Advertisements

கருவளையங்கள் – இளம்பெண்களைத் தாக்கும் இன்னொரு பிரச்னை

ண்களுக்கடியில் கருவளையங்கள் இருப்பவர் களை இப்போதெல்லாம் அதிகம் எதிர்கொள்கிறோம். தூக்கமில்லாதவர்களுக்கும் அதிக நேரம் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோருக்கும் மட்டுமன்றி, எல்லோரிடமும் இந்தப் பிரச்னை சகஜமாகி வருகிறது. கருவளையங்களுக்கான காரணங்கள், தீர்வுகள், லேட்டஸ்ட் சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

‘பெரி ஆர்பிட்டல் ஹைப்பர் பிக்மென்ட்டேஷன்’ – கருவளையங்களை மருத்துவ மொழியில் இப்படித்தான் சொல்கிறோம். உலகளவில் கருவளையங்களால் பாதிக்கப்பட்டிருப்போர் 30.76 சதவிகிதம். 16 முதல் 22 வயதுப் பெண்களிடம் இந்தப் பிரச்னை அதிகமிருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

காரணங்கள்

கருவளையங்களுக்கான காரணங்களை அகம் சார்ந்தவை, புறம் சார்ந்தவை என இரண்டாகப் பிரிக்கலாம். அதற்கேற்பவே சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.

* கண்களைச் சுற்றியுள்ள சருமமானது மெலிதாக இருக்கும்போது சருமத்தின் அடியிலுள்ள ரத்த நாளங்கள் வெளியே பளிச்சென்று தெரியும். அது பார்ப்பதற்குக் கருவளையம் போன்றே காட்சியளிக்கும்.

* கண்களின் அமைப்பு காரணமாகவும் சிலருக்குக் கருவளையங்கள் இருப்பது போன்று தெரியலாம். முதுமையின் காரணமாக சருமம் மெலிவதால், கண்களுக்கடியில் நிழல்போன்று தெரியும்.

* ‘பெரி ஆர்பிட்டல் எடீமா’ என்கிற பிரச்னையில் கண்களைச் சுற்றி நீர் கோத்திருப்பது, ‘போஸ்ட் இன்ஃப்ளமேட்டரி ஹைப்பர் பிக்மென்ட்டேஷன்’ என்கிற பிரச்னையின் காரணமாகக் கண்களைச் சுற்றி அழற்சியோ, அலர்ஜியோ    ஏற்பட்டிருப்பது  போன்றவையும் கருவளையங்களுக்குக் காரணமாகலாம்.

* `க்ளாகோமா’ என்கிற கண் அழுத்தப் பிரச்னைக்கு உபயோகிக்கிற மருந்துகளும் கண்களைச் சுற்றி கருமையை ஏற்படுத்தலாம்.

* ‘மெலாஸ்மா’ என்பது சருமத்தில் ஏற்படுகிற மங்கு பிரச்னை. இது சருமத்தின் மற்ற பகுதிகளை பாதிப்பது போலவே கண்களுக்கடியிலும் கருமையை உருவாக்கலாம்.

 

* ‘லைகென் பிளானஸ்’ என்கிற ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டரும் காரணமாகலாம். ரத்தத்தில் இன்சுலின் சுரப்பு அதிகமாவதால் ஏற்படுகிற ‘அகான்தோசிஸ் நைக்ரிகன்ஸ்’ என்ற பிரச்னையும் காரணமாகலாம்.

* உடலால் உபயோகப்படுத்தப்படாத உபரி இன்சுலின், சருமத்தைத் தூண்டி, அதன் அடர்த்தியை அதிகரிக்கும். அதனாலும் கருவளையங்கள் தோன்றலாம். நீரிழிவு பாதித்தவர்களுக்கு இது சகஜம்.

* அதிக நேரம் டி.வி பார்ப்பது, கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருப்பது, சூரிய வெளிச்சம் படும்படி இருப்பது போன்றவையும் கருவளையங்களை ஏற்படுத்தலாம்.

* ‘ஏடோபிக்’ என அழைக்கப்படுபவர் கள், அதாவது எளிதில் அலர்ஜி தொற்றுக்குள்ளாகிறவர்களுக்கு (காலையில் எழுந்ததும் தொடர்ச்சியாகத் தும்மல் போடுகிறவர்கள், தூசு ஒவ்வாமை உள்ளவர்கள்)  கருவளையங்கள் வரும்.

* போதுமான தூக்கமின்மை, ரத்த ஓட்டத்தைச் சிதைக்கும் ஸ்ட்ரெஸ், மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவையும் காரணங்கள்.

* கண்களுக்கடியில் உள்ள தசைகள் தடிப்பது, முக அமைப்பே மெலிந்து காணப்படுவது, முதுமை, அதன் தொடர்ச்சியாக முகத் தசைகளில் கொழுப்பு குறைவது, கண்களைச் சுற்றி ஹீமோகுளோபின் சேர்வது, கல்லீரல், இதயம், தைராய்டு, சிறுநீரகங்கள், பரம்பரையாகப் பாதிக்கும் ரத்த நோய்கள், வைட்டமின் கே பற்றாக்குறை போன்றவையும் கருவளையங்களை ஏற்படுத்தக்கூடும்.

 

தீர்வுகள்… சிகிச்சைகள்…

* கருவளையத்தின் தன்மை மேலோட்ட மானதா, மீடியமானதா அல்லது ஆழமானதா எனப் பார்க்க வேண்டும். சரும மருத்துவர் இதை டெர்மாஸ்கோப் அல்லது உட்ஸ் லேம்ப் வைத்துப் பார்ப்பார். அதன்பிறகே சிகிச்சையை முடிவு செய்வார்.

* கருமையைப் போக்கும் வெளிப்புறப் பூச்சுகளைப் பயன்படுத்தி ஓரளவுக்கு சரி செய்யலாம். வைட்டமின் சி, கே 1, ட்ரெட்டினாயின் போன்றவை உதவும். லேசர் சிகிச்சையும் பலனளிக்கும்.

* ரெட்டினாய்டு மற்றும் வைட்டமின் ஏ சிகிச்சைகள் பெரிதும் உதவும். இவை கண்களுக்கடியில் உள்ள சருமத்தை ஆரோக்கியமாக மாற்றும். தேவைப்பட்டால் மருத்துவர் ஹைட்ரோகுவினான் கலந்த க்ரீம்களைப் பரிந்துரைப்பார்.

* இன்டென்ஸ் பல்ஸ் லைட் சிகிச்சை, பல்ஸ்டு டை லேசர், ரேடியோ ஃப்ரீக்வன்சி, க்யூ ஸ்விட்ச்டு லேசர், கெமிக்கல் பீலிங், ஃபில்லர்ஸ் போன்றவை இந்தப் பிரச்னைக்கான லேட்டஸ்ட் தீர்வுகள்.

* தினமும் 6 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரையைப் பார்க்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்வது போன்றவை அடிப்படையான, அவசியமான அறிவுரைகள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: