலிலோ கலந்து சாப்பிடாதீர்கள். காரணம் இவை ஆண்களின் முக்கிய ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோனின் அளவை குறைத்து விடும். எனவே, ஆண்களால் சிறப்பான முறையில் உறவில் ஈடுபட இயலாது.

காபி

தாம்பத்தியத்திற்கு முன் காபி குடித்தால் பலவித பாதிப்புகள் உடலில் உண்டாகும். குறிப்பாக இதனால் கார்டிசோல் ஹார்மோன் மாற்றம் பெற்று மன அழுத்தத்தை உண்டாக்கும்.

கூடவே ஹார்மோனில் சமநிலை மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆதலால், உடலுறவிற்கு முன் ஒரு போதும் காபி குடிக்காதீர்கள்.

புதினா

காதலிக்கு முத்தம் கொடுக்கும்போது மிகவும் வாசனையாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் புதினா அல்லது புதினா பிளேவர் சுவிங்க் கம்மை சாப்பிடுவோம்.

இதுவும் தாம்பத்திய வாழ்வில் பிரச்சினையை உண்டாக்குமாம். உறவில் உள்ள ஆர்வத்தை புதினாவின் உள்ள மென்தால் மூல பொருள் குறைத்து விடுமாம்.

காலி பிளவர்

உறவின் போது வாயு வெளிப்பட்டால் அது மிகவும் சங்கடமான பாதிப்பை நமக்கு உண்டாகி விடும். குறிப்பாக காலி பிளவர், முட்டைகோஸ், ப்ரோக்கோலி போன்ற உணவுகள் இதில் அடங்கும்.

இவை அதிக படியான வாயு பிரச்சினையை உடலுறவின் போது உண்டாக்கி விடுமாம். எனவே இதை தவிர்த்து விடுங்கள்.

சீஸ்

பெரும்பாலும் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகள் ஹார்மோன் சமநிலையை பாதிக்க கூடும். கட்டாயம் உறவில் ஈடுபடுவதற்கு முன் இந்த வகை உணவுகளை சாப்பிடாதீர்கள். மீறி சாப்பிட்டால் தாம்பத்தியத்தில் திருப்தி இருக்காது.

சோயா பால்

சோயா பாலில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் இவற்றை சாப்பிடுவதால் ஆணின் பாலுணர்வு குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

காரணம் இதிலுள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் தான். இவை ஆண்களின் உடலில் ஹோர்மோன் மாற்றத்தை பெரிய அளவில் உண்டாக்கி விடும்.

மேற்சொன்ன உணவுகளை உறவில் இணையும் போது தவிர்த்து வந்தால் சிறப்பான தாம்பத்திய உணர்வை நீங்கள் பெறுவீர்கள் நண்பர்கள்!

%d bloggers like this: