என்ன செய்தால் குடற்புண் சரியாகும்…..

மனிதர்கள் ஒவ்வொருவரும்  தனித்தன்மை கொண்டவர்களாய் இருக்கிறார்கள். அவர்களின் அறிவுத்திறன் ,வாழ்க்கை முறை ,சமூகப் பங்கீடு ,முரண்பாடுகள் ,உணவு அருந்தும் பாங்கு ,இவை அனைத்தும் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டுக் கொண்டுதான் இருக்கிறது .அப்படி இருப்பவர்களில் பெரும்பலான ஆண்கள் மற்றும் பெண்கள்

குடற்புண்ணால் பாதிக்கப் படுகின்றனர் . அப்படி யாருக்கெல்லாம் குடற்புண் வரலாம் என்று பார்க்கலாம் . குடற்புண்ணால் கடுமையாக பாதிக்கப்பட்ட பெற்றோர் களின் சந்ததிகளுக்கும் குடற்புண் வரலாம். தொழில் சார்ந்த நிலையில் அடிக்கடி வெளியூர் பிரயாணம் மேற்கொள்பவர்கள், வெளியூரில் தங்கி வேலை செய்பவர்கள் மூன்று வேளையும் ஓட்டலில் சாப்பிடுபவர்கள் , அடிக்கடி பட்டினி கிடப்பவர்கள், மூளை சார்ந்த வேலையில் ஈடுபட்டிருப்போர்களுக்குக் கண்டிப்பாகக் குடற்புண் வரலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவர்கள், கோபப்படுபவர் கள், ஏமாற்றம், கவலை மன அழுத்தம் போன்ற காரணிகளுக்கு உட்படுபவர்களுக்கு வயிற்றில் அதிக அளவில் அமிலச்சுரப்பு  உண்டாகி குடற்புண் வரலாம். டீ, காபி, மசாலா உணவுகள், புகையிலை, போதைத்தரும் பானங்கள், ஸ்டீராய்டுகள் கலந்த மருந்துகள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள் வோருக்கும் குடற்புண் வரலாம் மற்றும் உணவினை நேரம் தவறி சாப்பிடுதல், அவசரமாக உணவருந்துதல் இவைகளாலும் குடற்புண் உண்டாகலாம்.  

இப்படி வரக்கூடிய குடற்புண் நோயை எப்படி குணமாக்க முடியும் என்று பார்க்கலாம் .உணவினை ஒரே தடவையில் வயிறுபுடைக்க உண்பதைவிட சிறுசிறு அளவில் அடிக்கடி தேவைக்கேற்ப உண்ணலாம். உணவினை நன்கு, மென்று, ருசித்து, பதட்டமின்றி சாப்பிடுங்கள்.எளிதில் ஜீரணிக்கக்கூடிய பால், முட்டையின் வெள்ளைக்கரு, வெண்ணெய் போன்றவற்றைத் தேவையான அளவு உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். காபி, டீ, கோக், மது, புகை, போதைத் தரும் பானங்கள் கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள். அதிக காரமான  உணவுகளை எண்ணெயில் பொறித்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள் .அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள், முழு தானிய உணவுகளை கண்டிப்பாகத் தவிர்த்துவிடுங்கள்.ஆஸ்பிரின்  போன்ற குடலைப் புண்ணாக்கும் நவீன மருந்துகளை தவிர்த்துவிடுங்கள்.

கொழுப்பு நிறைந்த உணவுகள், இறைச்சிகளை எடுப்பதை தவிர்த்து விடுங்கள் . எண்ணையில் வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை முடிந்து அளவு குறைத்து கொள்வது நல்லது ஆகும் . எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி போன்ற சிட்ரிக்  அதிகம் உள்ள உணவுகளை கொஞ்சம் குறைத்து கொள்ளலாம் .மிளகாய், ஊறுகாய் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளுங்கள் .சிலருக்கு உணவை விட  டீ, காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பார்கள் அவர்கள் ஸ்ட்ராங்காகக் குடிப்பதை விட்டு விட்டால் ரொம்ப நல்லது .இந்த மாதிரியான சில பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தால் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம் .இது மாதிரியான மேலும் சில மருத்துவக் குறிப்புகளுக்கு கை மருத்துவம் புத்தகம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

%d bloggers like this: